தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கடந்த ஆண்டு நடத்தியது போலவே இந்த ஆண்டும் கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டியை நடத்திடத் திட்டமிட்டுள்ளது.

முதல் பரிசு : ரூ.5,000
இரண்டாம் பரிசு : ரூ.3,000
மூன்றாம் பரிசு : ரூ.2,000

மற்றும் தேர்வுபெறும் சிறந்த சிறுகதை ஒவ்வொன்றிற்கும் ரூ.250 பரிசளிக்கப் படுவதோடு, கதைகள் சிறந்த இலக்கிய இதழ்களில் வெளியிடப்படும். இந்த ஆண்டு பரிசுத்தொகையை, பிரபல திரைக்கவிஞர் நா.முத்துக்குமார் வழங்குகிறார்.

விதிமுறைகள்:

ஒருவரே எத்தனை கதைகளை வேண்டுமானாலும் அனுப்பலாம்.

கதை எழுதியவர், அதுதனது சொந்தக் கற்பனையே என்றும் வெளியிடப்படாதது என்றும் உறுதிதந்து, பெயரைத் தனித்தாளில் முகவரி, தொலைபேசி எண்ணுடன் தரவேண்டும். (கதைப்பக்கங்களில் எழுதியவர் பெயர் முகவரி இருக்கக் கூடாது)

வெளிநாடுகளில் இருப்போர் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு, கதைகளை அனுப்பலாம்.

சிறுகதைகள் வரவேண்டிய கடைசி நாள் : 11-09-2008

சிறுகதைகளை அனுப்ப வேண்டிய முகவரி:
----------------------------------------------------------------------
நா.முத்து நிலவன்,
(துணைப் பொதுச்செயலர் -தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்)
96, சீனிவாச நகர் 3ஆம் தெரு,
புதுக்கோட்டை – 622 004
செல்பேசி : 94431-93293