தேவையானவை:

தண்ணீர்................5 டம்ளர்.
அச்சு வெல்லம் .....3   கட்டி 
இல்லையெனில் மண்டை வெல்லம்... 50 கிராம்
இஞ்சி...............................1 இன்ச் நீளம்
மிளகு..........................6
ஏலம்...........................1
கிராம்பு.......................2
தேயிலைத் தூள்......3 தேக்கரண்டி.
பால்............................2 டம்ளர் 
 
செய்முறை :

tea_370அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 5 டம்ளர் நீர் ஊற்றவும். வெல்லத்தை உடைத்து நீரில் போடவும். அத்துடன், இஞ்சியை நன்கு தட்டி, பிறகு ஏலம், கிராம்பு + மிளகைத் தட்டி நீரில் போடவும். நீர் நன்கு கொதித்து, வெல்லமும் நன்கு கரைந்ததும், 5 நிமிடம் கழித்து, தேயிலைத் தூள் போட்டதும், அடுப்பிலிருந்து பாத்திரத்தை  இறக்கி மூடி வைக்கவும். நீர் கொதித்து ஆவியாகி கொஞ்சம் குறைந்திருக்கும். பாலை நன்கு காய்ச்சி இறக்கவும்.

பின் 2 நிமிடம் ஆன பிறகு, வெல்லம் போட்ட தேநீரை வேறொரு பாத்திரத்தில் வடிகட்டி உதவியுடன் வடிகட்டவும். பிறகு தேத்தண்ணீருடன் பாலை ஊற்றிக் கலக்கவும். இப்போது வெல்ல மசாலா தேநீர் ரெடி. உயரமாகத் தூக்கி தேநீரை ஒரு ஆத்து ஆத்திவிட்டு, டம்ளரில் ஊற்றிப் பரிமாறவும். தேநீர் படு சுவையாக, சூப்பராக இருக்கும்.