sea 350புவிப்பரப்பில் 71 சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது. இதில் கடல்நீரின் அளவு 97 சதவீதம் மற்றும் நன்னீரின் அளவு 3 சதவீதமாகும். சூழ்ந்துள்ள கடல்நீர் பரப்பு 1,49,400,000 சதுர கிலோ மீட்டர்கள். இதில் பசுபிக் மகா சமுத்திரம் 35.25 சதவீதத்தையும், அட்லாண்டிக் மகா சமுத்திரம் 20.09 சதவீதத்தையும், இந்து மகா சமுத்திரம் 14.65 சதவீதத்தையும் ஆக்ரமித்துள்ளன. கடல் 1.3 X 1018 டன் அளவுள்ள நீரைத் தன்வசம் கொண்டதாக இருக்கிறது. 

நன்னீர் அளவில் பனிமலை/ பனிக்கட்டி 69 சதவீதமும், நிலத்தடி நீர் 30.1 சதவீதமும், மேற்பரப்பு நீர் 0.3 சதவீதமும், மற்றவை 0.6 சதவீதத்தையும் கொண்டுள்ளது. மேற்பரப்பு நீரில், ஏரிகள் 87 சதவீதமும், சதுப்பு நிலங்கள் 11 சதவீதமும் மற்றும் ஆறுகள் 2 சதவீதத்தையும் கொண்டதாக உள்ளன. மொத்த ஹைட்ரோஸ்பியர் நீர்த்தொகுதியில் உத்தேச நீர் அளவு 1,360,000,000 கி.மீ3 (326,000,000 மில்லியன் 3) கன அடிகள்.

பூமியை சுமந்துள்ள காற்றில் 15,500,000,000,000 டன் அளவுள்ள தண்ணீர் நீராவி வடிவில் உள்ளதாகவும்; ஒரு சதுர கிலோ மீட்டர் அளவுள்ள காற்றுப் பரப்பில் ஈரப்பதம் சாதாரணமாக 1,000,000,000,000,000 லிட்டர் என்றும்; நீரியல் சுழற்சியில் (Hydrological Cycle) 38,000 கன கி.மீட்டர் அளவுள்ள நீர் உட்பட்டு இருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. பூமியின் மேற்பரப்பில் 600 மைல் உயரம் வரை இருக்கும் காற்றுவெளி 1 சதுர அங்குல பரப்பில் 15 பவுண்டு எடையைக் கீழ்நோக்கி அழுத்துகிறது. கடல்மட்ட அளவில் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு 1,00,000 நியூட்டன்/ மீ2. பூமியைச் சூழ்ந்துள்ள வளிமண்டலத்தின் மொத்த எடை 5,000,000,000,000,000 டன்.