நிச்சயங்கள் எதுவுமில்லா
ஒரு முடிவினை எடுத்துவிடுகிறாய்
விட்டேத்தியான உன் பதில்களில்
தொங்கிநிற்கும் எச்சரிக்கவியலா பயம்..

பேரின்ப ராஜ்யத்தின் பெருவெளிகளில்
உலவிக்கொண்டிருக்கும் உன் பொய்முகங்கள்
ஒன்றைபலவாய் பெருக்கிக்கொள்ளும்
கற்பித உலகமது..

உன் சுயநல தீவுகளில் நீ
குறிப்பிட்டுக்கூறிவிடுமளவு
சில பொது நல செய்திகளிருக்கலாம்
அவை உன் வாழ்நாள் சாதனையாகலாம்
அதையே அல்லது அவற்றையே நீ
எப்போதும் யாரைவிடவும் அதிகம் செய்ததாய் நம்பியும் விடுகிறாய்....

சில வேளைகளில் நீ ஒர்
அறுவெருப்பான புழுபோலவேபடுகிறாய் எனக்கு

என்னசெய்ய உலகம்
உன்போலவே சிலரையும் என்போல சிலரையும் கொண்டிருக்கிற்து.


ரிஷி சேது (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)