தேவையான பொருட்கள்:

சுத்தம் செய்த கோழித் துண்டுகள் - 1 கிலோ
எண்ணெய்- 5 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள்- 2 ஸ்பூன்
கொத்தமல்லித்தூள்- 2 ஸ்பூன்
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
தந்தூரி மசாலா பவுடர்- 2 ஸ்பூன்
தயிர்- 2 மேசைக்கரண்டி
மசித்த தக்காளி- கால் கப்
தேவையான உப்பு
அரிந்த கொத்தமல்லி- கால் கப்
அரைப்பதற்கு :
பச்சை மிளகாய்-2, வெங்காயம்-2, தேங்காய்த்துருவல்- 3 மேசைக்கரண்டி, பூண்டு இஞ்சி விழுது- 1 மேசைக்கரண்டி, அரிந்த கொத்தமல்லி- கால் கப், புதினா இலைகள்- கால் கப், முந்திரிப்பருப்பு-8, மிளகு அரை ஸ்பூன், சீரகம்- கால் ஸ்பூன், பட்டை- 1 துண்டு, ஏலம்-3

செய்முறை:

அரைப்பதற்கு தேவையான பொருட்களை முதலில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அரைத்த மசாலா சேர்த்து வதக்கவும்.

எண்ணெய் மேலே தெளிய ஆரம்பிக்கும்போது தூள்கள் அனைத்தையும் சேர்த்து குறைந்த தீயில் சில நிமிடங்கள் வதக்கவும். தயிர், தக்காளி சேர்த்து மறுபடியும் குழைய வதக்கவும். பின் கோழி, உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து கோழித்துண்டுகள் நன்கு வேகும் வரை சமைக்கவும். கடைசியில் கொத்தமல்லியைத்தூவவும்.

சுவையான தந்தூரி கோழிக்குழம்பு ரெடி.