Cell

செல்லைப்போல ஒரு தொழிற்சாலையை வேறெங்கும் பார்க்க முடியாது. இதனுடன் ஒப்பிடும்போது மனிதர் அமைத்தவை வெறும் குடிசைத் தொழில்கள்தான். தொழிற்சாலைக்குள் பண்டங்களை இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்ப பரிமாறுவதற்கு சிறு வாகனங்களும், ஓட்டிச்செல்ல வேலையாட்களுமிருப்பார்கள். செல்களுக்குள்ளும் அப்படி ஒரு அமைப்பு இருக்கிறது. 

உதாரணமாக மூளை நரம்பு செல்களில் தகவலைப் பெற டென்ட்ரைட் முனைகளும், தகவலை அனுப்ப ஆக்சான்களும் உள்ளன. இரண்டிடங்களிலும் செயல்படுவதற்கென்று தனித்தனி புரதங்கள் உள்ளன. இப்புரதங்களை தக்க இடங்களுக்கு அனுப்புவதற்கு, பார்சல் முறையும் அட்ரஸ் குறியிடுதலும் காணப்படுகிறது. புரதங்களை எடுத்துச்செல்வற்கு கைனசின் மற்றும் மையோசின் என்ற வாகனங்களும் உள்ளன. இதனால் தவறான புரதம் செல்களுக்குள் வேண்டப்படாத இடத்திற்கு சென்றுவிடக்கூடிய அபாயம் தவிர்க்கப்படுகிறது. 

- முனைவர். க. மணி. பேராசிரியர், பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்