periyar 849'பஞ்சமா பாதகங்கள்' என்னும் ஒரு புத்தகம் தன் ஆசிரியரான திரு. அ. அய்யாமுத்து அவர்களால் நமது பார்வைக்கு அனுப்பப்பட்டதை பார்வையிட்டோம்.

அப்புத்தகத்தில் பஞ்சமா பாதகமெனப்படும் கொலை, களவு, பொய், கள், காமம் என்னும் ஐந்து விஷயங்களும் உலகில் எந்த சந்தர்ப்பங்களில் உண்டாகின்றன? அவை ஏன்? யாரால் உண்டாக்கப்பட்டது? அது உலக வழக்கில் எப்படி நடைபெறுகின்றன? இன்ன இன்ன விதத்தில் இன்ன இன்ன காரணங்களால் நடைபெரும் பஞ்சமா பாதகங்கள் குற்றமுடையன வாகுமா?

உண்மையில் நடைபெரும் பஞ்சமா பாதகங்கள் குற்றமாய் கருதப் படுகின்றனவா? என்பவைகளையும் இன்றைய நிலையில் அதாவது சமூக, மத, அரசியல் நிலையில் பஞ்சமா பாதகம் என்பது நிகழாமல் இருக்க முடியுமா என்றும், அவை உண்மையில் நடக்கப்படாமலும் மற்றவருக்கு துன்பம் இழைக்காமலும் இருக்க வேண்டுமானால் எப்படி உலக சமுதாயக் கொள்கை இருக்க வேண்டும் என்பதையும் விவரித்து விளக்கி எழுதப்பட்ட புஸ்தகமாகும். இப்புத்தகம் கிரௌன் 1-8 சைசில் 50 பக்கங்களுக்கு மேல் கொண்டதாகும். விலை அணா 2. தனிப்பிரதி வேண்டுவோர் 0-2-6 அணா ஸ்டாம்பு அனுப்பப்பட வேண்டும்.

கிடைக்குமிடம் :

அ. அய்யாமுத்து,

புஞ்சை புளியம்பட்டி,

கோயமுத்தூர் ஜில்லா.

(குடி அரசு - மதிப்புரை - 03.05.1931)