வட துருவமான ஆர்க்டிக் பிரதேசத்தில் உள்ள பனிமலை மூன்று துண்டுகளாக உடைந்து விட்டதாக கனடா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வாகனப்புகை, கார்பன்டை ஆக்சைடு அதிகரிப்பு, மரங்கள் வெட்டப்படுதல் போன்ற பல்வேறு காரணங்களால் வடதுருவத்திலும், தென் துருவத்திலும் பனிமலைகள் உருகி வருவதாகவும் இதனால் கடல் மட்டம் உயர்ந்து வருவதோடு பெரிய அளவில் பருவ கால மாற்றங்களும் அழிவுகளும் ஆரம்பித்து விட்டதாகவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.