Andr-Marie-Ampre19ம் நூற்றாண்டின் சிறந்த இயற்பியலாளரும், கணித மேதையுமாகிய ஆண்ட்ரி மேரி ஆம்பையர் ( André-Marie Ampère (20 January 1775 – 10 June 1836) என்ற பிரெஞ்சு விஞ்ஞானி 1775, ஜனவரி 20ம் நாள் பிறந்தார். மின்னோட்டத்தின் சர்வதேச அளவையின் அலகான ஆம்பியர் என்பது, இவர் கண்டுபிடிப்பால் இவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது. ஆம்பியர் பிரான்ஸ் நாட்டின் லையோன் (in Lyon, France) என்ற ஊரில் வசதி மிக்க குடும்பத்தில் ஜீன் ஜாக் ஆம்பியர் (Jean-Jacques Ampère) என்பவரின் மகனாகப் பிறந்தார். செல்வ வளம் மிக்க குடும்பத்தில் பிறந்ததால், சிறு வயதில் பள்ளி செல்லவில்லை; தன் தந்தையுடனே கழித்தார். ஆனாலும்கூட, அவரின் தந்தை அற்புதமான கல்வியை வீட்டிலேயே கொடுத்தார். ஆம்பையரின் தந்தை ஜீன் ஜாக், மகனுக்கு லத்தீன் மொழியைக் கற்றுத் தந்து, அதன் மூலம் கணிதத்தில் ஆர்வம் ஏற்படச் செய்தார். கணித மேதை யூலரின் எழுத்துக்களையும், விஞ்ஞானி பெர்னோலியின் கண்டுபிடிப்புகளையும் (master the works of Euler and Bernoulli) ஆழமாகக் கற்றார். ஆம்பையர், லியானார்டோ டாவின்சி போலவே பல்துறை வித்தகர். இவருக்கு வரலாறு, பயணம், கவிதை, தத்துவம் மற்றும் உயிரியல் போன்றவற்றில் பெரும் ஆர்வம் இருந்தது. அவற்றைப் பற்றி படித்ததுடன, அதனை செய்தும் பார்த்தார்.

 ஆம்பையரின் கால கட்டத்தில்தான், பிரெஞ்சுப் புரட்சி நடந்தது. அப்போது இவரின் தந்தை வீட்டுக்குள்ளேயே இருந்தார். இருப்பினும், புரட்சி முடிந்தபின், அவரை சிறைப் பிடித்து, தூக்கிலிட்டுக் கொன்றனர். அதனால் மிகுந்த அதிர்ச்சியும், மீளாத் துக்கத்திலும் ஆழ்ந்தார். பின் ஆம்பையர், ஜூலி காரனை (Julie Carron) 1796ல் சந்தித்தார். அவரையே 1799ல் மணம் புரிந்தார். 1796லிருந்து ஆம்பையர், லைனோனில் கணிதம், வேதியியல் மற்றும் மொழிப்பாடங்களை தனியாக சொல்லித் தந்தார். பின்னர் 1801ல் ஆம்பையர், நோயுற்ற தன் மனைவியையும், குழந்தையையும் (Jean-Jacques Ampèரெ) லையோனில் விட்டுவிட்டு, அவர் மட்டும் போர்க்.என். பிரேச்சே (Bourg-en-Bresse) என்ற ஊருக்கு இயற்பியல் & வேதியியல் பேராசிரியராகப் பணி புரியச் சென்றார். 1803ல் நிகழ்ந்த அவரது மனைவியின் மறைவு, அவரை மிகவும் தளர்ச்சி அடையச் செய்துவிட்டது. பின் லையோன் பல்கலைக் கழகத்தில், ஆம்பையர் கணிதப் பேராசிரியராக பொறுப்பேற்றார். பின் பாரிசில் கணிதப் பேராசிரியராக 1809ல் சேர்ந்து பணியாற்றினார்.

Andr-Marie-Ampre_1ஆம்பையரின் முக்கிய பங்களிப்பு என்னவென்றால், மின்சாரத்திற்கும், காந்தத்திற்கும் இடையிலுள்ள பந்தத்தை (the relations between electricity and magnetiச்ம்) நிறுவியதுதான். மின்காந்தவியல் (electromagnetஇச்ம்) என்ற புதிய பகுதி உருவாவதற்கு காரணகர்த்தாவே ஆம்பையர்தான். அதனை எலெக்ட்ரோ டைனமிக்ஸ், (electrodynamics) என்று அழைத்தார். அவர் 1820, செப்டம்பர் 11 ம் நாள் ஆம்பையர், ஹெச்.டி. ஓர்ஸ்டீயின் (H. C. Ørsted's discovery ) காந்த ஊசி கண்டுபிடிப்பும் அது வோல்டாஸ் மின்னியக்கம் செயல்படுவது பற்றியும் கேள்விப்பட்டார். ஆனால் ஒரு வாரம் சென்று, செப்டம்பர் 18ம் நாள், பிரெஞ்ச் அகாடமி முன்பு, மிகவும் குழப்பமாக உள்ள அது போன்ற ஒரு கருத்தை மின்னியல் தொடர்பாக ஆம்பையர் கொடுத்தார். அதே நாளில், மின் ஒயர்கள் எப்படி ஒன்றையொன்று ஈர்க்கின்றன என்றும் ஆம்பையர் செய்து காண்பித்து நிரூபித்தார்.

இதுவே மின்னாற்றல் (electrodynamics) துறைக்கு அடித்தளம் உருவாக காரணமானது. பின் மின்காந்தவியல் துறை உருவானது. அதன் பின் ஆம்பையர், 1827ல் பிரான்சின் ராயல் சங்கத்தில் அயல் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் ராயல் ஸ்வீடிஷ் அக்காடமியில் உறுப்பினரானார்.

ஆம்பையரின் கடைசிக் கால படைப்புகள், அவர் இறந்த பின் வெளியிடப்பட்டன.

பெரிய மேதையாக இருந்தாலும், ஆம்பையர் குழந்தைத் தன்மையுடன் இருந்ததாகத் தகவல்கள் பதிவாகி உள்ளன.

ஆம்பையரின் இறப்பு அவரின் 61 வது வயதில் 1836, ஜூன் 10 ம் நாள் மார்செல்லே (Marseille ) என்ற ஊரில் நிகழ்ந்தது. பின்னர் அவரது உடல் பாரிசிலுள்ள கைமெடியரே டி மாண்ட் மார்டரி (Cimetière de Montmartre) என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.