திருச்சியில் நடைபெற்ற மதிமுக மாநில வழக்குரைஞர் மாநாட்டில் பொதுச்செயலாளர் வைகோ உரை :

"திராவிட இயக்கத்தின் முக்கியமான காலகட்டத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. உண்மையான திராவிட இயக்கம் என்ற தகுதி யாருக்கு உண்டு? என்ற கேள்வி எழுந்திருக்கும் தருணம்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பற்றி பேசிய போது எங்களை ஏளனம் செய்தவர்கள் உண்டு. இப்போது விடுதலைப் புலிகளைப் பற்றிப் பேசாமல் அரசியல் இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது.......

"சேனல் 4' தொடர்ந்து தமிழர்கள் கொல்லப்படும் காணோளிக் காட்சிகளை வெளியிட்டு வருகிறது. தப்பிடுவிவாரா ராஜபட்சே? அவ்வாறு அவர் தப்பினால் நாம் உயிரோடு இருந்த பயனில்லை.

உலகம் முழுவதும் புதிய புதிய தேசங்கள் உருவாகும்போது, தமிழீழம் மட்டும் ஏன் உருவாகக்கூடாது? தமிழ்ப் பகுதிகளிலுள்ள சிங்கள ராணுவம், போலீஸ் வெளியேற வேண்டும். சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளின் பார்வையில் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். படுகொலைப் போரை நடத்திய ராஜபட்சேவை கூண்டிலேற்ற வேண்டும். இந்த இரண்டும் தான் எங்களின் இலக்குகள்.

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியபோதே, ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்று ஏன் குறிப்பிடவில்லை? என்றார் வைகோ.

Pin It