corona testingதெருக்களில் மடியும் கொரோனா நோயர்கள் ஆக்ஸிஜனுக்கு தள்ளாடுகிறார்கள். நூற்றுக்கணக்கானோர் அழுகை, நம்பிக்கையிழந்த மக்கள் திரளினர் சிகிச்சையைப் பெறுவதற்கு படுக்கைகளைத் தேடுகின்றனர். இறந்தோருக்கும் கண்ணியமான இறுதி நிகழ்வுகள் மறுக்கப்பட்டு அவர்களின் உடல்கள் ஆறுகளின் மீது அனாதையாக வீசப்படுகின்றன.

இந்திய அரசாங்கமானது இந்தியாவில் இந்த ஆண்டின் ஏப்ரல் முதற்கொண்டு கொரோனா நோயர்களின் எண்ணிக்கையின் கடும் ஏற்றத்திற்கு தயாராவதற்கு படுமோசமாகத் தவறியதற்கான காரணங்கள் பற்றி நிறையவே எழுதப்பட்டுவிட்டன.

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் துடுக்கான கர்வம், திறமையின்மை, எதிர் கருத்துகளுக்கு சகிப்பின்மை, தனது சொந்த விளம்பரத்துக்கு பெருவிருப்பம் ஆகியனவற்றை நாடளவிலான முன்னுரிமைகளுக்கு மேலாய் வைப்பதன் மீது குற்றச் சாட்டப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் விமர்சனத்தை திசை திருப்புவதற்கு சிக்கலின் இதயமாக நாட்டின் பலவீனமான சுகாதாரக் கட்டமைப்பே என்று அடையாளம் கண்டுள்ளார்கள்.

ஆம். இக்காரணிகள் அனைத்தும் உண்மையில் நடந்திருக்க வேண்டியதை காட்டிலும் கொரோனா பேரழிவை கட்டவிழ்த்து உள்ளதில் பாத்திர மாற்றியுள்ளன என்றாலும் உலகின் ஐந்தாவது பெரியப் பொருளாதாரத்தையும் இரண்டாவது பெரிய படையையும் கொண்டுள்ளதோடு விண்வெளி, அணு மற்றும் மருந்து சக்தியாக இருக்கும் ஒரு நாடானது (இந்தியா) இறந்தோரை எரிப்பதற்கு விறகையோ மூச்சுத் திணறும் குடிமக்களுக்கு ஆக்ஸிஜன் போன்ற அடிப்படையைக் கூட உதவாதது ஏன் எனும் உண்மையான கதையை எதுவும் கைக்கொள்ளவில்லை.

விடை மணிச் சுருக்கமானதே. நவீன இந்தியக் குடியரசானது பிரிட்டிஷ் காலனிய அரசின் மாளிகையின் மீதே கட்டப்பட்டு பரந்துபட்ட பெரும்பான்மையினரை கையறு நிலையில் விட்டுவிட்டு மிகச் சிறு எண்ணிக்கையிலான இந்தியர்களுக்கே பணியாற்றுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

அரசியல் மற்றும் நிர்வாகத்தின் மீதான மேட்டுக்குடியினரின் கட்டுப்பாடு இந்தியாவுக்கே உரிய தனித்துவமானது இல்லை எனும் அதே சமயத்தில் பல சிறப்புக் காரணிகளால் ஆளுவோருக்கும் ஆளப் படுவோருக்கும் இடையிலான பிரிவினை மிகவும் பூதாகாரமாக இருக்கிறது.

சாதிய அமைப்பை போன்ற ஒரு பாகுபாடு அதில் ஒன்று என்பது சந்தேகமில்லை. மக்கள் தொகையின் மிகப் பரந்துபட்ட பிரிவு மனிதனாகவே கருதப்படாத அளவுக்கு இந்தியச் சமூகத்தி்ற்குள் எவ்வித பரிவின்மையாக விளைகிறது.

மருத்துவர் பினாயக் சென் எனும் புகழ்பெற்ற மருத்துவர் பத்தாண்டுகளுக்கு முன் மனித உரிமைச் செயற்பாட்டுக்காக சத்தீஸ்கர் அரசாங்கத்தால் வழக்கு தொடுக்கப்பட்டார். அவர் இந்தியாவில் பரவலாக நிலவும் ஊட்டச்சத்து இல்லாமையை 'இனப்படுகொலை' தவிர வேறல்ல என்றார்.

வேறு சொற்களில் கூறுவதெனில் நாட்டில் அதிகாரத்தில் இருப்போரால் இந்தியக் குடிமக்களில் பெரிய பிரிவினர் முன்னதாக மரணமடையும் அளவுக்கு வேண்டுமென்றே ஆளாக்கப்படுகின்றனர் என்றே பொருள்படுத்துகிறார்.

இந்திய அரசாங்கத்தினுடைய அரசு எந்திரத்தின் திறமையின்மைகள் மீதே வழக்கமாக குற்றச் சாட்டப்படும் நிலையில் நல்ல மருத்துவர் 'இனப்படுகொலை' எனும் சொல்லை பயன்படுத்தி உயர்வு நவிற்சியில் அநேகமாய் ஈடுபடுகிறார் என்றே அவரது ஆதரவாளர்களே அப்போது எண்ணினார்கள்.

இந்திய மக்கள் தொகையின் அதிகமான பிரிவினரின் பரிதாபகரமான நலவாழ்வுக்கும் சுகாதார வசதிகள் அவர்களை அடையாமைக்குமான நிலையான விளக்கங்கள் என்பன நாட்டின் வளங்கள் பற்றாக்குறையுடன் இணைந்த அதிகார வர்க்க சோம்பலும் அரசியல் பாரா முகமுமே இருந்து வருகிறது.

இந்தியாவுடைய மக்கள் தொகையின் வயது வந்தோரில் முப்பது மூன்று விழுக்காட்டிற்கு மேற்பட்டோருடைய உடல் பருமன் அளவு (BMI- Body Mass Index) என்பது 18.5க்கும் கீழே என்பதே மருத்துவர் பினாயக் சென்னுடைய வாதம்.

இது ஊட்டச் சத்து இல்லாமையின் கடுமையையே குறிக்கிறது. மேலும் ஐந்து வயதுக்கும் கீழுள்ள 47 விழுக்காட்டினர் தமது வயதுக்குரிய எடையைக் காட்டிலும் குறைவாக இருக்கும் வகையில் ஊட்டச் சத்து இல்லாமல் இருக்கின்றனர். அதே சமயத்தில் புதிதாக பிறக்கும் குழந்தைகளில் 26 விழுக்காட்டினர் எடை குறைவாகவே பிறக்கின்றனர்.

இனப்படுகொலை எனும் பதத்தை மருத்துவர் பினாயக் சென் பயன்படுத்தியதற்கான காரண விளக்கம் என்னவெனில் ஊட்டச் சத்து இல்லாமையானது இந்தியாவின் மக்கள் தொகையில் சமச் சீராக இல்லாமல் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியினர் இடையே மிகவும் அதிகமாக உள்ளதாகும்.

அத்துடன் இந்தியாவின் குடிமக்கள் இடையேயான இவ்விரு பிரிவினரும் மக்கள் தொகையில் 29 விழுக்காட்டிற்கும் மேலாக இருக்கின்றனர். ஆனால் ஊட்டச் சத்து இல்லாமை எனும் வகையில் மக்கள் தொகையில் பாதிக்கும் மேலாக இருக்கின்றனர்.

இவர்களே நாட்டின் நோயர்களில் அது எலும்புருக்கி நோயராக இருந்தாலும் சரி மலேரியா நோயராக இருந்தாலும் சரி பேதி மற்றும் நிமோனியாவினால் குழந்தை இறப்பாக இருந்தாலும் சரி பெரும் எண்ணிக்கையில் இருக்கின்றனர் என்பது வியப்பில்லை.

இந்தியாவின் மக்கள் தொகையில் நாற்பத்தியொன்று விழுக்காட்டை உடைய இதர பிற்படுத்தப்பட்டோர் சாதியினரின் (OBC) வறிய பிரிவினர் இடையே ஊட்டச் சத்து இல்லாமை மற்றும் நோய்ச் சுமை மட்டங்களும் மிகவும் பின்தங்கி இல்லை.

இந்தியாவானது உலகளாவிய பசி குறியீட்டெண் (Global Hunger Index)2020ல் 107 நாடுகளில் 94ஆவது இடத்தில் இருக்கிறது. ருவாண்டா, நைஜீரியா, ஆப்கானிஸ்தான், லைபீரியா, மொசாம்பிக் மற்றும் சாட் உள்ளிட்ட பதிமூன்று நாடுகளே இந்தியாவுக்கு பின்னுள்ளன.

இந்தியா மீதான கொரோனாவின் பேரழிவுத் தாக்கத்திற்கான கட்டமைப்பு ரீதியான இரண்டாவது காரணம் என்னவெனில் நாட்டில் செல்வத்தின் வியக்கத்தக்க ஒன்று குவிப்பு ஆகும். இந்தியாவினுடைய மக்கள் தொகையின் உயர் மட்ட பத்து விழுக்காட்டினர் நாட்டின் மொத்த செல்வத்தில் 77 விழுக்காட்டை கொண்டிருக்கின்றனர். உலகிலேயே முழுமுதலான வறுமையில் இருப்போர் அதிக எண்ணிக்கையில் உள்ள நாட்டில்தான் இது.

இந்திய மேட்டுக்குடியினரின் இச்செல்வத்தின் பெருமளவு சூறையாடும் முதலாளியத்தின் (crony capitalism) மூலமும் பரம்பரைச் சொத்தின் மூலமும் அபகரித்துள்ளனர். அதிகாரத்தில் இருக்கும் ஒவ்வொரு அரசியல் கட்சியும் அவர்களுக்காகவே கொள்கைகளை வடிவமைத்து பெரும்பான்மை இந்தியர்களின் நலவாழ்வின் மீது அக்கறையே இல்லாமல் இருக்கின்றது.

எடுத்துக்காட்டாக இந்தியாவின் பொதுச் சுகாதாரச் செலவினமானது 2017-18ன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பில் வெறுமனே 1.28 விழுக்காடுதான். இது உலகிலேயே மிக குறைவான விழுக்காடுகளில் ஒன்று ஆகும். எழுபது ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து நிலையாக இருந்து வரும் வெட்ககரமான விவரம்.

விளைவாய் பொதுச் சுகாதார வசதிகள் தரமற்றவையாக இருக்கின்றன. இத்துடன் இந்தியாவில் சுகாதாரத் துறையில் எழுபத்தைந்து விழுக்காட்டிற்கும் மேல் தனியார் துறையே. உலகளவிலோ இது 62.6 விழுக்காடு ஆகும்.

இதன் பொருள் உலகில் இந்தியாவில் சுகாதாரத்துக்கு சொந்தமாக செலவழிக்கவேண்டியது அதிகமாக இருக்கும் நாடுகளில் ஒன்றாகும்.

பெரும்பாலான இந்தியர்களைப் பொறுத்த வரையில் போதிய மருத்துவ வசதி என்பது முற்றிலும் சாத்தியமற்றதுடன் அவர்களில் பலர் கடனில் வீழ்வதற்கான பிரதான காரணங்களில் ஒன்று மருத்துவத்துக்கு செலவிடுவதே. இந்தியாவில் மொத்த தற்கொலைகளில் இருபது விழுக்காடானது சுகாதாரம் தொடர்பான கவலைகளினால் ஆகும்.

வேறு சொற்களில் சொல்வதெனில் 'சிஸ்டத்தின்' தோல்வியானது இந்தியாவில் இத்துணை ஆண்டுகளாக அதிகாரத்தின் நெம்புகோல்களை கட்டுப்படுத்துவோரின் சார்பிலான ஏதோ ஒரு விதமான சோம்பேறித்தனத்தினாலோ திறமையின்மையாலோ இல்லை.

மாறாக இந்தியச் சமூகப் பொருளாதார அமைப்பானது மிகுதியான இந்தியக் குடிமக்கள் வேண்டுமென்றே பாதிக்கப்பட்டு தேவையின்றி இறப்பதற்காகவே இருக்கிறதோ - தீவிரமான கொடூரத்தின் மூலமாகவே தன்னை திடப்படுத்தி நிலைத்திருப்பதற்காகவோ - எனும் வகையில் இருக்கிறது.

சாதியப் படிநிலைகளை தூக்கியெறிந்து வளத்தை தீவிரமாக மறுபங்கீடு செய்யும் கொள்கைகள் இல்லாமல் பெரும்பாலான இந்தியர்களுக்கு எவ்விதமான மேம்பட்ட சுகாதார வசதியும் கிடைக்கும் என்று நம்புவது பயனற்றதே.

கொரோனா நெருக்கடியிலிருந்து உண்மையான படிப்பினையானது என்னவெனில் சொந்த இருத்தலுக்கும் கருவில் காலனியமாகவும் மரபினவாதமாகவும் (racist) இருக்கும் சிஸ்டத்தின் இருத்தலுக்கும் இடையேதான் தெரிவு (choice) நிலவுகிறது என்பதே.

சத்யசாகர்
நன்றி - Covid Response Watch,
CounterCurrents.org(21/05/2021)

தமிழாக்கம் - பாஸ்கர்