வருகின்ற பிப்ரவரி 26, 2012 அன்று சென்னையில்   நடைபெறவுள்ள  அணு உலை எதிர்ப்பு மாநாட்டிற்கு ஆதரவாகப் பரப்புரைப்பயணம் புதுச்சேரி மாநில அணு சக்திக்கெதிரான மக்கள் இயக்கத்தின் சார்பில் நடைபெற்றது. இவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக பெரியார் திராவிடர் கழகத்தின் புதுவை மாநிலத் தலைவர் தோழர் லோகு. அய்யப்பன் அவர்கள் கடந்த வாரம் நடைபெற்ற ஆலோசணைக் கூட்டதில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி நான்கு நாட்களுக்குப் புதுச்சேரியின் பல பகுதிகளில் மாலை நேரங்களில் பரப்புரைப் பயணம் செய்வதெனத் தீர்மானிக்கப்பட்டபடி கடந்த பதினேழாம் தேதி முதல் இருபதாம் தேதி வரை தினமும் மாலை 4.30 முதல் 9.30 வரை பரப்புரைப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

பயணத்தின் போது அணு உலையின் மூலம் ஏற்படும் ஆபத்துகளை விளக்கும் துண்டறிக்கை மக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் தோழர். முத்துக்கிருஷ்ணன் எழுதிய “கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள்” என்ற நூலும் விற்பனை செய்யப்பட்டது. கருத்துக்களை மக்கள் ஆர்வமுடன் கேட்டதுடன் நூலையும் வாங்கிப் படித்தனர். பரப்புரைப் பயணத்தின் போது பல அமைப்புகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் உரையாற்றினார்கள்.

தோழர் லோகு. அய்யப்பன் பேசுகையில்.....

மின்பற்றாக்குறையுள்ள மாநிலங்களான கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் அணு மின் உலை வைக்காமல், ஏற்கனவே தமிழ் நாட்டிற்குப்  போதிய அளவு நெய்வேலி அனல் மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிற போது பிறகு ஏன் கூடங்குளத்தில் அணு உலை திறக்க தமிழர் விரோதக் காங்கிரசாரும் பாரதிய ஜனதா கட்சியினரும் பார்ப்பன இந்து முன்னணியினரும் முயற்சி செய்கிறார்கள்? நெய்வேலி அனல் மின் நிலையத்திற்காக பதினைந்தாயிரம் ஏக்கர் நிலத்தை இந்திய அரசு அபகரித்தது மட்டுமல்லாது தமிழ் நாட்டு மக்களுக்கே ஒரு செயற்கையான மின்வெட்டை ஏற்படுத்தி தமிழக மக்களாகவே கூடங்குளம் அணு உலையைத் திறந்தால் மின்தட்டுப்பாடு நீங்கும் என என்ன வைக்க முயற்சிசெய்கின்றது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு எதிராகக்  கவனத்தை திசைதிருப்பும் பார்ப்பன பனியா கொள்ளைக் கும்பலுக்கு     ஆதரவாகச் செயல்படும் தினமலம் போன்ற நாழேடுகளையும், என்றுமே தமிழர் விரோதப்போக்கைக் கடைபிடிக்கும் மானங்கெட்ட காங்கிரசுக்காரர்களையும்  அடித்துத் துறத்தாவிட்டால் தமிழர் நலன் என்றுமே காவுகொடுக்கப்படும்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் 2006 ஆம் ஆண்டு கூறிய தீர்ப்பை அமுல்படுத்துவதற்கு வக்கற்ற வெட்டி நாராயணசாமி போன்றவர்கள், முல்லைப்பெரியாறு அணையை உடைப்பேன் என்று சண்டித்தனம் செய்கின்ற கேரளாவின் காங்கிரசு முதலமைச்சர் உம்மன் சாண்டியைக் கண்டிக்க வக்கற்ற இந்த கழிசடைக் காங்கிரசார் அணு உலையின் பாதிப்புகளை உணர்ந்த லட்சக்கணக்கான மக்கள் கூடங்குளத்தில்  அணு உலையைத் திறக்கக்கூடாது என்று தோழர்  சுப.உதயகுமார் அவர்களின் தலைமையில் போராட்டம் நடத்துகையில் அம்மக்களின் மீதும் சுப.உதயகுமார் (158 வழக்குகள்) மீதும் வழக்குப் போட்டிருப்பது இவர்களின் யோக்கியதையைக் காட்டுகிறது. 

இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடியது காந்தியின் காங்கிரசுக் கட்சி. ஆனால் மக்களின் நலனுக்காகப் போராடுபவர்களைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்யச்சொல்வது இத்தாலி சோனியா காங்கிரசு. நாராயணசாமியே, அணு உலை பாதுகாப்பானது என்றால் உங்கள் கட்சி ஆளுகின்ற கேரளாவில் ஒரு அணு உலை வைக்க அடிக்கல் நாட்டிவிட்டு உயிரோடு உன்னால் ஊர் வந்து சேரமுடியுமா? ஈழத்தில் தமிழர்கள் ஒரு லட்சத்து  எழுபத்தைந்தாயிரம்பேர்  கொல்லப்பட்ட போது, கொத்துக்குண்டுகள், நச்சுக்குண்டுகள் போட்டுக்கொல்லப்பட்டபோது அவர்களைச் சிறுகச்சிறுகச் சாகடித்தபோது மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் முள்வேலி முகாமில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டபோது, ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் சிங்களக் காடையர்களால் மாறிமாறிக் கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டபோது, வாயைத் திறக்காத, கூலிக்கு மாரடிக்கும் அப்துல் கலாம் இன்றைக்கு ராசபக்செவிடம் போய், நீ செஞ்சது தப்பு... தப்பு.... என்று சொல்லப்போராராம்! இந்திய அரசின் கைக்கூலியாய் இருந்து ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படும் போது வாயை மூடிக்கொண்டிருந்த அப்துல் கலாம் இலங்கைக்குப் போய் நற்சான்று வழங்குகின்றார். சில வாரங்களில் ஜெனீவாவில் கூடுகின்ற சர்வேதேச மன்னிப்புச் சபையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா கொண்டுவரவிருக்கின்ற இலங்கைக்கு எதிரான தீர்மானத்திலிருந்து ராசபக்செவைக் காப்பாற்றவே அப்துல் கலாமை வைத்து இந்திய அரசு முயற்சி செய்கின்றது. அணு குண்டு தயாரிக்கவும், தமிழர் வாழ்விற்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதுமான கூடங்குளம் அணு உலையை மட்டுமல்ல எல்லா அணு உலைகளையும் மூடவேண்டும் என்று கூறி சென்னையில் வருகின்ற இருபத்தாறாம் தேதி நடக்க இருக்கும் மாநாட்டிற்குப் புதுச்சேரியின் மக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு, நாராயணசாமியால் புதுச்சேரிக்கு ஏற்பட்டுள்ள ககளங்கத்தைப் போக்கவேண்டும் என்று புதுச்சேரி மாநில அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

பரப்புரை நடைபெற்ற இடங்கள்:

17.02.2012

அண்ணா சிலை, சின்ன மணிக்கூண்டு, அமுத சுரபி (காந்தி வீதி), நாராயணன் கோவில் (காந்தி வீதி), ஆனந்தா விடுதி (அண்ணா சாலை), குமரகுரு பள்ளம், பெரியார் சிலை, சாரம், லெனின் வீதி,

18.02.2012

முதலியார்பேட்டை, முருங்கப்பாக்கம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூர், கரிக்கலாம்பாக்கம்.

19.02.2012

வில்லியனூர் (தேரடித் தெரு), கோட்டைமேடு (வில்லியனூர்), அரியூர், திருவண்டார் கோவில், திருபுவனை, மதகடிப்பட்டு.

20.02.2012

எல்லப் பிள்ளைசாவடி, ரெட்டியார்பாளையம், கம்பன் நகர், மூலக்குளம், முத்திரையார் பாளையம், மேட்டுப் பாளையம், கதிர்காமம்.

பரப்புரையில் பங்கேற்ற அமைப்புகள்:

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், அம்பேத்கர் மக்கள் படை, மீனவர் விடுதலை வேங்கைகள் ,

கிராம பஞ்சாயத்துக் கூட்டமைப்பு, முற்போக்கு ஜனசக்தி, நாம் தமிழர் கட்சி,

செம்படுகை நன்நீரகம், கிராமப்புர மக்களின் அடிப்படை உரிமைகளின் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், செந்தமிழர் இயக்கம், தமிழர் தேசிய இயக்கம்,

பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம், மக்கள் சிவில் உரிமைக் கழகம்,

புதுவைக் குயில் பாசறை, மாணவர் கல்வி உதவி அறக்கட்டளை, கிராமக் கல்விக் குழு, சிங்காரவேலர் முன்னேற்றக் கழகம், தனித் தமிழ் கழகம், தமிழர் களம், புதுவை எழுத்தாளர் கழகம் மற்றும் மாணவர் கூட்டமைப்பு.