நித்தியா னந்தா! நித்தியா னந்தா!

நேரில் மாட்டிக் கொண்டாயடா!

பக்தி வேடம் எல்லாம் கலைந்து

பலே கில்லாடி ஆனாயடா!

ஊரை ஏய்க்கக் காவி உடையா?

உதையில் இருந்து தப்பினாயடா!

நேரில் வந்து சிக்கி யிருந்தால்

நெம்பிச் சுளுக்கெடுத் திருப்பாரடா!

அடித்தே துவைத்தார்; அட,உன் படத்தைச்

செருப்பால் அர்ச்சனை செய்தாரடா!

உடைத்தே போட்டார் ஆசிர மங்களை

ஓடித் தீவைத்து எரித்தாரடா!

பிரம்மச் சரியம் பேசிக் கொண்டே

தினம்உனக் கொருபெண் கேட்குதோடா?

அரசு, சட்டம் எல்லாம் நீங்கள்

ஆட்டும் படியெலாம் ஆடுதேடா!

உன்னைப் போல்பல பெண்ணைத் தொட்டான்

சங்கரன் ஒண்ணும் ஆகலடா!

பண்ணினா னேஒரு கொலையும் அந்தப்

பார்ப்பான் என்னமா சுத்தறாண்டா?

பிரே மானந்தா, கல்கி, சுகதேவ்,

மயிகள் மயக்கம் தெரியலடா!

பெரிய மனுஷன்கள் பலபேர் உங்கள்

பின்னால் இருப்பது தெரியலடா!

தியானம், யோகா, பஜன்கள் எல்லாம்

தின்று கொழுப்பவன் தேவையடா!

ஞானம், முக்தி, மோட்சம் எல்லாம்

நரிகளின் மோசடி வார்த்தையடா!

அறியாமை இருளின் பதுங்கு குழியில்

அவதா ரங்கள் வாழுமடா!

திருந்திய மக்கள் தெருவில் இறங்கினால் - உம்போல்

திருட்டுக் கூட்டம் ஓடுமடா!

- தமிழேந்தி