தேவையான பொருட்கள்:

பெரிய மீன் துண்டுகள்- 10
மிளகாய்த் தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் தேவையான அளவு
கிரேவி தயாரிக்க:
பூண்டு - 7 பல்
வெங்காயம் - 3
குடை மிளகாய் - 1/2 நறுக்கியது
தக்காளி சாஸ் - 4 ஸ்பூன்
கறிவேப்பிலை - 8 இலைகள்
நெய் - 3 ஸ்பூன்
வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

செய்முறை:

மீனில் மஞ்சள், மிளகாய், உப்பு சேர்த்து பிரட்டி 1 மணிநேரம் வைத்து பின் அதிலிருந்து 2 துண்டு மீனை மட்டும் முள் நீக்கி தனியே வைக்கவும். மீதமுள்ள 8 துண்டு மீனையும் எண்ணையில் முக்கால் பாகம் வேகும் அளவுக்கு பொரித்து எடுக்கவும்.

இப்பொழுது மீதமுள்ள எண்ணையில் பூண்டை 2 நிமிடம் வறுத்து அதில் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கி வெங்காயம் நன்கு வெந்து உடைந்ததும் குடைமிளகாயும் சேர்த்து மேலும் 5 நிமிடம் வதக்க வேண்டும். அதனுடன் தக்காளி சாஸ் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

பின் அதில் தனியே வைத்த முள் இல்லாத மீன் துண்டுகள் சேர்த்து உடைத்து விடவும். பின் அதில் 1 ஸ்பூன் கார்ன் ஃப்லாரை 3/4 கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடுங்கள். தேவைக்கு உப்பும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது நன்கு 10 நிமிடம் கொதித்ததும் பொரித்து வைத்த மீனையும் சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள்.