தேவையானவை:

இறால்........................1/4 கிலோ
பெல்லாரி..................1
தக்காளி......................2
இஞ்சி...........................சிறு துண்டு
பூண்டு..........................6
மிளகாய்ப் பொடி....1 1/2 தேக்கரண்டி
மல்லி பொடி............1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி.........கொஞ்சம்
எண்ணெய்................. 25 மில்லி
சோம்பு............................ 1/4 தேக்கரண்டி
உப்பு.............................தேவையான அளவு
கறிவேப்பிலை.........1 கொத்து

செய்முறை:

iral_varuval_370இறாலைத் தோல் நீக்கி நன்கு சுத்தம் செய்யவும். பெல்லாரியைப் பொடியாக நறுக்கவும். தக்காளியையும் பொடியாக நறுக்கவும். இஞ்சி, பூண்டை நைசாக அரைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், சோம்பு போட்டு, சிவந்ததும் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை + கொஞ்சம் உப்பு போட்டு நன்கு சுருள வதக்கவும். பின் அதிலேயே தக்காளியும் போட்டு நன்கு நீர் சுண்டி சுருண்டு வரும் வரை வதக்கவும். அதிலேயே மிளகாய், மல்லி + மஞ்சள் பொடி போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

பின் அதில் கழுவிய இறாலைப் போட்டு தீயைக் குறைத்து வதக்கவும். நீர் ஊற்ற வேண்டாம். இறால் நன்கு வெந்தபின் இறக்கி பரிமாறவும்.