newton experiment on lightசூரிய ஒளி பல நூற்றாண்டுகளாக வெண்ணிற ஒளி என்று தான் நம் முன்னோர்களால் பார்க்கப்பட்டது. ஆனால் நியூட்டன் இந்தக் கூற்றினை உடைத்து, சூரிய ஒளி என்கிற வெண்ணிற ஒளி, ஊதா முதல் சிவப்பு வரையிலான ஏழு நிறங்களைக் கொண்ட ஒரு நிறமாலை என முப்பட்டகம் எனும் ஆய்வுக் கருவியின் உதவியால் நிரூபித்தார்.

நியூட்டனின் இந்த ஆய்வு முடிவுகள் வெளிவந்த பிறகு, சூரிய ஒளியின் நிறம் தொடர்பான பல ஆய்வுகள் இன்றளவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சூரிய ஒளியினை முப்பட்டகத்தின் வழியே செலுத்தி, நிறமாலை எனும் ஆய்வு முடிவினை நியூட்டன் பெற்றார். நான் சூரிய ஒளியினை முப்பட்டகத்தின் வழியே செலுத்தாமல், ஒரு நிறமுள்ள ஒளியின் வழியாக செலுத்தி அவ்வெண்ணிற ஒளியில் ஏற்படும் மாற்றத்தினை ஆய்வு முடிவாக வெளியிட்டுள்ளேன். அதுவே “நிறமுள்ள ஒளியால் வெண்ணிற ஒளியில் ஏற்படும் நிறமாற்றம்” என்கிற இவ்வாய்வுக் கட்டுரையாகும்.

நிறமுள்ள ஒளியின் வழியாக வெண்ணிற ஒளி பயணம் செய்யும் போது, அவ்வெண்ணிற ஒளி நிறமுள்ள ஒளியாக மாற்றமடையும். மேலும் மாற்றமடைந்த வெண்ணிற ஒளியின் நிறமானது, அது பயணம் செய்த நிறமுள்ள ஒளியின் நிறமாக இல்லாமல் புதிய நிறமாகாக் காட்சியளிக்கும்.

உதாரணமாக, சிவப்பு நிற ஒளியின் வழியாக வெண்ணிற ஒளி பயணம் செய்யும் போது, அவ்வெண்ணிற ஒளி பச்சை நிற ஒளியாக மாற்றமடையும். நீல நிற ஒளியின் வழியாக வெண்ணிற ஒளி பயணம் செய்யும் போது, அவ்வெண்ணிற ஒளி மஞ்சள் நிற ஒளியாக மாற்றமடையும்.

இது போன்று வெவ்வேறு விதமான நிறமுள்ள ஒளிகளைப் பயன்படுத்தி, வெண்ணிற ஒளியினை வெவ்வேறு நிறமுள்ள ஒளியாக மாற்றலாம்.

நான் வெளியிட்டுள்ள இவ்வாய்வினை நீங்கள் செய்து பார்க்க விரும்பினால், ஒரு வெண்ணிற விளக்கு மற்றும் ஒரு சிவப்பு நிற விளக்கு இரண்டையும் எடுத்துக் கொண்டு ஒரு இருட்டறைக்கு செல்லுங்கள். அங்கு முதலில் சிவப்பு நிற விளக்கினை எரிய விடுங்கள். விளக்கிலிருந்து வெளிவரும் சிவப்பு நிற ஒளியினை உங்கள் விரலால் தடுங்கள். அப்போது உங்கள் விரலின் நிழல் திரையில் கருமை நிறத்தில் தென்படும். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் ஒளி செல்லும் பாதையில் தடை ஏற்படும் போது, அந்தத் தடை கருமை நிற நிழலாகத் தென்படும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

இந்த சூழலில் அதே அறையில் வெண்ணிற ஒளியினை எரிய விடுங்கள். இயற்கை மறைத்து வைத்திருக்கும் அறிவியல் உங்கள் கண் முன்னே தெரிய ஆரம்பிக்கும். எப்படியெனில் வெண்ணிற ஒளி அந்த அறையில் ஒளிர ஆரம்பித்தவுடன், கருமை நிறமாகக் காட்சியளித்த உங்கள் விரலின் நிழல் பச்சை நிற நிழலாக காட்சியளிக்கும்.

நீங்கள் அந்த இருட்டறையில் சிவப்பு நிற ஒளி மற்றும் வெண்ணிற ஒளி மட்டுமே பயன்படுத்தியிருக்கும் போது பச்சை நிற நிழல் அந்த அறையில் எப்படி வந்தது என்பது தான் அறிவியல் மறைத்து வைத்திருக்கும் உண்மை.

ஆராய்ச்சியாளர்கள், ஆய்வு மாணவர்கள் என்னுடைய ஆய்வுக் குறிப்புகளை கொண்டு இயற்பியலில் வெண்ணிற ஒளி தொடர்பான பல ஆய்வுகளை புதிய பாதையில் தொடர வழிவகுக்கும் என்று எண்ணி கீற்று இணைய இதழ் முலம் தங்களுடன் இனணக்கின்றேன்

- வெ.கந்தசாமி