covid 19 400"கொவைட் - 19 " எனும் உயிர்க் கொல்லி நோய் உலக நாடுகளைத்  தன்னிலை இழக்கச் செய்து விட்டது. பொதுவாக மனித இனத்தை அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ளது. இந்நோய்க்கான தடுப்பு மருந்து  எனில், ஆய்வகத்தில் இக்கிருமி தொடர்ந்து உருமாற்றமாகி வருவதால் மருந்தை உருவாக்குவது பெரும் இடர்ப்படாகவே உள்ளது. பொருளியல் எனில் - உலகளாவிய நாடுகளில் - அடித்தட்டு மக்களின் வாழ்வைச் சூறையாடி வருகிறது.

அணுகுண்டுகள்  - இரபேல் போர் விமானங்கள் - படைப் பெருக்கம் என எதற்கும் இந்நோய் இடமளிக்காது. மூன்றாம் உலக நாடுகள் / முதல் உலக நாடுகள் என எதுவும் இல்லை. இந்தியா போன்ற நாடுகளில் அரசியலாளர் / அதிகார வர்க்கத்தினர் / ஆலை அதிபர்கள் / அமைச்சர்கள் எனப் பலரும் இந்நோய்க்குப் பலியாகி வருகின்றனர்.

கிராமப் பொருளாதாரச் சுழற்சி படுமோசமாக வீழ்ச்சியடைந்த நிலையில் - அடுத்து என்ன ?  என்பதே பெரும் கேள்விக்குறியாக  உள்ள நிலையில் – எல்லா நாடுகளின் தலைவர்களும் அல்லாடி  நிற்கின்றனர்.

தமிழகத்தின் அரசியல் / அரசு என்பதும்   மன நோயாளிகளின் கூடரமாக மாறி விட்டது. யாருக்கும் இந்நோய் வரலாம் எனும் நிலையில் - என்னதான் தடுப்பு நடவடிக்கை என்றாலும் - இந்நோய் வரவே வாய்ப்பு உள்ளது எனும் நிலையில் / எளிய மக்களின் எந்த நோய்க்கும் - எந்த மருத்துவ மனையிலும் முறையான மருத்துவ வசதி இல்லை.

குழந்தைகள் நிலையை நினைத்தால் அச்சமாகவே உள்ளது. யாரையும் சந்திக்காமல் - எதனையும். செய்யாது இருக்க இடமில்லை. தன்னளவில் வந்தால் -  40. வயதைக் கடந்தவர்கள் முன் எச்சரிக்கை எனில் - வீட்டில் இருப்பதே பாதுகாப்பானது. உணவுக்கு வழி இல்லை எனில் ஆழ்துயில் மட்டுமே வழி. இந்நோயின் மறுபக்கம் எனில் - சமூக அமைப்பு படுமோசமாகச் சீரழியவே செய்யும்.

குற்றச் செயல்கள் - திருட்டு / வீணான வம்புகள் / உடமை சார்ந்த சிக்கல்கள் / குடும்பச் சிதைவுகள் / கல்வி - வேலைவாய்ப்பு – பணப் பரிமாற்றம் இல்லாத நிலையில் - பாலியல் தொழில் / வன்முறைகள் என சொல்லி மாளாத அளவுக்கு சமூகம் படுமோசமாக சீரழிவில் சிக்கி விடும்.

உலகம் சற்றும் எதிர்பாராத நிலை இது. சிற்றூர் முதல் வட்டத் தலைநகர் / மாவட்டத் தலைநகர்  என பல்லாயிரக்கணக்கான ஆண்கள் / பெண்கள் வேலைவாய்ப்பை மெல்லவே இழந்து நிற்கின்றனர், மென்மேலும் இழந்தும் வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து சொற்ப அளவு பணத்துடன் ஊர் திரும்பியவர்கள் செய்வதறியாது நிற்கும்  நிலை. கடை வீதிகளில் புதிதாக முளைக்கும் சிறு கடைகள் எனில் - மளிகை / காய்கறிகள் தெருவிலேயே சந்தைப்படுத்தும் நிலை.

இன்னொரு சாரார் இப்படி யொரு நோய்வரும் என கனவிலும் நினைக்காத - நிலையில் / கிடைத்ததைக் கைவிட்டு விட்டதை நினைத்து மனம் துடிக்கின்றனர். பொதுவாகவே மனித  வரலாறு முதன் முறையாக இப்படியொரு சிக்கலை எதிர்கொள்கிறது என்பதே முழு உண்மை. இதில் யாருக்கும் விதிவிலக்கு என்பதே இல்லை.