தாமஸ் ஆல்வா எடிசனை அதிக அளவிலான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர் ஜப்பானிய விஞ்ஞானி யோசிரோ நகமட்சூ. 3000க்கும் மேற்பட்ட பொருட்களை இவர் கண்டுபிடித்துள்ளார். 1928 ஆம் ஆண்டு பிறந்த இவர் 144 வயது வரை வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டுள்ளார். இவர் ஒரு நாளைக்கு 4 மணி நேரத்துக்கு மேல் தூங்குவதில்லை.

பொதுவாக யோசிரோ நள்ளிரவு 12 முதல் அதிகாலை 4 மணி வரையிலான நேரத்தில், நீச்சல்குளத்தில் மூழ்கியபடி இருக்கும்போது, தோன்றும் சிந்தனைகளை குறித்து வவத்துதான் இத்தனை கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்திருக்கிறார்.

ஆர்க்கிமிடீஸ், மைக்கேல் பாரடே, மேரி கியூரி, நிகோலா டெல்சா மற்றும் யோசிரோவை இதுவரை உலகில் தோன்றிய விஞ்ஞானிகளில் தலைசிறந்தவர்கள் என்று அமெரிக்க அறிவியல் ஆய்வு நிறுவனம் ஒன்று தரப்படுத்தியுள்ளது. பிளாப்பி டிஸ்க், CD, DVD, மின்னணு கடிகாரம், டாக்ஸி மீட்டர் ஆகியவை யோசிரோ கண்டுபிடித்த பொருட்களில் சிலவாகும்.