விலங்குகளில் நிகழ்த்தப்பட்ட ஆய்வின்படி மன உளைச்சலுக்குக் காரணமானது glucocorticoids என்னும் ஹார்மோன். இது அட்ரீனல் சுரப்பியினால் சுரக்கப்படுகிறது.Stress

இந்த Glucocoriticoids விரைவாக செயல்பட்டு மூளையில் சுரக்கும் இனப்பெருக்க ஹார்மோன் GnRH ஐ தடை செய்கிறது. GnRH என்பது ஒரு செக்ஸ் ஹார்மோன். Glucocorticoids செக்ஸ் ஹார்மோன் சுரப்பதை தடைசெய்வது மட்டுமல்லாமல், இனப்பெருக்கத்திற்கு முட்டுக்கட்டை போடும் GnIH என்னும் ஹார்மோனை மேலும் மேலும் சுரக்கச்செய்து இனப்பெருக்கத்திற்கு இரட்டைத்தாழ்ப்பாள் போடுகிறது.

2000 ஆம் ஆண்டில்தான் இனப்பெருக்கத்திற்கு முட்டுக்கட்டை போடும் இந்த புதிய GnIH ஹார்மோன் கண்டுபிடிக்கப்பட்டது. இது GnRH ன் செயல்பாட்டிற்கு எதிராக செயல்பட்டு இனப்பெருக்கத்தை மேலும் மேலும் தடைசெய்யக்கூடியது. இதுவரை பறவையினங்களில் மட்டுமே இருப்பதாக அறியப்பட்ட இந்த GnIH ஹார்மோன் தற்போது மனிதன் போன்ற பாலூட்டிகளிலும் இருப்பது அறியப்பட்டுள்ளது.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிஞர்கள் இந்த புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். GnRH ன் தூண்டுதலால் பிட்யூட்டரியில் சுரக்கும் gonadotropins, luteinizing hormone, follicle ஆகியவை சுரப்பது குறைந்து போகிறது. இதனால் ஆணின் விதைப்பைகளில் சுரக்கப்படும் testosterone, பெண்ணின் ஓவரிகளில் சுரக்கப்படும் estradiol ஆகியவற்றின் அளவு குறைகிறது. விளைவாக,. விந்தணுக்களின் எண்ணிக்கை குறைகிறது. அண்டம் வெளியிடுதல் பாதிப்படைகிறது. இனப்பெருக்க ஈடுபாடும் குறைந்து போகிறது.

கருத்தரிப்பதற்கான சிகிச்சைக்கு உள்ளாகும் ஒருவருக்குக்கூட ‘தாம் இந்த சிகிச்சை செய்துகொள்ள வேண்டியுள்ளதே’ என்கிற மன உளைச்சல் இருக்குமல்லவா? அடைத்துவைத்து வளர்க்கப்படும் மிருகங்களுக்குக்கூட மன உளைச்சல் ஏற்பட்டு அவற்றின் இனப்பெருக்கம் குறையும் வாய்ப்பு உள்ளது.

மன உளைச்சல் ஏற்படும் சமயங்களில் இனப்பெருக்கச் செயல்களில் ஈடுபடுவது பயனற்றது என்று இந்த ஆய்வாளர்களில் ஒருவர் கருத்து தெரிவிக்கிறார். இது ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து அல்ல. ஏனெனில் ‘வறுமையினால் ஏற்படும் மன உளைச்சலுக்கு மருந்தாகத்தான் இனப்பெருக்கச் செயல்களில் இந்தியர்கள் ஈடுபட்டு மக்கள்தொகையை அதிகரிக்கிறார்கள்’ என்பது மக்கள்தொகைப் பெருக்கத்தை ஆராயும் வல்லுநர்கள் கருத்து ஆகும்.

இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/06/090615171618.htm

தகவல்: மு.குருமூர்த்தி