1.
பேசவேண்டியதை தவிர மற்றவையெல்லாம் பேசி விட்டு
தொலைபேசியை வைக்கும் போது
இருவரும் விடும் பெருமூச்சில் ஒளிந்திருக்கிறது காதல்...
*****************
நாம் ஒன்றாய் சுற்றும் போது எதிர்படும் என் நண்பர்களிடம்
உன்னை தோழியென்று அறிமுகப் படுத்த கஷ்டமாயிருக்கிறது
நீ எப்படி தான் சமாளிக்கிறாயோ....
*****************
யாருக்கும் தெரியாமல் எல்லாரும் காதலித்துக் கொண்டிருக்க
நான் உனக்கு தெரியாமல் உனையும்
நீ எனக்கு தெரியாமல் எனையும்
காதலித்துக் கொண்டிருக்கிறோம்.....
*****************
நமக்கிருவருக்கும் தனிமை வாய்க்கும் போது
எங்கே தோற்று விடுவோமோ
என பயந்து கொண்டு போட்டி போட்டுக் கொண்டு
பேசுகிறோம் அர்த்தமற்று...................
*****************
காதலை பறிமாறிக் கொள்வதற்கு முந்தைய
அந்த உணர்வை எவ்வளவோ
முயன்றும் வார்த்தைகளால் வடிக்க முடிவதில்லை தான்...
- கார்த்திக் பிரபு இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.