முன்னிலும்
மௌனமாய்
கழிகிறதென் பொழுதுகள்..
விலக
நினைத்து விலகி
நடப்பவளை
விரைந்து அணைத்து
கேட்கிறாய்..
ஏனிப்படி?
கடமையென
காலம் கடத்துபவனை
காதல் விரும்புவதேயில்லை!

- இசைமலர்