மாங்காய், புளியங்காய் போன்றவற்றில் கலந்துள்ள அமிலத் தன்மை காரணமாக பற்கள் கூசுகின்றன. இவற்றைக் காய்களைக் கடிக்காமலேயே பல்லில் கூச்சம் ஏற்பட்டால் பற்கூழ் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். பற்கூழில் நரம்புகள், ரத்த நாளங்கள், நிணநீர்க் குழாய்கள் போன்றவை உள்ளன. சொத்தை நோயால் பற்கள் பாதிக்கப்படும் போதும், விபத்துகளின் போதும் பற்கள் உடைந்துவிடும்போது பற்கூழ் சேதமடைவதால் பற்கூச்சம் ஏற்படுகிறது.