தெற்கு சூடான் தனிநாடாக பிரிவது குறித்து வாக்கெடுப்பில் 99 சதவீதம் மக்கள் தெற்கு சூடான் பிரிவினைக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதாக முடிவுகள் கூறுகின்றன. இதை அறிந்த மக்கள் மகிழ்ச்சியும் ஆனந்தமும் அடைந்தனர். அவர்கள் தெருக்களில் கூடி நின்று ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தேர்தல் முடிவு காரணமாக அந்த நாடு தனிநாடாக மாற இருக்கிறது. இதைத் தொடர்ந்து வருகிற ஜூலை மாதம் 9 ஆம் தேதி தெற்கு சூடான் ஆப்பிரிக்காவின் 54 ஆவது நாடாக பிரகடனம் செய்யப்பட இருக்கிறது. 1990 ஆம் ஆண்டு முதல் 33 புதிய நாடுகள் உருவாக்கப்பட்டு உள்ளன. தெற்கு சூடான் தனிநாடாக அறிவிக்கப்படக் கோரி நடந்த போராட்டத்துக்கு தலைமை தாங்கிய சூடான் மக்களின் விடுதலை இயக்கத் தலைவர் சால்வா கீர் தெற்கு சூடானின் புதிய அதிபர் ஆகிறார். இந்த புதிய நாட்டில் 10 நிலங்கள்  இருக்கும்.

யோகா கடவுள் மறுப்புக் கொள்கையால் உருவானது

“ஒரு நோயாளிக்கு மருத்துச் சீட்டு எழுதிக் கொடுப்பதால் மட்டும் டாக்டர் களின் கடமை முடிந்து விடுவதில்லை. நோயாளியின் நோய்க்குக் காரணம் என்ன என்பதை டாக்டர்கள் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

தொற்று அல்லாத நோய்களுக்குப் பெரும்பாலான காரணம் உணவும், மனதும் தான். இது இரண்டும் சரியாக இருந்தால் பெரும்பாலான நோய்கள் மனிதனைத் தாக்காது. பொது மக்களில் பலர் புற மகிழ்ச்சியோடு காணப்படு கின்றனர். ஆனால் அவர்களுக்கு அகமகிழ்ச்சி இருப்பதில்லை. மனதில் மகிழ்ச்சி இல்லாததால் உணவில் மாற்றம் ஏற்படுகிறது. காலப் போக்கில் இது பல்வேறு நோய்களுக்கு வழி வகுக்கிறது. யோகா என்பது முதலில் “கடவுள் மறுப்புக் கொள்கை யிலிருந்து உருவாக்கப்பட்டது”. யோகா மனதைச் செம்மைப்படுத்தும் பயிற்சி யாகும்.”

(ஆரோக்யா சித்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர்கு. சிவராமன் பேசியது)

ஆதாரம் : “தினமணி” 24.1.2011 தகவல்: புலவர் தங்க சங்கர பாண்டியன்