பாலியல் என்பது மனித சமூகத்தின் அன்றாட நடைமுறை வாழ்க்கை சார்ந்தது. பாலினங்களின் சமவிழைவில் செயல்பட வேண்டிய சமூகச் செயல்பாடு பாலியல். எதார்த்தத்தில் பெண் பாலினம் ஒடுக்கப்படுகிறது. அதிலும் மாற்றுப் பாலியல் உயிரிகளின் ஒடுக்குதல் மேலும் ஆழமானது. பெண்மை/ஆண்மை மற்றும் கற்பு எனச் சமூகம் கட்டமைத்துள்ள மதிப்பீடுகள் அடிப்படை யற்றவை; தர்க்கத்திற்கு முரணானவை.

இவ்விதழ் மாற்றுப் பாலியல்புள்ளவர், மாற்றுப் பாலினமுள்ளவர், பாலியல் தொழிலாளிகள் ஆகியோரின் அடிப்படை உரிமைகளை முன்னிறுத்தி உரையாடும் வகையில் அமைந்துள்ளது. சமூகத்தின் மிக மோசமான ஒடுக்குதலுக்கு உட்படும் சிறுபான்மையான அவ்வுயி ரினங்களைச் சமூக மதிப்பீட்டுத் தளத்தில் சமமாகக் கருதும் மதிப்பீட்டை இவ்விதழ் கொண்டாடுகிறது.

இவ்விதழ் உருவாகக் காரணமாக அமைந்த அழைப்பாசிரியர்களுக்கு ‘மாற்றுவெளி’ தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

Pin It