பெண்விடுதலை என்ற தளத்திலேயே மனமாரப் பாராட்வேண்டியதற்கான காரணங்களும் - கடுமையாக எதிர்க்க வேண்டியதற்கான காரணங்களும் ஒன்றாக நிற்கும் படம் தரமணி.

சுயமாக முடிவெடுத்து வாழும் ஒரு பெண்ணின் மனநிலை -  அவரது உடல்மொழி - உடைமொழி - நடைமொழி - முகத்தில் வெளிப்படுத்த வேண்டிய உணர்ச்சிகள் - வெளிப்படும் சொற்கள் என ஒரு விடுதலைப் பெண்ணைக் கண்முன் காட்டுகிறார் ஆண்ட்ரியா.

திருமணம் ஆன அல்லது கமிட்டட் ஆன பணிபுரியும் பெண்கள் தங்கள் துணைவரிடம் இருந்து வாங்கும் சந்தேகக் கேள்விகள், சந்தேகப் பார்வைகள், பாதுகாப்பு என்ற போர்வையில் பெண்ணின் சமூகவலைப் பக்கங்களையும், செல்களையும் நோட்டம் விடும் புத்தி, இவள் நமக்கே சொந்தமான ஒரு ஜடம், ஒரு பொருள் என்ற சிந்தனை என்று ஆண்களின் அனைத்து மனநோய்களையும் அட்டகாசமாகக் கொளுத்திப் போட்டுள்ளனர்.

மிக மிக முக்கியமாக, ஆண்ட்ரியாவுக்கும் அவரது துணைவருக்கும் இடைவேளை நேரத்தில் வரும் பிரிவுச் சண்ஆைண்கள் அனைவருக்கும் ஒரு பாடம்.  காதலனாக இருப்பவன் கணவன் என்ற இடத்திற்கு வரும் போது - அவனுக்குள் உறங்கிக்கிடந்த மிருகங்கள் விழித்துக்கொள்கின்றன.  அதுவரை அவனுக்குச் சமூகம் சொல்லிக்கொடுக்கப்பட்கற்பு, கலாச்சாரங்கள் அந்த மிருகங்களை வழிநடத்து கின்றன.  அவற்றைத் துணிச்சலுடன் எதிர்த்து அடித்து விரட்டுகிறார் ஆண்ட்ரியா.  அந்த சண்டைக் காட்சியை ஆண்ட்ரியா - வசந்த்ரவி - தேனி ஈஸ்வர் - ராம் கூட்டணி மிக அருமையாக நடத்திக் காட்டி இருக்கிறார்கள்.

“அவன்கூடப் படுக்கணுமா? வேண்டாமாங்கறதை முடிவு பண்ண வேண்டியது நான் தான்... அவன் இல்ல...” என்பது போன்ற ‘ஷார்ப்பான’ வசனங்கள் பல இடங்களில் வருகின்றன. பெரும் பாலான வசனங்கள் ‘ஷார்ப்புக்கும்’ மேல...

மார்ஃபிஸைப் போட்மட்டையாவது மட்டுமே மகளிர் விடுதலையா?

ஆண்களின் homosexuality, பெண்களின் Masturbation பற்றியெல்லாம் பேசப்படுகிறது. ஒரு பெண் ஸ்டைலாக சிகரெட் பத்த வைப்பது, புகைப்பது, அதைப் பார்த்துப் பதறும் ஆணின் கேள்விகள், அதற்கு ஆண்ட்ரியாவின் பதில்கள், Morpheus Brandy, FulBottle ஐ  ராவாகக் காலி பண்ணுவது போன்றவை வரவேற்கத்தக்க காட்சிகள்.

இப்படியெல்லாம் பாராட்டிவிடலாம் என்றால், தொடக்கம் முதல் இறுதி வரை கதையுடனேயே வரும் பல காட்சிகள் கடுமையான கோபத்தை உண்பண்ணுகின்றன.

படத்தின் இறுதியில் சரக்குபாட்டில்களை ஆண்ட்ரியாவின் மகன் மொத்தமாகத் தேடி எடுத்து வெளியே போடுகிறான். ஒரு தாய் தண்ணி அடிக்கக்கூடாது என்று மகனின் பார்வையில் விளக்கப் படுகிறது. மார்ஃபியஸைப் போட்விட்மட்டையாவது மட்டுமே மகளிர் விடுதலை அல்ல. அதேசமயம் அது  ஒழுக்கக்கேடும் அல்ல.  ஆனால், அது தவறு/ ஒழுக்கக்கேஎன்றுதான் முடிக்கிறார் இயக்குநர்.

வீட்வேலைகள் பெண்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டதா?

நட்பு என்ற இடத்திலிருந்து, காதலன், கம்பேனியன் என்ற நிலைக்கு கதாநாயகன் வருகிறான். அந்த நேரத்தில், நாயகியை அலுவலகத்திற்குக் கொண்போய் விடுவது, மாலையில் பிக் அப் பண்ணுவது, வீட்வேலைகள் சிலவற்றைச் செய்வது, குழந்தையைப் பராமரிப்பது போன்ற வேலைகளைச் செய்கிறான். அவை கிண்டலாகவே காட்டப்படுகிறது.

இதே வேலைகளை ஒவ்வொரு பெண்ணும் பல நூற்றாண்டுகளாகச் செய்து வருகிறாள். அந்த வரலாறு இயக்குநரின் கண்ணுக்குத் தெரியவில்லையா? வீட்டைப் பராமரிப்பது, குழந்தைகளைப் பராமரிப்பது இவை எல்லாம் பெண்ணுக்கே உரியவை என்ற ஆணாதிக்கச் சிந்தனைதான் ராம் அவர்களைக் கிண்டல் செய்யச் சொல்லியுள்ளது. ‘ஹவுஸ் ஹஸ்பெண்ட்கள்’ பற்றி 2015 ல் ‘கி அன் கா’ என்று இந்தியில் ஒரு படம் வெளியானது. அதையெல்லாம் ராம் பார்க்க வேண்டும்.

Taramani 600 copyசெல்போனில் அரட்அைடிக்கும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்களா?

குறிப்பாக, பெண்கள் ஒழுக்கமில்லாதவர்கள், எப்பொழும் ஆணின் உறவுக்காக ஏங்கிக் கிடப்பவர்கள் என்ற தவறன கருத்தை மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் ராம். அதிலும் திருமணம் ஆன பெண்கள் கணவனுக்குத் தெரியாமல் வேறு ஏதோ ஒரு ஆணுடன் உடல் உறவுக்காக மட்டுமே தொடர்புவைத்துள்ளார்கள். பெரும்பாலும் சபலப்புத்தி உள்ளவர்கள் என்று சித்தரிக்கப் பட்டுள்ளது. இதைத்தான் இந்து மதத்தில் பார்ப்பனர்களின் ஆயுதமான மனுசாஸ்திரமும் கூறுகிறது.

“மாதர்கள் நிலையான கற்பு இல்லாதவர்கள். நிலையான மனம் இல்லாதவர்கள். நம்பக் கூடாதவர்கள். இந்தத் தன்மைகளை இயற்கையாக உடையவர்கள்.” (மனுசாஸ்திரம்: 9 : 15)

“மாதர்களின் சுபாவமே மனிதர்கட்கு சிருங்கார சேஷ்டைகளினால் தோஷத்தையுண்பண்ணும்.” (மனுசாஸ்திரம்:2 : 213)

இப்படி பெண்களைப் பற்றி இந்து மதம் இழிவாகக் கூறியுள்ளதைத்தான் நவீனத் தொழில் நுட்பங்களின் உதவியோஇயக்குநர் ராம் வெளிப்படுத்தியுள்ளார். பெண்கள் இயல்பாக மற்றொரு ஆணிடம் இப்படிப் பேசுவதை பாசிட்டிவாகக் காட்டவேண்டிய ஒரு காட்சியில்கூ‘சபலம்’ என்ற சொல்லைத்தான் பயன்படுத்துகிறார்.

திருமணங்களைத் தாண்டிய உறவுகள்

முதலில், கணவரைத் தாண்டி வேறொரு ஆணுடன் இயல்பாகப் பழகுபவர்கள் அனைவரையும் சந்தேகப்படவைக்கிறார் இயக்குநர். அடுத்து அப்படிக் கணவனைத் தாண்டி உடல் உறவுக்கோ - மனதளவிலோ பழகுவதையோ தவறு என்கிறார். ஒரு ஆணோ - பெண்ணோ அவ்வாறு தமக்கு விதிக்கப் பட்திருமண உறவைத் தவிர மற்ற ஒரு உறவைத் தேடுவது எந்த வகையில் தவறு என்பது விளங்கவில்லை.

ஆண்ட்ரியா தன் முதல் கணவனிடமிருந்து விலகுவதற்குச் சொல்லப்படும் காரணம், அவருக்கு ஆண்ட்ரியாவைப் பிடிக்கவில்லை. அவரை ஆண்ட்ரியா இம்ப்ரஸ் பண்ணவில்லை. உடனே அந்தத் திருமண உறவு முறிந்து விடுகிறது.

ஒரு ஆணுக்குத் தனது பெண் துணையைப் பிடிக்கவில்லை என்றால், அவளுடன் வாழும் போதே அவனுக்குத் தேவையான வேறு ஒரு உறவை அவன் தேடிக்கொள்ளலாம். ஆனால், அதேபோலப் பெண்கள் ஒரு மாற்று உறவைத் தேடினால் அதைத் தவறு என்றும் ‘சபலம்’ என்றும் கூறுகிறார் இயக்குநர். ஆண்ட்ரியாவின் கேரக்டரில் மட்டும் இந்த ‘மாற்று உறவு’ என்ற நிலை பாசிட்டிவாக விவாதிக்கப்படுகிறது. அதேசமயம் இலட்சக்கணக்கான பெண்களின் வாழ்க்கைநிலையில் அதே கேரக்டர் கொச்சைப்படுத்தப்படுகிறது.  

கோவையில் ஜாதி, மத வெறியர்கள் நடத்தும் ஒரு வாட்ஸ்அப் குழுவில் இந்த 2017 ஏப்ரல் மாதத்தில், வந்த பதிவு இது. இதைப் பல தோழர்கள் முகநூல் பக்கங்களிலும் அம்பலப்படுத்தினர்.

“10 , 12  ஆம் வகுப்புத் தேர்வுகள் முடிந்து விட்டன. பெண் பிள்ளைகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். செல்போனில் பேசினால் கவனிக்கவும். காலம் கெட்டுக் கிடக்குது. தேர்வு முடிந்து விட்இந்த நேரம்தான் கண்நாதாரி நாய்களின் நாடகக் காதல் அரங்கேறும் காலம். சில்லறைப் பயல்கள் (தி.க, கம்யூனிச, வி.சி.க, டூமீழ் போராளிகள்) ரோட்டில் தரி கெட்டுத் திரிகின்றனர். இந்தத் திருட்நாய்களின் முகத்தையும், தலையையும் பார்த்தாலே தெரியும்.

முக்கியமாக, கம்ப்யூட்டர் கிளாஸ், ஸ்போக்கன் இங்கிலீஸ் கிளாஸ் போன்றவற்றிற்கு அனுப்ப வேண்டாம். ஏனென்றால் அங்குதான் இதுபோன்ற வேலைகள் சுலபமாக நடக்கிறது. அதேபோல் வேறு ஜாதியைச் சேர்ந்த தோழிகள் யாரும் வேண்டாம் என நாசூக்காக எடுத்துக்கூறவும். ஒரு வேளை வேறு ஜாதியில் தோழிகள் இருந்தால் அவர்கள் வீட்டுக்குச் செல்வது மற்றும் அவர்களுடன் வெளியில் செல்வது போன்றவற்றை அனுமதிக்க வேண்டாம். நன்றி சொந்தங்களே.”

இந்தக் கேவலமான - பெண்களைக் கொச்சைப்படுத்தும் அறிவிப்பைத்தான் தரமணி படம் வேறுவிதமாகச் சொல்கிறது. எழுத்தில் வந்த பதிவைக் காட்சிப்படுத்தியுள்ளது.

சேலை, துப்பட்டாவில் காப்பாற்றப்படும் பண்பாடுகள்

அஞ்சலியின் கேரக்டர் மூலமாகவும் பெண்கள் மிகவும் கேவலப்படுத்தப் பட்டுள்ளார்கள். சுடிதாரின் துப்பட்டாவுக்குப் பின்குத்திக் கொண்டும், சேலை கட்டிக்கொண்டும் சென்னையில் வேலை செய்கிறார் அஞ்சலி. அலுவலகக் காரணமாக வெளிநாசென்றதும், தன் நண்பனை அல்லது காதலனை மறந்து விடுகிறாள். அப்போது அவளது கேரக்டர் மாறுவதை அஞ்சலியின் ஆடைகள் நவீனமாக மாறுவதை வைத்துத் தான் காட்டுகிறார் இயக்குநர்.  

வாழ்க்கையைப் பறிகொடுத்து வந்த அஞ்சலியோபடுத்து, அதை செல்பேசியில் படமெடுத்து, வெளியிடுவேன் என்று மிரட்டுபவன் இன்னொரு பெண்ணுக்கு நல்லவனாம், நாயகனாம்... கொடுமை.

சாவித்திரி, நளாயினி, கண்ணகி வரிசையில் ஆண்ட்ரியா...

“கல்லானாலும் கணவன். புல்லானாலும் புருஷன்” என்ற இந்து மத - ஆணாதிக்கப் புத்தி தான் க்ளைமாக்ஸாக முடிக்கப்பட்டுள்ளது. இறுதிக் காட்சியில் வசந்த்ரவி திருந்தி ஆண்ட்ரியாவோவாழ வருகிறான். ஆனால், ஆண்ட்ரியா அவனை ஏற்றுக் கொள்வதற்கு எந்த ஒரு வலுவான காரணமும் கூறப்படவில்லை. வெறும் ‘அன்பு’ மட்டும் சொல்லப்படுகிறது.

ஏற்கனவே, ஒரு பெண்ணுடன் கதாநாயகனுக்குக் காதல், பிறகு ஆண்ட்ரியாவுடன் லிவிங் டுகெதர், அவளைச் சந்தேகப்பட்டு, அவளை அடிக்க வேண்டும், கொலைசெய்ய வேண்டும் என்று வெறி பிடித்துத் திரிகிறான். பிறகு மீண்டும் அஞ்சலியுடன் படுத்துப் படம் எடுக்கிறான். எல்லாம் முடிந்து மீண்டும் ஆண்ட்ரியாவிடம் கெஞ்சுகிறான். அவரும் ஏற்றுக்கொள்கிறார். இங்குதான் இயக்குநரும் ஒரு ஆண் என்பதை உறுதிப்படுத்துகிறார்.

“கணவன் துராசாரமுள்ளவனாக விருந்தாலும். வேறு பெண்களோடு தொடர்புடையவனாக இருந்தாலும், நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும், பதிவிரதையான பெண்ணானவள் அவனைத் தெய்வத்தைப் போற் பூசிக்க வேண்டியது.” (மனுசாஸ்திரம்: 5 : 154)

"கணவன் சூதாடுகிறவனாயிருந்தாலும், குடிகாரனாக இருந்தாலும், நோயாளியாக இருந்தாலும், அவனுக்கு மனைவி கர்வத்தால் பணிவிடை செய்யாவிட்டால் அவளுக்கு அலங்காரம், துணி மணிகள், படுக்கை இவற்றை கொடாமல் மூன்று மாதம் நீக்கி வைக்க வேண்டியது.” (மனுசாஸ்திரம்: 9 : 78)

இதைத்தானே இந்து மதவாதிகளும், பார்ப்பன மனுவாதிகளும் பலநூற்றாண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்கள்? இந்து மதத்திலுள்ள கோடிக்கணக்கான ஆண்களும் பெண்களும் தங்களது பண்பாடுகளாகக் கடைபிடிப்பதும்  இவற்றைத்தானே? சாவித்திரி, நளாயினி, கண்ணகி போன்ற புராண, இதிகாச, காப்பியக் காலத்துப் பெண்களும் இதைத்தானே செய்து தொலைத்தாகள்? இதில் என்ன பெண்விடுதலை வாழ்கிறது?

‘விரட்டுவது’ தான் காதலா?

லிவிங் டுகெதர் வாழ்க்கைமுறையை இயல்பாகக் காட்டப்படுவது பாராட்ட வேண்டியது. அதேசமயம் லிவிங் டுகெதர் முறையால் தான் ஆண்ட்ரியா இவ்வளவு தொல்லைக்கு ஆளாகிறார் என்றும் புரிந்துகொள்ள நேரிடும் அளவில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

நீ... வேண்டாம் போய்விடு...என்று என்று சொல்லும் பெண்ணை விடாப்பிடியாக விரட்டி, விரட்டி, கெஞ்சிக் கெஞ்சி, அவளது மனதை மாற்றுவதுதான் காதலா? பெண்ணின் மறுப்பைக் கண்ணியத்துடன் ஏற்பதில் காதல் இல்லையா? விருப்பமில்லாத பெண்ணைத் தொடர்வது நமது சுயமரியாதைக்கும் கேடானது; பெண்ணின் சுயமரியாதைக்கும் கேடானது என்ற அறிவைச் சொல்லித் தரவே இயக்குநர் ராம் போன்றவர்கள் பயன்பட்டிருக்கவேண்டும்.

“வேண்டாம்..., விட்விடு... என்று விலகும் ஒரு பெண்ணை - ஒரு உயிரை - விரட்டுவதும், கெஞ்சுவதும் - வெட்டுவதும், ஆசிட் அடிப்பதும் ஒன்றுதான். சத்தியவான் சாவித்தி, பூம்புகார், சகலகலா வல்லவன்,  த்ரிஷா இல்லேனா நயன்தாரா, அன்பானவன்- அசராதவன் - அடங்காதவன்  படங்களின் வரிசையில் தரமணியும் இடம்பெறுவது வருத்தமளிக்கிறது.  .