பட்டியலின மக்களுக்கான எஸ்.சி, எஸ்.டி வன் கொடுமைச்சட்டத்தை நீர்த்துப் போகச் செய்த மத்திய அரசின் திருத்தத்திற்கு எதிராக, நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு - 8 தோழர்களின் உயிரைப் பலிகொடுத்த பிறகு, இப்போது SC And ST (Prevention Of Atrocities) Act இல் மீண்டும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் பாது காக்கப்படும் என்ற நம்பிக்கை தோன்றியுள்ளது.

north indian brahminsபட்டியலின மக்களின் இந்த உரிமை மீட்புக்கு எதிராகவும், அரசு வேலை வாய்ப்புகளிலும், பதவி உயர்வுகளிலும் பட்டியலின மக்களுக்கு உள்ள இடஒதுக்கீட்டு உரிமைகளை நிறுத்தக்கோரியும் வடமாநிலங்களில் அகில இந்திய பந்த் நடத்தப் பட்டுள்ளது. 06.09.18 இல் இந்தப் பார்ப்பன ஆதிக்க வெறிப் போராட்டம் நடந்துள்ளது.

இந்தப் போராட்டங்களைப் பிற்படுத்தப் பட்டோர் நடத்துவதாகச் செய்தி ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின்றன. இன்றைய இந்து (07.09.18) நாளிதழில்கூட “எஸ்.சி, எஸ்,டி சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு - வடமாநிலங்களில் முழு அடைப்பு” என்று உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. உண்மையில் இந்தப் போராட்டங்களை நடத்துபவர்கள் பார்ப்பனர்-களே. வடமாநிலங்கள் முழுவதும் இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்த அமைப்புகள் இரண்டு.

1.Samanya Pichhda Alpsankhayak Kalyan Samaj (SAPAKS) 2.Brahma Samagam Sawarna Jankalyan Sangathan's இவை ஒவ்வொன்றும் நூற்றுக்கணக்கான சிறுசிறு அமைப்புகளை ஒருங்கிணைத்துள்ளன. SAPAKS என்ற அமைப்பின் தலைவர் ஹிராலால் த்ரிவேதி எனும் பார்ப்பனர். இவர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். அந்த அமைப்பைத் தொடங்கியவர் $ ராஜீவ் ஷர்மா எனும் பார்ப்பனர். பிராமண சமாஜ ஷவர்ண ஜனக் கல்யாண் சங்கதன் என்ற அமைப்பின் தலைவர் தர்மேந்திர ஷர்மா. பார்ப்பனர்கள்தான் இயக்குநர்கள், தலைவர்கள் எல்லாப் பொறுப்பு களிலும் இருக்கிறார்கள்.

பார்ப்பனர்களை அடுத்து பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் இடம் பெறாத முன்னேறிய ஜாதிகளான இராஜ்புத், ஜெயின், அகர்வால் போன்ற ஷத்திரியர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஜாதியினர் பொறுப்பாளர்களாக உள்ளனர். இவர்களை அடுத்து சில பிற்படுத்தப்பட்ட ஜாதிச்சங்கங்களும், இஸ்லாமியர்களும் கூட்டணியாக இணைந்துள்ளனர். ஆக, பட்டியலின, பழங்குடி மக்களைத்தவிர மற்ற அனைவரோடும் கூட்டணி வைத்துக் கொண்டு, கலவரத்தைத் தொடங்கியுள்ளனர்.

இது மிகவும் ஆபத்தான போக்கு. பீகாரில், Jan Adhikar Party Loktantrik என்ற அமைப்பை நடத்தும் யாதவ் என்ற பிற்படுத்தப் பட்ட ஜாதியைச் சேர்ந்த பப்புயாதவ் என்ற பாராளு மன்ற உறுப்பினர், இந்த பார்ப்பனக் கூட்டணியை எதிர்த்துள்ளார். தனது அமைப்பை இந்தப் போராட்டங்களைப் புறக்கணிக்க வைத்துள்ளார். அதனால், போராட்ட நாளில் அவர் நடுரோட்டில் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். பட்டியலின மக்களின் உரிமையை ஆதரிக்கும் பிற்படுத்தப்பட்ட ஜாதி அமைப்புகளும் இருக்கின்றன என்பது நம்பிக்கை தரும் செய்தி.

வடமாநிலங்களில் பார்ப்பனர்களோடு கைகோர்த்திருப்பவர்கள் பார்ப்பனர்களுக்கு இணையான முன்னேறிய ஜாதிகள்தான். அவர்கள் தான் போராட்டத்தை நடத்துகிறார்கள். அதேசமயம், பார்ப்பனர்களின் சூழ்ச்சி அறியாத பல பிற்படுத்தப் பட்ட அமைப்புகளும் இணைந்துள்ளன. இதே அணுகுமுறையைத் தமிழ்நாட்டில் டாக்டர் இராமதாஸ் தொடங்கி வைத்தார். ஆனால் வெற்றிபெற முடியவில்லை. ஒருவேளை இப்போது மீண்டும் அவர் முயற்சி எடுக்கலாம். டாக்டர் இராமதாஸ் அவர்களோடு தொடர்பு கொள்ள முடிந்த தலைவர்கள், அவரோடு நேரடியாகப் பேசி அத்தகைய முயற்சிகளைத் தடுக்கலாம்.

அவரையும் அந்த அமைப்பையும் ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற உறுதிகொண்ட முற்போக்கு அமைப்புகளில் உள்ள தலைவர்களும், தோழர்களும், டாக்டர் இராமதாஸ் முயற்சிக்கு முன்பு முந்திக் கொள்ள வேண்டும். பிற்படுத்தப்பட்ட, இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகளைத் தொடர்பு கொள்ளுங்கள். அவர்களின் அச்சங்களுக்கும், அறியாமைகளுக்கும் விளக்கங்களைக் கூறுங்கள். வடமாநிலப் பார்ப்பன ஆதிக்கக் கூட்டணிகளுக்கு எதிராக - தாழ்த்தப் பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர் - இஸ்லாமிய - கிறிஸ்தவக் கூட்டணியை உருவாக்க உடனடியாக முயற்சி எடுங்கள். பார்ப்பனர்களைத் தனிமைப்படுத்தி, மண்ணின் மைந்தர்களின் ஒருங்கிணைப்பை உருவாக்கப் போராடுங்கள். தேர்தல் கணக்குகளை முற்றிலும் மறந்து செய்ய வேண்டிய பணி இது.

economictimes.indiatimes.com/articleshow/65707813.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst

https://www.firstpost.com/india/bharat-bandh-bihar-mp-pappu-yadav-claims-he-was-attacked-in-muzaffarpur-police-deny-attack-says-no-proof-given-5133531.html