நான்கு கால் பாய்ச்சலில்
செல்கிறது காலக் குதிரை!
அந்த நாட்கள்
மீண்டும் வராதாவென
காலக்குதிரையின்
கடிவாளத்தை பற்றியிழுத்து
பின்னோக்கி செலுத்துகையில்
நம்மை உதைத்துத் தள்ளி
முன்னோக்கிப் பறக்கிறது
காலக் குதிரை!
இப்போது
நிகழ்காலம் கூட
இறந்த காலமாகிறது!
 
- பா.சிவகுமார்