tamilnadu assembly’தமிழ்நாடு அரசின் வரவு செலவு கணக்கும் பற்றாக்குறையும்:- தேர்தல் வாக்குறுதிகளும்’  ஒரு எடுத்துக்காட்டுக்காக தமிழக பட்ஜெட் 2019 - 2020 எடுத்துள்ளோம் 

வரும் நிதியாண்டில் தமிழக அரசு எதிர்பார்க்கும் வருவாய்:

1) மாநில ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் வருவாய்:  ரூ. 96177.14 கோடி

2) மதுபானங்கள் விற்பனைக்கு விதிக்கப்படும் எக்சைஸ் வரி:  ரூ. 7262.33 கோடி

3) பத்திரப்பதிவு மூலம் கிடைக்கும் வருவாய்:  ரூ.13122.81 கோடி

4) வாகனங்கள் விற்பனை, பதிவு மூலம் கிடைக்கும் வருவாய்:  ரூ. 6510.70 கோடி

5) மத்திய அரசு வசூலிக்கும் வரிகளில் இருந்து தமிழகத்துக்குக் கிடைக்கும் பங்கு: ரூ. 30638.87 கோடி

6) தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்கும் மத்திய அரசின் பங்குத் தொகை:  ரூ. 25602.74 கோடி

தமிழக அரசு எதற்கு செலவு செய்கிறது என்ற விவரங்களும் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

தமிழக அரசின் முக்கிய செலவுகள்:

அனைத்து வகையான மானியங்களுக்கும் செலவு செய்யும் தொகை:  ரூ. 82673.32 கோடி

அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு செலவு செய்யும் தொகை: ரூ. 55399.74

அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்துக்காக செலவு செய்யும் தொகை: ரூ. 29627.11 கோடி

வாங்கிய கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டித் தொகை: ரூ. 33226.27 கோடி

அரசு நிறுவனங்கள் பராமரிப்புச் செலவு: ரூ. 11083.42 கோடி

மொத்த வரவும் செலவும்

தமிழக அரசின் மொத்த வருவாய்: ரூ. 197721.17 கோடி

தமிழக அரசின் மொத்த செலவு: ரூ. 212035.93 கோடி

பற்றாக்குறை: ரூ. 14314.76 கோடி   

‘தமிழக அரசின் பட்ஜெட் விவரங்களை ஒரு ரூபாய் அளவில் கணக்கிட்டால், எது எதற்கு எவ்வளவு செலவாகிறது? என்பதையும்,  எவ்வளவு வருவாய் கிடைக்கிறது? என்பதையும் அறிய முடியும்’.

ஒரு ரூபாயில் கிடைக்கும் வருவாய் விவரங்கள்:-

மாநில வரிகள் 0.61; மத்திய வரிகளில் மாநில அரசின் பங்கு 0.15; 

மாநில அரசின் வருவாய் 0.07; மத்திய அரசிடம் இருந்து பெரும் உதவி மானியங்கள் 0.17 என்ற வகையில், தமிழக அரசின் வருவாயை கணக்கிடலாம்.

ஒரு ரூபாயில் ஆகும் செலவு விவரங்கள்:- சம்பளங்கள் 0.23; ஓய்வூதியங்கள் 0.11;

‘T.N. has second highest salary, pension expenditure in india’

(The government’s spending on salaries and pensions, as a percentage of its revenue expenditure, was estimated to be 40% between FY2016 and FY2018, according to data from ICRA, making it the second largest after Maharashtra. As per the Budget estimates for 2017-18, the State’s salary and pension expenditure is pegged at ₹66,908.59 crore, excluding the impact of the Seventh Pay Commission’s recommendations) 

சம்பளங்கள் 0.23; ஓய்வூதியங்கள் 0.11; பராமரிப்பு செலவினங்கள் 0.05; உதவித்தொகைகளும், மானியங்களும் 0.34; வட்டிதொகை 0.13; மூலதனச் செலவுகள் 0.13; கடன்களும், முன்பணங்களும் 0.01.  

‘தமி­ழக அர­சின் கடன் மற்­றும் வட்டி நில­வ­ரம் குறித்து மத்­திய தலைமை நிதித் தணிக்­கை­யா­ளர் வெளி­யிட்­டுள்ள அறிக்கை’

தமிழ்நாட்டின் தற்போதைய (2020-2021) கடன் ரூபாய் 5,70,000 கோடி இதற்கென கட்டுகிற வட்டி ரூபாய் 32,000 கோடி ஒவ்வொரு தமிழ்நாடு மக்கள் மீதிருக்கும் கடன் ரூபாய் 73,000.

“தமி­ழக அரசு பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காக வாங்­கி­யுள்ள கடன்­க­ளுக்குத் செலுத்­த ­வேண்­டிய வட்­டித்­தொகை 2020-21ஆம் நிதி­யாண்­டில் 278 விழுக்­காடு உயர்ந்­துள்­ளது. 

அரசு பெறும் கடன்­க­ளுக்கு குறைந்த அளவு வட்­டியே வசூ­லிக்­கப்­பட்­டா­லும் இந்த அள­வி­லான வட்­டித்­தொகை அதிர்ச்சி தரு­கிறது என்றும், பல்­வேறு கடன்­க­ளுக்­காக அரசு செலுத்­தி­யுள்ள வட்­டித் தொகையை வைத்து தமி­ழ­கத்­தில் உள்ள ஒவ்­வொரு குடும்ப அட்­டை ­தா­ர­ருக்­கும் ரூ.73,972 வழங்­கி­யி­ருக்க முடி­யும் என்று குறிப்­பிட்­டுள்ள  திட்­டங்­க­ளுக்­குச் செலவு செய்­வதை விட வட்­டித் தொகைக்­கு ­த்தான் அரசு அதி­கம் செல­வி­டு­கிறது என்றும், 2019 -20 நிதி­யாண்­டில் தமி­ழ­கத்­தில் மக்­கள் நலத் திட்­டங்­க­ளுக்­காக செல­வி­டப்­பட்ட தொகை ரூ.20,146.77 கோடி. 

ஆனால் அதே கால­கட்­டத்­தில் கட­னுக்­காக செலுத்­திய வட்­டித் தொகை ரூ.31,980.19 கோடி. இதே நிலை நீடித்­தால் தமி­ழக அர­சின் நிதி நிலைமை மேலும் மோச­ம­டை­யும், என மதுரை மக்­கள் விழிப்­பு­ணர்வு அறக்­கட்­டளை தெரி­வித்­துள்­ளது.  

While toll plazas in the state collected Rs 751.37 crore during fiscal 2017-18, fiscal 2018-19 recorded Rs 819.42 crore. Tamil Nadu contributed 11% of the total revenue collected at toll plazas in the country in 2018-19, as per the Union ministry data.

The Tamil Nadu State Marketing Corporation Limited (Tasmac) earned revenue of around 417.18 crore this Pongal season 2021.

Those tracking the liquor industry said the 2,500 cash gift doled out by the State government for the festival increased the purchasing power of people.

Tasmac has over 5,338 shops across Tamil Nadu, and together they sell liquor worth 130 crore-140 crore a day. ‘Tamil Nadu's expensive freebies’

இலவசத் திட்டங்களுக்காக செலவிடப்படும் தொகை மிகப் பெரிதாக உள்ளது என்று மாநில நிதி நிலவரங்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த 10 ஆண்டுகளில் அடுத்தடுத்த தமிழக அரசுகளால் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது, ரு.11,561 கோடி இலவசத் திட்டங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக 3 இலவசத் திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள், மடிக்கணினிகள் மற்றும் மிக்ஸி, ஃபேன் உள்ளிட்ட இலவச வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகிய இலவசத் திட்டங்களுக்கு பெரிய தொகை செலவிடப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் சமீபத்திய பட்ஜெட், மாநிலத்தின் மோசமான நிதி நிலைமைகளை அறிவுறுத்தியுள்ள நிலையில், கடந்த 9 ஆண்டுகளில் இலவசத் திட்டங்களுக்காக இவ்வளவு பெரிய தொகை செலவிடப்படுவது குறித்து கேள்விகள் எழுகின்றன. 

இலவசத் திட்டங்களுக்காக செலவழிக்கப்பட்ட தொகையில் 25,000 பள்ளிகளையோ அல்லது 11,000 முதல்நிலை சுகாதார மையங்களையோ ஏற்படுத்தியிருக்கலாம் என்று கணக்கிடப்படுகிறது. 

இந்திரா காந்தி ஆய்வு மையத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் இதுபற்றி கூறும்போது, “இலவசத் திட்டங்களுக்குச் செலவிட தமிழக அரசிடம் மீதம் எதுவும் இல்லை. மாநில பொருளாதார வளர்ச்சி விகிதத்துக்கும் பொதுக்கடன் வளர்ச்சி விகிதத்துக்கும் உள்ள வித்தியாசம் குறுகிக் குறுகி கடையில் தற்போது பூஜ்ஜியத்தில் வந்து நின்றுள்ளது. 

ஏதோ ஒரு கட்டத்தில் இலவசங்கள் நிறுத்தப்படுவது அவசியம்” என்றார். கூடுதல் நிதியாதாரங்கள் இலவசத் திட்டங்களுக்காக திருப்பப் படுவதால் மாநிலத்தின் பொது சுகாதார மையங்களுக்கு தேவையான கூடுதல் நிதி கிடைப்பதில்லை என்கிறார் சந்திரசேகர். 

பொது சுகாதாரம், மற்றும் கல்வி ஆகிய துறைகளுக்கு நீண்ட - கால முதலீடுகள் தேவைப்படும் நிலையில் இந்தத் துறைகளுக்காக 'மிகச்சிறிய தொகையே' மீதமுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார். 

மாநில நிதி ஆதாரங்களைப் பற்றிய மத்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி, நாட்டில் உள்ள 17 பெரிய மாநிலங்களில் சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளுக்காக செலவிடப்படும் தொகை தமிழகத்தில் சராசரிக்கும் குறைவாகும்.

இந்திய மாநில அரசுகள் சோஷலிசம் மற்றும் சேமநல அரசுகள் என்ற கருத்து ஒரு தப்பிதம். 

நாம் உண்மையில் ஏழைகளின் வளர்ச்சிக்காக செலவிடுவதில்லை என்பதே உண்மை. 

இலவசத் திட்டங்கள் ஒரு குறியீட்டுச் செயல்பாடு என்பதற்கு மேல் ஒன்றுமில்லை” என்று ஆய்வு மைய அதிகாரி சந்திரசேகர் கூறுகிறார். 

மற்றவர்கள் இது பற்றி கருத்து தெரிவிக்கும் போது, இலவசத் திட்டங்கள் ஒரு விவகாரம் என்றால் அதைவிடவும் முக்கியமான பிரச்சினைகள் இருக்கின்றன என்கின்றனர். 

உதாரணமாக, சம்பளம் உள்ளிட்ட செலவினங்கள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன என்று சென்னைப் பல்கலைக் கழகத்தின் பேராசியரும், நிதி ஆதார நிபுணருமான ஆர்.ஸ்ரீனிவாசன் தெரிவிக்கிறார். 

2005 - ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை சம்பள வகையில் தமிழக அரசின் செலவினம் 4 மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது ரூ.8000 கோடியிலிருந்து ரூ.34,000 கோடியாக அதிகரித்துள்ளது.

"நம் மாநில பொதுச் செலவினங்களை நிர்வகிப்பதில் கடுமையான திறமைக் குறைபாடுகள் உள்ளன. ஆனால் யாருமே இதுபற்றி கவலைப்படுவதில்லை. மத்திய அரசு போல் அல்லாமல், மாநில அரசுகள் வரிக் கழிவுகள் மற்றும் தொழிற்துறை, வர்த்தகத் துறைகளுக்கு அளிக்கப்படும் சலுகைகளினால் இழக்கப்படும் வருவாயை வெளியிடுவதில்லை.

இப்படிப்பட்ட வருவாய் இழப்புகளே உண்மையான மாநில நிதி ஆதாரப் பற்றாக்குறைகளூக்கு முதன்மைக் காரணம் என்று பேராசிரியர் ஆர்.ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.

வரும் 2021 சட்டசபை தேர்தலில் வறுமைக்கோட்டுக்கு கீழு உள்ள மக்கள், ஏழைகள், தொழிலாளர்கள் பயன் பெறுவர் என, தமிழ்நாடு கட்சிகள் கூறினாலும், உண்மையான பயனாளிகள் எத்தனை பேர் என்ற கேள்வியும் எழுகிறது.

உழைத்து முன்னுக்கு வர வேண்டிய தொழிலாளர்களுக்கு,மக்களுக்கு இப்படி, இலவச பணம் கொடுத்து, சோம்பேறிகளாக ஆக்குவதா, என்கிற குரல்களை எழுப்ப வேண்டியுள்ளது, சமூக ஆர்வலர்களின் குரல், எடுபடவே இல்லை. 

பொங்கலுக்கு  ஒரு முறை மட்டும், 2,500, ரூபாய் கொடுத்து விட்டதால், ஏழை தொழிலாளர்கள் ஏற்றம் பெற்று விடுவரா அல்லது இதனால், சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு நீங்கி விடுமா??? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். 

இது போன்ற இலவச அறிவிப்புகளால், உண்மையான பயன், தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிர்வாகத்திற்கு தான் கிடைக்கிறது. அரசு தரும் இலவச தொகையை பெறும் பெரும்பாலானோர், அதை, மது பானங்களுக்கே செலவிடுகின்றனர். 

நாங்கள் பொங்கலுக்கு கொடுக்கும் சிறப்பு பணம் எங்களுக்கே திரும்பி வரும் என ஆளும்கட்சி அமைச்சர் ஒருவர் சொல்லியிருந்தார்.  தமிழகத்தில், ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்த, மத்திய அரசு தடை விதித்தது. அந்த தடையை எதிர்த்து, அமைதியான முறையில், சென்னை, மெரினாவில் போராட்டம் நடத்தி, உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழகம், இலவசங்களை ஏற்கலாமா?' 

அரசு கொடுப்பதால் வாங்குகிறோம்' என நாமும், 'நீங்கள் வாங்குவதால் கொடுக்கிறோம்' என, அரசும், மாறி மாறி சமாதானம் செய்து கொள்ளலாமே தவிர, அதில் எவ்வித நியாயமும் இல்லை.

’மத்திய ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், அந்நாட்டு மக்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டது’...'

ஒவ்வொரு குடிமகனுக்கும், மாதம், 2,500 பிராங்க்ஸ் அதாவது, 1.50 லட்ச ரூபாய்; குழந்தைகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய் தந்தால், அதை ஏற்றுக் கொள்ள சம்மதமா; அது சரியாக வருமா...' என, கேள்வி கேட்கப்பட்டது.

வேலை செய்தாலும், செய்யா விட்டாலும், மிகப்பெரிய தொகை கிடைத்து விடும். ஆனால், அந்நாட்டின், 77 சதவீத மக்கள், 'வேண்டாம்' என, ஓட்டளித்தனர். தொழில்கள் முடங்கி, மக்கள் சோம்பேறியாகி விடுவர் என்பதுடன், 

நாட்டின் பொருளாதாரம், மிகப் பெரிய சரிவை சந்திக்கும் என்பது, அந்த நாட்டு மக்களின் திடமான கருத்தாக இருக்கிறது. 

அதனால், அரசு இலவசமாக தர நினைத்த பணத்தை அவர்கள் வாங்க மறுத்தனர். அரசு தரும் இலவசங்களை, குறைந்தபட்சம் பாதிக்குப் பாதி பேராவது, மறுத்திருந்தால், இலவசத்துக்கு மயங்காதவர்கள், நம் மாநிலத்தில் நிறைய இருக்கின்றனர் என்ற உண்மை, அரசுக்கு புரிந்திருக்கும்.

அரசிடம் இருந்து, 1,000 ரூபாய் வாங்கியதற்கு, இவ்வளவு அக்கப்போரா... என்று நினைக்கலாம். மொத்தமாகப் பாருங்கள்... பகீரென்று இருக்கும். பொங்கல் பரிசுக்காக செலவிடப்பட்ட தொகை, 1,972 கோடி ரூபாய். 

இதை, பாலம் கட்டுவது, தடுப்பணை அமைப்பது, போக்குவரத்து வசதி என, எத்தனையோ திட்டங்களுக்கு செலவிட்டிருக்கலாம். 

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரவி என்ற நெசவாளர், அரசு வழங்கிய பொங்கல் பரிசை, மாவட்ட நிர்வாகத்திடம் திரும்ப ஒப்படைத்து விட்டார். 

தங்கள் மாவட்டத்தில், விவசாயத்துக்கு ஆதாரமாக விளங்கும் பாலாற்றில், தடுப்பணைகள் கட்ட வேண்டும் என, விவசாயிகள் மற்றும் பல அமைப்புகள் அரசிடம் மனு அளித்து உள்ளன.

அதற்கு, நிதி இல்லை என்று கூறிய அரசு, பொங்கல் பரிசாக, பல ஆயிரம் கோடி ரூபாயை செலவழித்து உள்ளது. இந்தத் தொகையில், பாலாற்றில் தடுப்பணை கட்டி இருக்கலாம்.

அதை செய்யாததால், பொங்கல் பரிசு தொகுப்பை திருப்பி ஒப்படைத்ததாக, ரவி தெரிவித்துள்ளார்; அவருக்குத் தலை வணங்குவோம்.  இதுவரை வாங்கிய இலவசங்களுக்கு, பயனாக, இனிமேல் இலவசங்களை வாங்க மாட்டோம் என, உறுதிமொழி எடுப்போம்.

அது போல, தஞ்சாவூர் மாவட்டம், புதுப்பட்டியை சேர்ந்த, சாதாரண ஏழை பெண்கள் மூவர், 'அரசின் இலவச நிதியுதவி வேண்டாம்' என, மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.  

இதுவே, புயல் நிவாரணம், வெள்ள நிவாரணம் என, கொரோனா ஊரடங்கு துயர காலங்களில் அரசு நம்மிடம் நிதியுதவி கோரும் போது, நாம் அனைவருமா வாரி வழங்குகிறோம்... 2 சதவீதம் பேர் கூட, வழங்கியிருக்க மாட்டோம்!

அத்தகைய நேரத்தில், 'இருப்பவன் கொடுத்து விட்டுப் போகிறான்' என, கூறியது போல, சும்மா தானே இருந்தோம்... அது போல, இலவசங்களை அரசு வழங்கும் போது, 'இல்லாதவர்கள் வாங்கிக் கொள்ளட்டும்' என, பெருந்தன்மையுடன் மக்கள் இருந்திருக்கலாம் என்பது எமது கருத்து.

அவ்வாறு செய்தால், ஏழைகளுக்கு கூடுதலாக, அடுத்த முறை, உதவிகள் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்காக, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள், ஏராளமான சலுகைகள், இலவசங்களுடன், தேர்தல் அறிக்கை வெளியிடும். 

அதில், நியாயமானவற்றை மட்டும் ஏற்போம்; அந்த கட்சிக்கு மட்டும் ஆதரவளிப்போம். மக்களை ஏமாற்றும் வகையில், அனாவசிய இலவசங்களை அளிப்பதாக, வாக்குறுதிகளை அள்ளி வழங்கும் கட்சிகளுக்கு, தேர்தலின் போது, 'நோ' வேண்டாம்  சொல்வோம். 

‘எந்த ஒரு நல்ல சமூக மாற்றமும் மக்களிடம் இருந்து தொடங்க வேண்டும்’. தமிழ்நாட்டில் மொத்தம் சுமார் 1 கோடியே 89 லட்சம் ரே‌ஷன் கார்டுகள், 1 கோடி காஸ் இணைப்பு வைத்திருப்பவர்களும் உள்ளனர். 

இதில் அனைவருக்கும் இலவச திட்டங்களின் பயன்கள் வழங்குவதை விட உண்மையான பயனாளிகள் எத்தனை பேர் என்பதை கணக்கிட்டு உதவிகள் வழங்குவது சிறந்தது.’

(1). தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் சுமார் 40 லட்சம் குடும்பங்களுக்கும் அடுத்த நடுத்தர நிலையில் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கும் மட்டுமே இலவச திட்டங்கள் வழங்குவதன் மூலம் நிதி பற்றாக்குறை ஏற்படுவதை குறைத்து அரசு பெற்ற கடன்களை அடைப்பதுடன். கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு  உள்கட்டமைப்பு வளர்ச்சியை மேம்ப்படுத்தலாம். 

(2). தமிழ்நாடு அரசு அலுவலங்களின் செலவுகளை குறைப்பதன் மூலம் நிதி பற்றாக்குறையை குறைத்து அரசு பெற்ற கடன்களை அடைக்கலாம். 

குறிப்பாக எம் எல் ஏ சம்பளத்தை குறைக்கலாம். உற்பத்தி வரி, கம்பெனி வரி, கார்பொரேட் வரி, ஜி எஸ் டி போன்ற வரியில் 50% பங்கு மாநில அரசுக்கு இருக்க வேண்டும் இன்னும் அழுத்தமாக இந்த இந்தவரிகள் மத்தியில் இருக்க கூடாது மாநிலத்திற்கு இருக்க வேண்டும் என கேட்க வேண்டும், அல்லது போராடி பெற வேண்டும். 

(3). கனிம வளங்களை சிறப்பான முறையில் கையாளுவதன் மூலம், வரி அல்லாத வருவாயாக  ஈட்டலாம்.

(4). காலநிலைமாற்றத்தால் பெருநகரமும், விவசாயம் பாதிக்கப்படுவதால் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் தமிழக நகரங்களுக்கான காலநிலை செயல்திட்டம் உருவாக்கி செயல்படுத்தவேண்டும்.  

வேளாண்மை மற்றும் தோட்டக்கலை சார்ந்த பணிகள் மூலம் பல லட்சம் படித்த இளைய தலைமுறைக்கு அரசு வேலை வழங்கலாம்.

(5). தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5 லட்சம் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். இதன் மூலம் 5 லட்சம் படித்த இளைய தலைமுறைக்கு அரசு வேலை வழங்கலாம். 

(6). தமிழ்நாடு  கடற்கரை வழித்தடங்களில் பயணிகள் போக்குவரத்து (பெரி கப்பல்) இயக்கம், பஸ்கள் மூலம் கூரியர் சர்வீஸ், நடமாடும் காய்கறி சந்தை, நடமாடும் மருத்துவமனை, நடமாடும் நூலகம், நடமாடும் இணையவசதி நிலையம், இரவு பள்ளி போன்ற திட்டங்களை செயல்படுத்துவதும், போக்குவரத்து தொழிலாளர்களுக்குரிய பிரச்னைகளும் தீர்க்கப்பட்டால் அரசு போக்குவரத்துக் கழகம் லாபத்தில் இயங்குவது மட்டுமின்றி மேம்பாடு அடையும்.    

‘லாபத்தில் இயங்கும் போக்குவரத்துக் கழக கேண்டீன்கள்.’ போக்குவரத்துக் கழக கேண்டீன்கள் ஒப்பந்த முறையில் வழங்கப்படுவதை ரத்து செய்து, நிர்வாகமே ஏற்று நடத்தவேண்டும். 

போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான இடங்களை போக்குவரத்துக் கழகம் மூலம் வணிக வளாகம் அமைத்து வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நெடுந்தூர பஸ்கள் இயக்கப்படும் வழித்தடங்களில் போக்குவரத்துக் கழக மூலம்  சாலையோர உணவு விடுதிகளை  ஏற்படுத்தி பயணிகளுக்கு தரமான உணவுகளை குறைந்த விலையில் வழங்கவேண்டும். இதன் மூலம் பல லட்சம் படித்த இளைய தலைமுறைக்கு அரசு வேலை வழங்கலாம்.

(7). தமிழ்நாட்டில் உள்ள சிறுபெறு தொழில்களுக்கு பாடத்திட்டம் இல்லை, பாடத்திட்டம் உருவாக்கி கல்வி கொடுத்தால் சேவைதுறையில் இருந்து வருமானத்தை விட உற்பத்தி துறையில் வருமானம் பெருக்குவதுடன் சில லட்சம் பேர்க்கு வேலைவாய்ப்பு உருவாகும்.

(8).100 திட்டத்தை 200 நாளாகி நகராட்சி வர கொண்டுவர வேண்டும்.

(9). Waste managementக்கு அதிகபட்சமாக நிதி ஒதுக்கி சரியாக திட்டமிட்டு நடைமுறைப்படுவதன் மூலமாக சுற்றுசூழலை பாதுகாப்பதுடன் வேலைவாய்ப்பும் உருவாகும்.

‘திமுக தேர்தல் வாக்குறுதிகளும் ஆக போகும் செலவுகளும்’ தமிழ்நாடு அரசின் ஆண்டு வருமானம் (2021-2022) ரூபாய் 22,4500 கோடி .  தமிழ்நாட்டில் சுமார் 1 கோடியே 89 லட்சம் ரே‌ஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன.

கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாகவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலமாகவும் செயல்பட்டு வரும் 34 ஆயிரத்து 840 நியாய விலைக் கடைகள் வாயிலாக, அத்தியாவசியப் பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, மண் எண்ணெய் மற்றும் சிறப்பு பொது வினியோகத்திட்டத்தின் கீழ், பருப்பு மற்றும் பாமாயில் எண்ணெய் ஆகியவை ரே‌ஷன் கார்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன .

இந்த ரேஷன் கார்டு வைத்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் சுமார் 1 கோடியே 89 லட்சம் ரே‌ஷன் பேர் என  கணக்கிடுவோம்

(1). கொரோனா கால சிறப்பு உதவி தொகை ரூபாய் 4,000 ஒருமுறை செலவு = ரூபாய் 7,400 கோடி.  

(2). கடலோர மாவட்டங்களில் கடல்நீரை குடிநீர் ஆகும் திட்டம் ( 20 கோடி லிட்டர் தண்ணீர் உற்பத்திக்கு ஒரு நாளைக்கு 1.25 கோடி செலவாகிறது) கடல்நீரை சுத்திகரிக்கும் பிளான்ட் அமைக்க ஒரு முறை முதலீடு செலவு =7,000 கோடி One time capital expenditure & Revenue expenditure செலவு 7,000 கோடி.

(3). குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000ரூபாய் = 30,000கோடி.

(4). ஆவின் பால் லிட்டர் க்கு ரூபாய் மூன்று குறைக்கப்படும் = 100 கோடி (Tamil Nadu ranks among the top ten milk producing states of the country with a daily production of 206 lakh liters per day). 

(5). காஸ் சிலிண்டெர்க்கு  ரூபாய் நூறு மானியம் =  2,800 கோடி.

(6). இந்து கோவில்களுக்கு = ரூபாய் 1,000 கோடி ஒதுக்கீடு One time expenditure.

(7). மசூதி  சர்ச்சுக்கு = ரூபாய் 200 கோடி ஒதுக்கீடுOne time expenditure. 

(8). குளங்கள் ஏரிகள் தூர்வாருவதற்கு= ரூபாய் 10,000 கோடி One time expenditure.

(9). மீனவர்களுக்கு 2 லட்சம் வீட்டு கட்டி தரப்படும் = 2, 000 கோடி One time expenditure.  ‘மொத்த செலவு = ரூபாய் 39,900 கோடி One Annual Expenditure. 39,900’5 = ரூபாய் 1,99,500கோடி.

One time Expenditure 29,600 கோடி = 1,99,500கோடி + 29,600 கோடி = ரூபாய் 2,29,100கோடி திமுகவினால் கூடுதலாக கடன் ஏற்படும்’. தமிழ்நாடு அரசின் கடன் தொகை கடந்த பட்ஜெட் வரை 5,70,000 கோடி + திமுகவினால் கூடுதல் கடன் 5 ஆண்டுகளுக்கு  2,29,100கோடி = ரூபாய் ‘7,99,100கோடி கடன் 2027-2028 ஆண்டில் தமிழ்நாடு அரசுக்கு இருக்கும்’.

இதுவே அதிமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை தொகுத்தால் ரூபாய் 9,50,000 கோடி கடன் 2027-2028 ஆண்டில் தமிழ்நாடு அரசுக்கு இருக்கும்.

‘குறிப்பு’ :-மேலே தொகுத்தவை முக்கிய திட்டங்களுக்கான செலவுகள் மட்டுமே இன்னும் பல்வேறு வாக்குறுதிகளை சேர்க்கவில்லை.

இந்தியாவில் இருக்கிற மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் பயணிப்பது உண்மையே.. ஆனால் இலவசங்கள் என அறிவிக்கப்படுவதற்கு ஏது நிதி ??..

அப்படியிருக்கையில் எதற்காக கடன் வாங்குனீர்கள் என்ற கேள்விக்கு, மக்கள் நலன் திட்டங்களை நிறைவேற்றவே கடன் வாங்கினோம் என துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கடனை வாங்கத்தெரிந்தவர்களுக்கு அந்தக்கடனை த்திருப்பி செலுத்தும் திட்டத்தை வழிமுறையை இதுவரை ஏன் அறிக்கவில்லை??குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்பது சாத்தியமா? அதும் 2 கோடி பேர்க்கு அரசு வேலை வழங்கமுடியுமா? ‘இலவசம் என்கிற புழுவை போட்டு ஆட்சியதிகாரம் என்கிற மீனை திமிங்கலத்தை அடைய கட்சிகள் போட்டு தந்திரம் இது’.

மாநில அரசு நிதிச் சீர்திருத்தம் என்பது காலத்தின் கட்டாயமாகும்.இனி ஆட்சிக்கு வரும் கட்சிகள்/ அரசுகள் தமிழ்நாட்டை கடனிலிருந்து மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொருளாதாரத்தை சீராக நிலைநிறுத்த வேண்டும். மக்களின் உண்மையான பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.

தொகுப்பு:- சிறீதர் தமிழன், மும்பை விழித்தெழு இயக்கம்

‘குறிப்பு’:-  தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகள் அரசு அறிவிப்புகள் மூலம் தகவல்கள் திரட்டப்பட்டு அதன் அடிப்படையில் முதன்முறையாக பரிந்துரைகள் பொதுவில் முன்வைக்கப்படுவதால புள்ளிவிவரங்கள் பிழைகள் இருப்பின் பொருத்தருள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.