தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பில் குழந்தைகளுக்கான “பழகு மகிழ்வு முகாம்” திண்டுக்கல்லுக்கு அருகில் உள்ள லைஃப் என்னும் தொண்டு நிறுவனக் கட்டிடத்தில் மூன்று நாட்கள் (17, 18, 19.05.2013) நடைபெற்றது. இம்முகாமில் 8 முதல் 16 அகவையிலுள்ள 27 பெண் குழந்தைகள், 25 ஆண் குழந்தைகள் என மொத்தம் 52 பேர் பங்கேற்றனர். இவர்கள் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து (திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, கோவை, பொள்ளாச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர், கன்னியாகுமரி (திருவட்டார்) மாவட்டங்களி லிருந்து) வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முகாமில் பங்கேற்பதற்காக 16ஆம் தேதி மாலையே பெரும்பாலான குழந்தைகள் வந்து சேர்ந்தனர். அவர்களைக்கூட்டி வந்த பெற்றோர்கள் அன்றே அவரவர் வீட்டிற்குத் திரும்பிச் சென்று விட்டனர். தமிழ்நாடு அறிவியல் மன்றப் பொறுப் பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் தோழர்கள். சிவகாமி, இரஞ்சிதா, விஜி, ஜஸ்டின், மணிமாறன், இராமகிருட்டிணன், சுப்ரமணியம் ஆகியோர் குழந்தைகள் பழகு முகாமை வழி நடத்தினர்.

முதல்நாளின் முதல் நிகழ்வாக குழந்தைகளின் வருகைப் பதிவு எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் சிவகாமி நெறியாளராக வகுப்புகளைத் தொடக்கிவைத்தார். அதன்பின் பயிற்றுநர்கள் தங்களைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்துகொண்டனர். கற்பிக்கும் வசதிக்காக 8 முதல் 11 அகவையுள்ள குழந்தைகள் ஒரு குழுவாகவும் 12 முதல் 16 அகவையுள்ள குழந்தைகள் மற்றொரு குழுவாகவும் பிரிக்கப்பட்ட பிறகு குழந்தைகள் தங்களை அறிமுகம் செய்து கொள்வதை தோழர்கள் சிவகாமி, நீலாவதி, மணிமாறன் ஒருங்கிணைத்தனர்.

ஆரம்பத்தில் மற்றவர்களோடு பேசத் தயங்கிய குழந்தைகள் பின்னர் நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டனர். தேனீர் இடைவேளைக்குப் பிறகு “உரையாடல் திறன்” குறித்த வகுப்பை செ.நீலாவதி அவர்கள் எடுத்தார்கள். சிரித்த முகத்துடனும் அன் பாகவும் அவர் பாடம் நடத்தியது குழந்தைகளை மிகவும் கவர்ந்தது. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு “மந்திரமா? தந்திரமா?” எனும் தலைப்பில் தோழர் பெரம்பலுர் தாமோதரன், சாமியார்கள் மற்றும் மந்திரவாதிகளால் மக்கள் ஏமாற்றப்படு வதையும், அவர்கள் செய்வது அனைத்தும் மந்திரத் தினால் அல்ல தந்திரத்தினால்தான் என்று விளக்கி னார். மாணவர்களின் உற்சாக பதிலும் கேள்வி கேட்கும் விதமும் அனைவரையும் திக்குமுக்காட வைத்தது.

பொள்ளாச்சி நசன் மற்றும் அவரின் திண்டுக்கல் மருத்துவ நண்பர் காகிதத்தில் பல வகையான உருவங்கள் செய்வது எப்படி என்று செய்துகாட்டியது பெற்றோரை நினைத்து அழுத குழந்தையையும் ஈர்த்தது. நசன் அவர்களின் அறி வுறுத்தலின் பேரில் கதை, கவிதை, ஓவியம் வரையும் குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்தோம். குழந்தைகள் அனைவரும் ஆர்வத்துடன் ஓவியம், கதை மற்றும் கவிதைகளை தனித்தனியே ஒரு வெள்ளைத்தாளில் இரவு உணவிற்குப் பின்பும் எழுதி வரைந்தனர். அரசியல், குடும்பம், சினிமா எனும் தலைப்பில் மாணவர்கள் நாடகம் நடத்திக்காட்டியதில் புராணத்தின் கதாபாத்திரத்தை வைத்து தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் “சோட்டா பீம்” என்ற மூடத்தனமான நாடகத்தை நாம் பார்க்கக்கூடாது என்றும் அரசியல்வாதிகளின் பொய் வாக்குறுதிகளை நம்பக்கூடாது மற்றும் சினிமாவை இரசிக்கலாம், ஆனால் நடிகர்களுக்காக இரசிகர்களாக இருந்து நாம் சண்டையிடக்கூடாது என்ற கருத்தை முன் வைத்தனர்.

இரண்டாம் நாள் (மே 18) “அருளகம்” என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் தோழர் பாரதி தாசன் மற்றும் அவருடன் வந்திருந்த காடுகளை ஆய்வு செய்யும் மூவர் இணைந்து இரண்டு ஊர்தி களில் குழந்தைகளை சிறுமலைக்கு அழைத்துச் சென்றனர். பயிற்றுநர்களும் உடன் இருந்தனர். இயற்கையை நாம் எவ்வாறு புரிந்துகொண்டு உயிரி னங்களை நாம் ஏன் எதற்காகப் பாதுகாக்க வேண்டும் என்ற கலந்துரையாடலும் நடை பெற்றது. மதிய உணவிற்காகப் பயிலரங்கு வந்தனர். ஊர்தியில் சிறுமலைக்குச் செல்லும்போதும் சென்றுவிட்டுத் திரும்பும்போதும் குழந்தைகள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, மாணவர்களோடு உரையாடினார்.

அதனைத் தொடர்ந்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் மணிமேகலை “பால் மற்றும் பாலினப் பாகுபாடு” குறித்து மாணவர் களுக்கு விளையாட்டின் ஊடாக பாடம் நடத்தினார். பாலினப் பாகுபாடு கூடாது என்று முகாமில் பங்கேற்ற அனைத்துக் குழந்தைகளும் ஒருமித்த கருத்தோடு கூறியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மலைக்குச் சென்று வந்த சோர்வு சிறிய குழந்தைகளுக்கு இருக்கும் என்பதால் இப்பாடத்தை அவர்கள் விரும்பினால் கவனிக்க லாம் அல்லது அறைக்குச் சென்று ஓய்வெடுக்கலாம் என்று கூறியும் யாரும் வகுப்பறையை விட்டு அகல வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாலையில் பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டு “புராணம்-கடவுள்-பண்டிகை” என்னும் தலைப் பிலான கலந்தாய்வு தோழர் சிவகாமியின் நெறியாள்கையில் நடை பெற்றது. ஒவ்வொரு தலைப்பிலும் நாடகம் நடத்தினர் குழந்தைகள். மதத்தின் பேரால் கொண்டாடப்படும் மூடப் பண்டிகைகளை நாம் புறக்கணிக்கவேண்டும் என்றும் “பொங்கல் பண்டிகைதான் தமிழர் களுக்கான பண்டிகை” என்றும் வெளிப் படுத்தினர். முதல்நாள் விரைவாக படுக்கைக்குச் சென்ற குழந்தைகள் புதிய நண்பர்கள் கிடைத்த மகிழ்வில் இரண்டாம் நாள் இரவில் நெடுநேரம் விளையாடிக் கொண்டிருந்தனர்.

மூன்றாம் நாள் காலை முகாமில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்துக் குழந்தைகளுடன் கழகத் தலைவர் கொளத்துhர் மணி மற்றும் தமிழ்நாடு அறிவியல் மன்றப் பொறுப்பாளர்கள், உறுப்பினர் களும் ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து “மறுத்தல் திறன்- பாலினப் பாகுபாடு” எனும் தலைப்பில் ஆண்களுக்குத் தோழர் மணிமாறன் நெறியாள்கையில் தனியாக வும் பெண்களுக்கு தோழர் நீலாவதி நெறியாள்கை யில் தனியாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டன. பிறகு “பில்லி சூனியம் என்பது ஏமாற்று வேலை என்பதை விளக்கி தோழர்கள் மடத்துக்குளம் மோகன், திருப்பூர் நகுலன், பிரசாத், மணிகண்டன் ஆகியோர் விளக்கியதின் விளைவாகப் பயிற்சியாளராக வந்தவர்களுக்கும் கடவுள் மற்றும் மூடப் பழக்கங்கள் பற்றிய புரிதலை ஏற்படுத்தியது. மதிய உணவிற்குப் பிறகு நிறைவாக குழந்தைகள் உருவாக்கிய படைப்புத் திறன்களையெல்லாம் திரட்டி “தேன் துளிகள்” என்ற தலைப்பில் நூலாக கழகத் தலைவர் தோழர் கொளத்துhர் மணி வெளியிட்டார். அதனை பேராசிரியர் புரட்சிக் கொடி குழந்தைகளோடு சேர்ந்து பெற்றுக் கொண் டார். பயிற்றுநர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இணைந்து எடுத்த ஒளிப்படத்தை பெரியாரின் பெருந் தொண்டர் தோழர் ஆசிட் தியாகராசன் உற்சாகத்தோடு வழங்கி, “இனிமேல் இதுபோல் நடக்கும் குழந்தைகள் முகாம்களுக்கு என்னை அழையுங்கள் ஓவியத்தில் எனக்குள்ள திறமை களைக் குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்கிறேன்” என்றதும் பெருத்த கரவொலி எழுப்பப்பட்டது.

முகாமில் குழந்தைகளை ஆயத்தப்படுத்துவது குளிக்க வைப்பது கண்காணிப்பது போன்ற சவால்கள் நிறைந்த பணிகளை ஆசிரியர் இரஞ்சிதா அவர்கள் கவனித்துக்கொண்டார். தோழர் ஜவகர் மற்றும் அவர் துணைவியார் ஆசிரியர் ஜாகுலின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பிற்கும், வழிநடத்துதலுக் கும் பெரிதும் உதவிகரமாக இருந்தனர். செம்பட்டியைச் சேர்ந்த தோழர்கள் ஆல்பர்ட், இராசா இருவரும் ஒளிப்படம் எடுக்க மிகுந்த ஒத்துழைப்பு நல்கினர். உணவு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகளில் தோழர் காந்தி மிகவும் உதவினார். தோழர் பெரியார் நம்பி தன்னுடைய தோட்டத்தில் விளைந்த மாம்பழத்தை யும், தோழர்கள் விஜி மற்றும் முருகானந்தம் வாழை மற்றும் பிளம்ஸ் பழங்களை அனைவருக்கும் வழங் கினர். மூன்றுநாள் முகாமின் அனைத்து நிகழ்வு களையும் தோழர் கோகுலக்கண்ணன் படம்பிடித்து ஆவணப்படுத்தினார். இம் முகாமிற்கான இடத் தேர்வு முதல் பல்வேறுபட்ட பணிகளை திண்டுக்கல் இராவணன் பொறுப்பேற்று நடத்திக் கொடுத்தது முகாம் சிறக்க மிகவும் உதவிகரமாக இருந்தது. முகாம் பற்றிய திட்டமிடுதல் செயல் படுத்துதல் போன்றவற்றிற்கு மாநில அமைப்புச் செயலாளர் தோழர் தி. தாமரைக் கண்ணன் அவர்கள் பெரிதும் உதவினார்.

செய்தி: பேராசிரியர் இராமகிருஷ்ணன்