வந்து மோதிய அதிர்வில்
உருண்டை வந்தது
சுழன்ற பொழுதில்
சூத்திரம் பிறந்தது
விடாத கருப்பு சுற்றிலும்
ஆழமானது - தூரமானது
சுந்தர வடிவை வன சூட்சுமம்
சேர்த்தது
பட்டு ஊர்ந்து தவழ்ந்து மிதந்து
நீந்தி நீண்டு நின்று நடந்து
உயிர்கள் ஆனது
தந்திரம் தெரிந்தோன்
உயிர் சுமந்தலைந்தான்
காடுகளின் வழியே காலங்கள்
பிறந்தது
நிகழ்விலிருந்து விலகுதல்
ஒளியானது
நினைவிலிருந்து விலகுதல்
ஒலியானது

- கவிஜி