boeing planeபோயிங் 737 MAX 8 வகையைச் சார்ந்த இரண்டு விமானங்கள், 5 மாத இடைவெளியில் விபத்துக்குள்ளாகி மொத்தம் 346 பேர் பலியானார்கள். முதல் விபத்து 2018 அக்டோபர் மாதம் 29ஆம் தேதி லயன் ஏர்லைன்ஸ் விமானம் எண் 610, இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து மேலெழும்பிய பதிமூன்றாவது நிமிடத்தில் ஜாவா கடல் பகுதியில் விழுந்தது.

அதில் பயனித்த 189 பேரும் பலியாகினர். இரண்டாவது விபத்து 2019 மார்ச் மாதம் 10ஆம் தேதி எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் எண் 302, எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து மேலெழும்பிய ஆறாவது நிமிடத்தில் தரையில் விழுந்தது. அதில் பயனித்த 157 பேரும் பலியாகினர். இந்த இரண்டு விமானங்களும் போயிங் நிறுவனத்திடமிருந்து புதிதாக வாங்கப்பட்டவை. 

பல கட்ட விசாரணைக்குப் பிறகு (பதினெட்டு மாதங்கள் கழித்து)  இரண்டு போயிங் 737 MAX 8 விமானங்கள் விபத்துகள் குறித்த 200 பக்கங்கள் கொண்ட அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது, அமெரிக்கா மேலவையில் உள்ள போக்குவரத்துத் துறை கண்கானிப்பு குழு. அதில் போயிங் நிறுவனத்தின் தொழில்நுட்ப குறைபாடுகளே விபத்துக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளது. "horrific culmination” of design flaws, poor government oversight and lack of corrective action by Boeing." என்று காட்டமாகத் தெரிவித்தது.

மேலும் அவர்கள் இரண்டு விமானங்களின் கருப்பு பெட்டியின் தகவல்களை ஆராய்ந்து பார்த்ததில், லயன் ஏர்லைன்ஸ் விமான விபத்தும், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமான விபத்து தகவல்களும் ஒரு மாதிரியாக இருக்கிறது என்றார்கள். போயிங் மற்றும் FAA என்று அழைக்கப்படும் Federal Aviation Administration இவ்விரு அமைப்பின் தோல்வியே என்று கூறியிருக்கிறது. "played instrumental and causative roles" விமானங்கள் பாதுகாப்பிற்குத் தேவையான வழிமுறைகளை அவர்கள் சரியாகக் கையாளப்படவில்லை என்கிறது அந்த அறிக்கை.

லயன் ஏர்லைன்ஸ் விபத்து:

2018 அக்டோபர் 28 ஆம் தேதி காலை 6;21 மணிக்கு ஜகார்த்தா விமான நிலையத்தில் இருந்து Pangkal Pinang என்ற ஊருக்கு சென்றுகொண்டிருந்தது லயன் ஏர்லைன்ஸின் விமானம் எண் JT610. விமான நிலையத்தில் உள்ள ரேடாரில் பதிவாகியத் தகவல்களை வைத்துப் பார்த்ததில், விமானம் மேல் எழும்பிய இரண்டாவது நிமிடத்தில் 2000 அடி உயரத்திற்கு எழும்பியது.

ஆனால் தொடர்ந்து மேலே செல்லாமல் அது 500 அடிக்கு கீழே இறங்கியது. இதுவே வழக்கமான விமான இயக்கம் கிடையாது. மீண்டும் அது இடது பக்கமாக வளைந்து 5000 அடிக்கு மேலே சென்றது. அப்போது விமானத்தின் வேகம் 397mph இருந்ததாகவும். விமானிகளும் தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கடைசியாக பேசியிருக்கிறார்கள் விமானத்தை கட்டுப்படுத்த (Flight control system) முடியவில்லை, "RTB" என தகவல் கொடுத்திருக்கிறார்கள் (return to base) அதற்கு கட்டுப்பாட்டு அறையிலிருந்து அனுமதி கிடைத்திருக்கிறது.

ஆனால், விமானம் 3650 அடியை எட்டியதும் அதன் தகவல்கள் முற்றிலுமாக இழந்துவிட்டது, அப்போது நேரம் சரியாக காலை 6;35 மணி. மொத்தம் பதிமூன்று நிமிடங்கள் மட்டுமே ஆகாயத்தில் பறந்து இருக்கிறது‌. ஜகார்த்தாவில் இருந்த ஒன்பது மைல்கள் தொலைவில் உள்ள கடல் பகுதியில் விழுந்துவிட்டது. இந்த புதிய விமானம் போயிங் நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்டதிலிருந்து மொத்தம் 11,000 மணி நேரங்கள் ஆகாயத்தில் பறந்து இருக்கிறது‌.

முதல் விமான விபத்து நிகழ்ந்த உடனேயே, அதன் அது கருப்புப் பெட்டியை கண்டறிந்து அதில் பதிவாகிய தகவல்களை வைத்து, என்னக் காரணம் என ஆராயத் தொடங்கியது போயிங் நிறுவனம். போயிங் விமான விபத்துக்கள் எங்கு நிகழ்ந்தாலும் அதன் கூட்டு நிறுவனங்கள் உடனே அதைப் பற்றித்தான் ஆய்வறிக்கையும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்க தாமாகவே முன்வர வேண்டும் என்ற சட்டத்திருத்தம் அமெரிக்காவில் இருக்கிறது. 

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விபத்து:

இரண்டாவது விபத்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் இது கடல் பகுதியில் நிகழவில்லை. எத்தியோப்பியா தலைநகரில் இருந்து 35 மைல்கள் தொலைவில் உள்ள ஒரு பாலைவனப் பகுதியில் நிகழ்ந்தது. மார்ச் 8ஆம் தேதி காலை 8;38 மணிக்கு கென்யா தலைநகர் நைரோபிக்கு கிளம்பிய விமானம் அது. விமானம் மேலெழும்பிய ஆறாவது நிமிடத்தில் 8;44 மணிக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதன் தகவல்கள் துண்டிக்கப்பட்டது.

விமானத்தை இயக்கிய பைலட் கடைசியாக ஒரு தகவல் தெரிவித்தது கட்டுப்பாட்டு அறையில் பதிவாகியது "We have a difficulty we wanted to return" ஆனால், விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. 

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸின் இந்த புதிய விமானம் 2018 நவம்பர் 15ஆம் தேதி போயிங்கிடம் இருந்து வாங்கப்பட்டது. இதுவரை சுமார் 12,000 மணி நேரங்கள் மட்டுமே அது ஆகாயத்தில் பறந்து இருக்கிறது‌. 

விபத்து நிகழ்ந்து இரண்டு நாட்கள் கழித்து விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து அதன் தகவல்கள் பெறப்பட்டன. முதற்கட்ட ஆய்வில் லயன் ஏர்லைன்ஸில் நிகழ்ந்த அதே சம்பவங்கள் இதிலும் நிகழ்ந்துள்ளது என தெரியவந்தது. மேலும் விமானம் தரையில் விழுந்த விதத்தைப் பார்க்கும் போது விமானத்தின் வால் பகுதி 'ஹரிசாண்டல் போசிஷன்' -ல் கிடந்தது. இது வழக்கத்திற்கு மாறானது என்றார்கள் அதனை சோதனையிட்ட வல்லுநர்கள். MCAS தானியங்கி மென்பொருள் அதற்கு காரணமாக இருக்கலாம் என்று கருதினார்கள்.

போயிங் 737 MAX கருப்பு பெட்டித் தகவல்கள் மற்றும் MCAS தானியங்கி மென்பொருள்:

போயிங் விமானங்களின் வேறு எந்த மாடல்களிலும் இல்லாத MCAS இதில் மட்டும் ஏன் இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. MAX 8 விமானங்களின் எஞ்சின் (LEAP-1B, 176 cm) மிகவும் சக்கி வாய்ந்தது. விமானம் ஓடுதளத்தில் இருந்து மேலெலழும் போது an aerodynamic stall -ஐ தடுப்பதற்காக, தானியங்கியாக விமானத்தின் மூக்கு பகுதியைக் கீழே அசையும் படி வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதற்காகவே MAX விமானங்களில் MCAS தேவைப்படுகிறது என்கிறது போயிங்.

விபத்துக்குள்ளான விமானத்தின் மூக்கு பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் AOA Sensor (Angle of Attack) மூலம் தவறான தகவல்கள் பெறப்பட்டதால் விமானத்தின் MCAS (Maneuvering Characteristics Augmentation System) தானாகவே இயங்கியுள்ளது. முறையே தொடர்ச்சியாக AOA Sensor -ல் இருந்து வந்த தவறானத் தகவலால் பல முறை MCAS Software இயங்கியது பதிவாகியுள்ளது. விமானி தானியங்கி கட்டுப்பாட்டை தனக்குள் கொண்டு வருவதற்கு முன்னரே விபத்து நிகழ்ந்திருக்கலாம்.

விமானத்தின் மூக்கு பகுதி தலை கீழாகச் சென்றிருக்க வேண்டும். தகவல்களும் அப்படி தான் காட்டுகின்றன என்றார்கள். இதுகுறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றது அமெரிக்காவின் FAA (Federal Aviation Administration). 

முதல் விபத்து நடந்து நான்கு மாதங்கள் காலமாகியும் MCAS software இதைப்பற்றி அதிகம் யாருக்கும் தெரியாது. இரண்டாவது விபத்து நிகழ்ந்த மறுநாள்தான் விமானத்தின் தானியங்கி சாப்ட்வேர் பிரச்சனை இருப்பதாகத் தெரிவித்தது FAA. 

போயிங் 737 வகையைச் சேர்ந்த விமானங்கள் பரவலாகப் பல நாடுகளில் சேவையில் இருக்கிறது. உலகளவில் பரவலாக அனைத்து நாடுகளிலும் இந்த விமானங்கள் பாதுகாப்பாக இருக்கிறது. விமானச் சேவை நிறுவனங்களின் நம்பிக்கை வாய்ந்தது கூட என்றும் கூறலாம். ஆனால் அது விலை உயர்ந்தது. அதேவேளையில் எரிபொருள் சேமிப்பு இல்லாதது.

இதனை ஈடுகட்டவே MAX 8 வகையைச் சேர்ந்த விமானங்கள் உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. ஆனால் வர்த்தக விமானங்களைக் கண்காணித்து வரும் குழு ஏர்பஸ் நிறுவனத்தின் போட்டிக்காக போயிங் இந்த வகையான விமானங்களை உற்பத்திச் செய்தது என்றார்கள்.

உலகளவில் அதிகப்படியான பயணிகள் விமானத்தை வடிவமைத்து வர்த்தக ரீதியாக ஏற்றுமதி செய்துக் கொண்டிருக்கும் நிறுவனம் எது வென்றால் அது போயிங் மட்டுமே. விமானச் சேவை நிறுவனங்கள் ஒன்று போயிங் நிறுவனத்திடமிருந்து விமானத்தை வாங்க வேண்டும். இல்லை என்றால் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து விமானத்தை வாங்க வேண்டும். இந்த இரண்டு நிறுவனங்கள் தான் உலகின் விமான உற்பத்தியின் முன்னோடிகள்.

வர்த்தக போட்டியைச் சமாளிக்கவே அதாவது ஏர்பஸ் நிறுவனத்தின் A320neo வகைச் சார்ந்த விமானத்திற்கு மாற்றாக வடிவமைக்கப்பட்டதே போயிங் 737 MAX ஆகும். விசாரணை அறிக்கையில் இதையும் குறிப்பிட்டிருந்தார்கள். அதாவது போயிங் நிறுவனம் தொடர்ச்சியாக Cost-effective தள்ளப்பட்டதாகவும் வடிவமைப்பு செய்வதற்கு போதிய காலம் அளிக்கவில்லை.

வாடிக்கையாளர்களுக்கு புதிய விமானங்களை குறித்த நேரத்தில் கொடுக்க வேண்டும் என்பதிலேயே போயிங் குறியாய் இருந்தது அதனால் பாதுகாப்பு குறித்து அதிகம் கவலை கொள்ளவில்லை என்கிறார்கள். 

எந்த ஒரு புதிய விமானத்தின் வடிவமைப்பு முடிந்தவுடன் அதனை FAA அமைப்பிடமிருந்து தரச்சான்றிதழ் பெறப்படவேண்டும். அதன்பின்னர் வாடிக்கையாளர்களுக்கு அந்த விமானங்களை விற்பனைச் செய்ய முடியும். MAX 8 விமானத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட MCAS மென்பொருள் விளக்கங்கள் மற்றும் செய்முறைகள் எல்லாம் FAA -க்கு தெரிந்திருக்கின்றது.

ஆனால் இந்த அளவுக்கு தோல்வி அடையும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. போயிங் நிறுவனமும் இந்த மென்பொருள் குறித்து  விமானிகளுக்கு முறையான பயிற்சியும் அளிக்கவில்லை. விமானத்தின் செய்முறை விளக்க புத்தகத்திலிருந்து எதனை நீக்கி இருக்கிறார்கள் என்று பின்னால் தெரிய வந்தது. 

MAX 8 -ன் எதிர்காலம்:

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விபத்து நிகழ்ந்த பின்னர் பல நாடுகள் இந்த வகை விமானங்களை இயக்க மாட்டோம் என்று விமான நிலையத்திலேயே ஆங்காங்கே நிற்க வைத்து விட்டார்கள். ஆனால் அமெரிக்காவில் மேக்ஸ் 8 -ன் சேவையை உடனடியாக நிறுத்தவில்லை‌. பல நாடுகளும் சேவையை நிறுத்தியதைத் தொடர்ந்து அதிபரின் சிறப்பு கையொப்பம் மூலம் அதன் சேவைகளை நிறுத்தி விட்டார்கள்.

அதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் பல விமான சேவை நிறுவனங்கள் இவ்வகை விமானங்களை தரை இறக்கி விட்டது ஏர்லைன்ஸ் நிறுவனங்கள். இரண்டாவது விபத்து நிகழ்ந்த சமயத்தில் கிட்டத்தட்ட 300 விமானங்கள் சேவையில் இருந்தது. புதிதாக 5000 விமானங்களுக்கான ஒப்பந்தங்களை பெற்றிருந்தது போயிங். அந்நிறுவனத்தின் மிகப்பெரிய MAX 8 வர்த்தகம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

எத்தியோப்பியா விபத்தை தொடர்ந்து பல நாடுகள் தங்களின் புதிய ஒப்பந்தங்களை ரத்து செய்து விட்டார்கள். அமெரிக்க நாடாளுமன்றத்தில் விசாரணைக்கு வந்த போயிங் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி Dennis Muilenburg இரண்டு விபத்து சம்பவங்களும் எங்களை வெகுவாக பாதித்திருக்கிறது.

உயிர் இழந்த குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். போயிங் தொடர்ந்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றார். கடந்த ஆண்டு டிசம்பரில் அவர் பதவியும் விலகிவிட்டார்.

இரண்டாவது விமான விபத்து நிகழ்ந்து 18 மாதங்கள் ஆகிறது. இதுவரையில் FAA அமைப்பு போய் எங்கின் புதிய சாஃப்ட்வேர் அனுமதி அளிக்கவில்லை. எனினும் போயிங் நிறுவனம் தொடர்ச்சியாக எங்களது சாஃப்ட்வேர் நம்பகத்தன்மை வாய்ந்தது என்கிறார்கள்.

விமானிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க திட்டம் அமைந்திருக்கிறது போயிங் நிறுவனம். அமெரிக்காவில் இயங்கிவரும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தங்களது விமானிகளுக்கு இந்த பயிற்சியை அளிக்க ஆயத்தமாக இருக்கிறார்கள். முறையே போயிங் 737 MAX வைத்திருக்கும் அனைத்து விமான சேவை நிறுவனங்களும் தங்களது விமானிகளுக்கு இந்த பயிற்சியினை எடுக்க அனுமதி தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

MAX 8 விமானங்கள் போயிங் நிறுவனத்தின் கனவுத் திட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் அமெரிக்காவின் மிகப்பெரிய ஏற்றுமதி நிறுவனமாக போயிங் இருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக இருக்க வேண்டுமே தவிர, வர்த்தக போட்டியின் காரணமாக மனித உயிர்களை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட கூடாது. பிற போக்குவரத்து துறையை போல் விமான உற்பத்தியில் அதிகம் போட்டிகள் கிடையாது‌.

விமான சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் தங்களின் விமானங்களை ஒன்று அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் வாங்க வேண்டும், இல்லையென்றால் பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்க வேண்டும். 

போயிங்கின் புதிய சாஃப்ட்வேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அது பாதுகாப்பானது என்று FAA அறிவித்தால் நாமும் மீண்டும் அதில் பயணிக்க தொடங்கலாம். வரும் 2021 முதல் காலாண்டில் தரையில் நிற்கும் MAX 8 விமானங்கள் எல்லாம் மீண்டும் பண்பாட்டுக்கு வந்துவிடும் என நம்புகிறது போயிங் நிறுவனம்.

நன்றிhttps://www.npr.org/2020/09/16/913426448/congressional-inquiry-faults-boeing-and-faa-failures-for-deadly-737-max-plane-cr

- பாண்டி