ஈழத்தில் - இனப்படுகொலை உச்சகட்டத்தில் நடந்தபோது திடீரென்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதம் இருந்தார். 4 மணி நேரத்தில் உண்ணாவிரத நாடகத்தை முடித்துக் கொண்டார். அந்த உண்ணா விரதம் சிறிலங்கா அரசுடன், ஏற்கனவே பேசிக் கொண்டு நடத்திய நாடகம் என்ற உண்மை இப்போது அம்பலமாகியுள்ளது.இதன் பின்னணி சதியை இலங்கை பாதுகாப்புத் துறை செயலாளரும், ராஜபக்சேயின் சகோதரருமான  கோத்தபாய ராஜபக்சே போட்டு உடைத்துள்ளார். 

இது தொடாபாக “Indian Defence Review” சஞ்சிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கோத்தபாய ராஜபக்சே கூறியிருப்பதாவது:

கடந்த வருடம் ஏப்ரல் 24 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி உடனடிப் போர் நிறுத்தம் வேண்டி சென்னையிலுள்ள அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார். இச்சம்பவம் நடப்பதுற்கு முதல் நாள் மாலை 4 மணிக்கு இந்திய வெளியுறவுச் துறைச் செயலர் சிவசங்கர மேனன் என்னை அவசரமாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். இந்தியத் தூதுக்குழு ஒன்று அவசரமாக கொழும்பு வரவிருப்பதாகத் தெரிவித்தார். 

நான் உடனடியாகவே ஜனாதிபதி ராஜபக்சேயின் அலுவலகத்திற்குச் சென்று அவரின் அனுமதியைப் பெற்று 5 நிமிடத்திற்குள்ளாகவே மீண்டும் மேனனைத் தொடர்பு கொண்டேன். கருணாநிதி உண்ணாவிரதத்தைத் தொடங்கி ஆறுமணி நேரத்திற்குள் நாம் யுத்த தவிர்ப்பு பிரதேசத்திற்குள் ஷெல் தாக்குதல்கள் உள்பட சகல தாக்குதல்களையும் நிறுத்துவதாக அறிக்கையை வெளியிட்டோம். இந்த அறிக்கையைத் தொடர்ந்து கருணாநிதியின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்து எழுந்திருக்கக்கூடிய பெரிய ஆபத்தை நாம் தவிர்த்துக் கொண்டோம். 

இந்தியா - இலங்கை அதிகாரிகள் குழுவாக மேற்கொண்ட ராஜதந்திர நடவடிக்கையின் ஒரு சிறந்த உதாரணமாக இது உள்ளது என்று கூறியுள்ளார்.