பெரியாரியலுக்கு அடிப்படை ஆவணங்களான குடிஅரசு, புரட்சி, ரிவோல்ட், பகுத்தறிவு இதழ்களைத் தேடித் தேடி தொகுத்து குடி அரசு தொகுப்பு நூல்களாக வெளியிட்டோம். சட்டப் போராட்டம் நடத்தி பெரியாரின் கருத்துக் கருவூலங்களை மக்கள் சொத்தாகவும் மாற்றிவிட்டோம்.

நண்பர்களின் கணினிகள், ஆதரவாளர்களின் அச்சகங்கள், தாள் விற்பனை நிறுவனங்கள் அவர்களிடம் கடன், தோழர்களிடம் கடன் என நமக்கு இருக்கும் சிறிய தொடர்புகளை வைத்து தொடர்ந்து சிறப்பாக வெளியீடுகளைக் கொண்டு வந்தோம். வெளியிடுவதோடு நில்லாமல் 5 ரூபாய் நூல் முதல் 5000 ரூபாய் நூல் தொகுப்பு வரை இலவசமாக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளவும் வசதிகளைச் செய்தோம்.

வெறும் கடவுள் மறுப்பை மட்டுமே பெரியாரின் கொள்கையாகக் காட்டிக்கொண்டிருக்கும் சூழலில் ஜாதி ஒழிப்புக்கான கடவுள் மறுப்பை, பெண் விடுதலைக்கான கடவுள் மறுப்பை பெரியார் காலத்திற்குப் பிறகு மீண்டும் அறிமுகப்படுத்தினோம்.

பெரியார் காலத்துத் திராவிடர் இயக்கத்தைக் கண்முன் காட்டும் விதமாக இரட்டைக்குவளை உடைப்பு தொடங்கி தாழ்த்தப்பட்டோர் தண்ணீர் பிடிக்கும் போராட்டம் வரை பல்வேறு தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களை முன்னெடுத்தோம்.

பெரியார் சிலை உடைப்புக்கு எதிரான எதிர்வினைச் செயல்பாடுகள் பெரியார் காலப் போராட்டங்கள் மீண்டெழுந்ததைக் காட்டின.

ஈழவிடுதலைக்காக ஆர்ப்பாட்டங்கள், கண்டன மாநாடுகள், கூட்டங்கள் என்று மட்டும் நில்லாது இலங்கை தூதரகத்தாக்குதல், இலங்கை வங்கி தாக்குதல், இராணுவ வாகனத் தாக்குதல், இந்து பத்திரிக்கை மீது தாக்குதல் என அவசியமான சரியான போராட்டங்களையும் அயராது நடத்தினோம்.

சொந்த வாகனம், அச்சகம் போன்ற எவ்விதப் பிரச்சாரக் கட்டமைப்புகளும் இல்லாமல் ஆண்டுதோறும் பல மாதங்கள் பிரச்சாரப் பயணங்களை நடத்தி வருகிறோம். தனியார் துறை இடஒதுக்கீட்டுக்காக இரண்டுமுறை முறை சம்பூகன் சமூகநீதிப்பயணம், இரட்டைக்குவளை உடைப்புக்காக மூன்று முறை பிரச்சாரப் பயணம், ஜாதி - தீண்டாமை ஒழிப்புக்காக தொடர்ந்து மூன்று மாதங்களாகப் பிரச்சாரப் பயணம், கல்விஉரிமை - பொதுக்கல்வி கோரி ஒரு மாதம் தொடர்ச்சியாக மாணவர் பயணம் என தொடர்ந்து தமிழ்நாட்டைச் சுற்றிச்சுழன்று வருகிறோம்.

ஆனாலும் இந்த வேகம் போதாது. பிரச்சாரப் பணிகளை முழுவீச்சுடன் முடுக்கிவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பிரச்சாரத்தின் வீச்சினை இன்னும் அதிகமாக்க நமக்கென்று சொந்தமாக

ஒலி - ஒளி வசதி, எல்.இ.டி. ப்ரொஜெக்டர் வசதிகளுடன் கூடிய ஒரு பிரச்சார வாகனம்,

ஒரு ஆஃப்செட் அச்சகம்,

சிறு நூல்களை மொத்தமாக வெளியிடுவதற்கான நிதி,

ஒரு சிற்றிதழை நடத்துவதற்கு ஓராண்டுக்குத் தேவையான நிதி,

ஒரு புத்தகச்சந்தைக்கான பேருந்து,

இணைய தளம், வீடியோ ஸ்டுடியோ,

தற்காலிக தலைமைக் கழக அலுவலகம்,

பிரச்சாரப் பயணங்கள், வெளியீடுகள் மற்றும் விற்பனைப் பணிகளில் ஈடுபடும் தோழர்களுக்கான ஊதியத்துக்கான நிதி

என அனைத்து வகையான பணிகளையும் உள்ளடக்கி பிரச்சாரக் கட்டமைப்பு நிதியாக ஒரு கோடி ரூபாய் திரட்டத் திட்டமிட்டுள்ளோம். எமது பணிகள் தொய்வின்றித் தொடர நிதி கொடுத்து உதவுங்கள்!

கொளத்தூர் தா.செ.மணி

15.08.2011 தலைவர், பெரியார் திராவிடர் கழகம்

குறிப்பு: மாவட்ட கழகப்பொறுப்பாளர்களுக்கு தலைமைக்கழகம் சார்பில் நன்கொடைப் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும். அவை கிடைத்த நாளில் இருந்து ஒரு மாதத்திற்குள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆதரவாளர்கள், நண்பர்களிடம் நிதி திரட்டலை நடத்தி முடித்திட வேண்டும்.

அமைப்பு குறித்த பிரச்சாரத்திற்காகவும், பெரியார் பிரச்சாரப் பணியில் அனைத்துத் தரப்பு மக்களின் பங்கேற்பிற்காகவும் கடைவீதி வசூலை அவசியம் நடத்த வேண்டியுள்ளது. அதற்காக தலைமைக் கழகம் ஒரு நிதி திரட்டும் பயணக்குழுவை அமைக்கிறது. அக்குழு தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் கடைவீதி வசூலை நடத்தும். பெரியார் திராவிடர் கழகம் - ஏன்? எதற்கு? என்ற தலைப்பில் இலட்சக்கணக்கில் துண்டறிக்கைகளை அச்சிட்டு விநியோகித்து கிராமங்களிலும் நிதிதிரட்டலை நடத்தும். நிதி திரட்டும் குழு சுற்றுப்பயணம் செய்ய உள்ள நாட்கள் குறித்த விபரங்களைத் தலைமைக் கழகம் அறிவிக்கும். அந்தத் தேதிகளில் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் குழுவை வழிநடத்திச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வங்கி வழியாக நிதி செலுத்த: தா.செ.மணி, கணக்கு எண் : 555850503, இந்தியன் வங்கி, கொளத்தூர் கிளை, swift code: IDIB 000KO43

நிதி திரட்டும் பணிக்கான துண்டறிக்கைகள், நன்கொடைப் புத்தகங்களை அச்சிட்டு மாவட்டங்களுக்கு விநியோகிப்பது, நிதிக்குழு, நிதிசேகரிப்புப் பயணக்குழு ஆகிய இரு குழுக்களிடமும் ஒரு மாதம் முடிந்த உடன் கணக்குகளையும், மீதமுள்ள நன்கொடைச் சீட்டுக்களையும் திரும்பப் பெறுவது உள்ளிட்ட பணிகளை நிதி திரட்டும் பணி ஒருங்கிணைப்பாளர் மேற்கொள்வர்.

நிதிதிரட்டும் பணி ஒருங்கிணைப்பாளர்கள்: சென்னை தபசி குமரன், ஈரோடு இரத்தினசாமி, தலைமைக்கழகம், பெரியார் திராவிடர் கழகம்.

கழகப் பிரச்சாரக் கட்டமைப்பு நிதி வழங்கியோர்

காவலாண்டியூர், கிளைக்கழகம் ரூ.15,000

விஜயக்குமார், காவலாண்டியூர் ரூ. 5,000

இளவரசன், காவலாண்டியூர் ரூ. 5,000

மாது, கொளத்தூர் ரூ.20,000

சீனிவாசன், சேலம் ரூ.20,000

ஜெகன்னாதன், பூவாளூர் திருச்சி ரூ.20,000

அகிலன், திருப்பூர் ரூ.25,000

அன்புச்செழியன், மேட்டூர் ரூ.25,000

டைகர் பாலன், கொளத்தூர் ரூ.10,000

மருத்துவர் தமிழ்ச்சுடர், திருச்சி ரூ.20,000

வழக்கறிஞர் கிருட்டிணக்குமார், தாராபுரம் ரூ.10,000

பொறியாளர் குமரேசன், பெரியகுளம் ரூ .5,000