goatsஇன்றைய சூழ்நிலையில் கால்நடை வளர்ப்பு தொழிலில் அனைவரையும் கவர்ந்து ஈர்க்கும் தொழில் ஆடு வளர்ப்பு தொழில் என்றால் அது மிகையாகாது. ஏனெனில் ஆடு வளர்ப்பு தொழில் அதிக அளவில் லாபம் தரக்கூடியது. காரணம் என்னவென்றால் நாளுக்கு நாள் மக்களின் இறைச்சி உண்ணும் பழக்கவழக்கங்களும் தேவையும் அதிகரித்துக் கொண்டே வருவதனால் ஆட்டு இறைச்சியின் விலையும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. இதனால் தான் பண்ணையாளர்கள் ஆடு வளர்ப்பு தொழிலில் அதிக அளவு லாபம் பெறலாம். நம் நாட்டில் சிறு, குறு, நிலமற்ற விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் ஆடுவளர்ப்பு பெரும் பங்கு வகிக்கிறது. ஆடு வளர்ப்பு தொழிலை மிக எளிமையாக பண்ணையாளர்கள் மேற்கொள்ளலாம் ஏனெனில் ஆடு வளர்ப்பிற்கு முதலீடு மிகக் குறைவு. அதே மாதிரி கொட்டகை மற்றும் மேலாண்மை பிரச்சினைகளும் மிகவும் குறைவு. மேலும் ஆடு வளர்ப்பதற்கு தனி வேலையாட்கள் இல்லாமால் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களே இத்தொழிலை எளிமையாக செய்யலாம்.

இப்படிப்பட்ட நல்ல குணாதியசங்கள் இருக்கின்ற ஆடுகளை அதாவது செம்மறி மற்றும் வெள்ளாடுகளை வளர்த்து அதிக லாபகரமாக பண்ணையை நடத்த வேண்டுமென்றால் ஆட்டுக் குட்டிகளோட பராமரிப்பு ம்ற்றும் மேலாண்மை மிகவும் முக்கியம். ஆட்டுக் குட்டிகளின் இறப்பு பண்ணையாளருக்கு அதிக அளவில பொருளாதார ரீதியாக இழப்பை ஏற்படுத்தக் கூடியது. ஏனெனில் இளம் குட்டிளின் நோய் தொற்றும் மற்றும் இறப்பு விகிதமும் அதிகமாக இருக்கும். நம் இந்திய நாட்டில் இளம் குட்டிகளின் இறப்பு விகிதம் 9 விழுகாட்டில் இருந்து 47 விழுக்காடாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெரும்பாலான குட்டிகள் பிறந்த முதல் மாதத்திலேயே அதிக அளவில் நோய்வாய்ப்பட்டு இறக்க அதிக வாய்ப்பு இருக்கும். மழை மற்றும் குளிர் காலங்களில் நோய் தொற்று காரணமாக ஏற்படும் இறப்பு மற்றும் ஈ கோலை போன்ற நோய்க்கிருமிகளினால் உயிரிழப்பு அதிகமாக ஏற்படும்.

பொதுவாக இளம் குட்டிகளையே அதிக அளவிலான நோய்க் கிருமிகள் தாக்கும் ஏனெனில் இளம் குட்டிகளில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் சுகாதாரமற்ற இடவசதி, நோய் பாதிப்புக்குள்ளான அல்லது நோய் பரப்பும் மற்ற விலங்குகளிலிருந்தும் நோய்த் தொற்று ஏற்படலாம். அதிகமான குளிர் அல்லது அதிக அளவிலான வெப்ப அயர்ச்சி போன்ற காரணங்களாலயும் குட்டிகளில் நோய்த்தொற்று ஏற்படும். மேலும் தீவனத்தின் மூலமாகவும் காற்றின் மூலமாகவும் நோய் பரவுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே சரியான முறையில பராமரிக்கும் போது இத்தகைய நோய் தொற்றுகளில் இருந்து ஆட்டுக்குட்டிகளை பாதுகாத்து சிறந்த இனப்பெருக்கத் திறன் மிகுந்த ஆடுகளாக அல்லது அதிக உடல் எடையுடன் ஆரோக்கியமான ஆடுகளாக வளர்த்து இறைச்சிக்காக விற்பனை செய்து அதிக இலாபம் பெறலாம்.

பெட்டை மற்றும் கிடா ஆடுகளை வாங்குதல்

குட்டி ஈனும் பெட்டியை தயார் செய்தல்

பிறந்த குட்டிகளை பராமரித்தல்

ஆட்டுக்குட்டிகளில் தீவன மேலாண்மை

ஆட்டுக்குட்டிகளில் குடற்புழு நீக்கம் செய்தல்

ஆட்டுக்குட்டிகளில் நோய் மேலாண்மை

தடுப்பூசி அளித்தல்

ஆட்டுக்குட்டிகளில் மருந்து குளியல் அளித்தல்

பண்ணைகளில் இருந்து குட்டிகளை கழித்தல் அதாவது கல்லிங்

பண்ணையாளர்கள் இத்தகைய பராமரிப்பு முறைகளை பின்பற்றி குட்டிகளை பராமரிக்கும் போது குட்டிகளின் இறப்பு விகிதம் குறைந்து வருமானம் அதிகரிக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.

- முனைவர். வெ. சசிகலா, மரு. கொ. ப. சரவணன் மற்றும் முனைவர். அ. மணிவண்ணன்

கால்நடை விரிவாக்கக் கல்வித் துறை,

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு