மயிரைவிட மெல்லிய ஊசியை தோலில் செருகி சிகிச்சை செய்வது அக்குபங்க்சர் முறை. சீனாவில் பிரபலமாகக் கையாளப்படும் இந்த சிகிச்சை உலகெங்கும் இப்போது பரவலாகிக்கொண்டிருக்கிறது.

ரஷ் பல்கலைக்கழகம் குழந்தைகளுக்கு வலியைக் குறைக்கவும் வாந்தி மயக்கம் போன்றவற்றை உடனே நிறுத்தவும் அக்குபங்க்சர் சிகிச்சையை மேற்கொல்வதில் நல்ல நிவாரணம் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது.

காரணம் தெரியாத ஒற்றைத் தலைவலி, பெண்களின் மாதாந்திர வலி, ஆர்த்திரிட்டிஸ், கீழ் முதுகு வலி போன்ற நோய்களுக்கு அக்குபங்க்சர் செய்யலாம் என்று நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் ஹெல்த் நிறுவனம் ஏற்கனவே சிபாரிசு செய்திருக்கிறது. இப்போது குழந்தைகளுக்கும் அதை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறது.

உடலில் ரத்தக் குழாய்களில் இரத்தம் பாய்வது போல, நாடி எனப்படும் கண்களுக்குத் தென்படாத குழாய்களில் ஒரு வித ஆற்றலும் பாய்கிறது அதன் பெயர் கி என்று சொல்கிறார்கள். அதன் ஓட்டம் தடைபடுவதால் நோய் வரலாம் என்றும், சில இடங்களில் அதன் பாதையை மாற்றி வைத்தால் நிவாரணம் கிடைக்கும் என்றும் மூவாயிரம் வருடங்களுக்கு முந்தைய சீன மருத்துவம் கூறுகிறது. கி அந்த ஆற்றலை திசை திருப்பவும் தடுக்கவும் மெல்லிய ஊசியை குறிப்பிட்ட நாடிகளில் புகுத்துவது இதன் தத்துவம்.

- முனைவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)