பரந்த இந்த தேசத்தில்
எல்லோருக்கும்
நான் வேராக இருக்கவே
பேராவல் கொண்டு
முயன்று வருகிறேன்.
எனினும்,
சிலர் என்னை படர் கிளையெனவும்,
விழுதாகவும்,
பசுந்தளிர் பரவும் கொடியாகவும்,
இளம் பிஞ்சாகவும்,
நறுமலராகவும் ,
கனியாகவும்,
கனியுதிர் விதையாகவும்,
ஆகாயத்தை மறைத்துப் பந்தலிடும்
குடை மரமாகவும்,
பழுத்த இலையெனவும்
ஏன் காய்ந்து மக்கிடும்
சருகாகவும் ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஆனால்
நான் வேராக இருக்கவே ஆசைப்படுகிறேன்.
வேறாக அல்ல…

- முனைவர் சி.திருவேங்கடம், இணைப் பேராசிரியர், இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்