விலங்குகளைக் கொன்று பெறும் இறைச்சியை ஆய்வுக் கூடத்தில் செயற்கையாகவே உருவாக்கிக் கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தற்போது பண்ணைகளில் வளர்க்கப்படும் விலங்குகள் கொல்லப்படுவதன் மூலம் நாம் இறைச்சி பெறுகிறோம். ஆனால் எதிர்காலத்தில் இதற்க்கு முடிவு கட்டி ஆய்வுக் கூடங்களிலிருந்து நேரடியாக இறைச்சியே கிடைக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் விரும்புகின்றனர்.

விலங்குகளிலிருந்து பெறப்படும் திசுக்கள் ஆய்வுக்கூடங்களில் வளர்க்கப்படும் போது அவை இறைச்சியாகின்றன. இவற்றை வேண்டிய அளவுக்குக் கொழுப்பு மற்றும் சத்துக்களையும் அவற்றிலிருந்து பெற்றுக் கொள்ளமுடியும் என்பதும் இந்த முறையில் செயற்கை இறைச்சியை தற்போதே ஆய்வுக் கூடத்தில் உருவாக்க முடியும். ஆனால் வர்த்தக ரீதியில் ஒட்டு மொத்தமாக உருவாக்குவது பற்றிதான் இப்போது பேச்சே.

ஒரு செல்லிலிருந்து இந்த உலகத்துக்குக் தேவைப்படும் இறைச்சியை விலங்குகளைக் கொல்லாமலேயே உருவாக்கிக் கொள்ள முடியும். முதலில் மருத்துவத் தேவைக்காக விலங்குகள் செல்கள் திசு வளர்ப்பு முறையில் அதிகரிக்கப்பட்டன. தற்போது இறைச்சித் தேவையையும் பூர்த்தி செய்ய விஞ்ஞானிகள் விரும்புகின்றனர். விலங்கு செல்தான் இதற்கு மூல ஆதாரம் என்றாலும் ஆய்வுக்கூடங்களில் வளர்ந்த கறி விலங்கிலிருந்து எடுக்கப்படவில்லை என்பதால் அது சைவமா அசைவமா என்ற சர்ச்சை கூட எதிர்காலத்தில் எழும்.