காதலர் தினக் கொணடாட்டங்கள் முடிந்த கையோடு இங்கிலாந்தெங்கும் அன்னையர் தினக் கொண்டாட்டத்திற்கான ஆயத்தங்கள் தொடங்கி விட்டன. தாய்களுக்குப் பரிசளிக்க ஆயிரக்கணக்கான மலர் வகைகள் நடப்பட்டிருக்கின்றன. எட்டாவது ஹென்றி மன்னர் வாழ்ந்த ஹம்டன்கோர்ட் மாளிகையைச் சுற்றிய நந்தவனத்தில் பல்லாயிரக்கணக்கான மலர்ச் செடிகொடிகள் அன்ளையர் தினத்திற்காக விசேடமாக நடப்பட்டு இப்போது பல நிற மரச் செண்ட்டுகள் அன்னையர் தின அன்பளிப்பக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இங்கிலாந்தில் மட்டுமல்லாது மற்ற வெள்ளைக்கார நகரங்களிலுமுள்ள ஆயிரக்கணக்கான நந்தவனங்களில் அன்னையர் தினத்திற்காக மலர்களின் உற்பத்தி பிரமாண்டமான விதத்தில் உற்பத்தியாகிக் கொண்டிருக்கின்றன.

அன்னையர் தின அன்பளிப்பக்களில் வித விதமான மலர்ச் செண்ட்டுகள் பரிமாறப்படுவதுபோல் பல தரப்பட்ட சாக்கலட் வகைகளும் அன்பளிப்பாகக் கொடுக்கப்படும். இயந்திரமயமாகி விட்ட மேற்கு நாட்டுக்கலாச்சாரத்தில் இந்த மாதிரிக் கொண்டாட்டங்களும் அன்பளிப்புக்களும் அத்தியாவசியமானவையாகும். ஏகாதிபத்திய விருத்தியால் ஆங்கில சமுதாயம் உலகில் நாலா பக்கத்திலும் சிதறிக் கிடக்கிறார்கள. உலகத்தில எந்த மூலையிலிருந்தாலும் ஆங்கிலேயக் குழந்தைகள் அன்னையர் தினத்தன்று தங்கள் தாய்களுடன் தொடர்பு கொள்வார்கள.;

Mothers Dayமாசி மாத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை இந்தக் கொண்டாட்டம் நடக்கும். இந்த அன்னையர் தின நிகழ்ச்சி இங்கிலாந்தின் சமூகப் பண்பாட்டு, காலாச்சார முக்கியத்துவமடையதாகும். இங்கிலாந்தில் பல நூற்றாண்டுகளாக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இங்கிலாந்து தனது ஏகாதிபத்தியத்தை விருத்தி செய்த கால கட்டமான 16ம் 17ம் நூற்றாண்டுக்களில் அன்னையர் தினம் ஆரம்பிக்கப்’பட்டது. இதன் சரித்திரம் இங்கிலாந்தின் சமூக மாற்றத்துடன் பின்னிப் பிணைக்கப் பட்டது.

உலகம் பரந்த ஏகாதிபத்திய விரிவாக்கத்தால் இங்கிலாந்தில் பொருளாதார விருத்தி உயர்ந்த போது பணக்காரர்கள் பலர் தோன்றினர். ஏழைகளுக்கும் பணக்கரர்களுக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசமிருந்தது.வர்த்தகத்தின் மூலம் சமூகத்தின் உயர்நிலையை அடைந்த பணக்காரர்களும் பிரபுக்களும் மிக ஆடம்பரமாக வாழ்ந்தார்கள். அந்தக்கால கட்டத்தில் 60 சதவீதமான ஆங்கிலேயக் குழந்தைகள் பட்டினியாற் தவித்தார்கள். இவர்களில் பலர் அண்டை நாடான அயர்லாந்திலிருந்து வந்தவர்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் பரவிய வறுமை ஆயிரக்கணக்கான மக்கனை அமெரிக்கா நோக்கியோடப்பண்ணியது.

பிரான்ஸ்,இத்தாலி,அயர்லாந்த போன்ற நாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான ஏழைகள் அமெரிக்கா சென்றார்கள். அயர்லாந்திலிலுந்து லண்டன் வந்த பலர், இங்கிலாந்து ஏழைப்பெண்கள் போல் மிகக் குறைந்த சம்பளத்தில பணக்காரர் வீடுகளில் வேலைக்கமர்ந்தார்கள். ஐரிஸ் ஆண்கள் வீதிகள் துப்பரவு செய்த காலத்தில் ஐரிஸ் பெண்கள் பல தரப்பட்ட தொழில்களிலும் ஈடு பட்டார்கள்.

தொழிலாளர்களுக்கு பாதகாப்பான எந்தவொரு சட்டமுமற்ற காலமது. லண்டனுக்கு வந்து சேர்ந்த ஏழைப் பெண்கள் வாழ்கையின் பெரும்பகுதியை மற்றவர்களின் வீடுகளிலேயே செலவழித்தார்கள்.விடுதலை என்பது பெரிதாகக் கிடையாது.

பணக்கார வீடுகளில் சமைப்பது, துவைப்பது, வண்டியோட்டுவது,தோட்டத்தைப் பார்த்துக் கொள்வது என்பது போன்ற வேலைகள் மட்டுமல்லாமல் பிரபுக்கள் குடும்பத்துக் குழந்தைகளுக்குத்தாய்ப் பால் கொடுக்கும் வேலையைக்கூட ஏழைப் பெண்கள் செய்தார்கள்.

வேலையில்லாத் திண்டாட்டத்தால் வறுமையில் வாடிய ஏழை ஆங்கில மக்களுக்கு வீட்டு வேலை செய்யக கிடைத்ததே ஒரு கொடுத்து வைத்த,அதிர்ஷ்டமான விடயமாகப்பட்டது. பெரிய பிரபுக்கள் வீட்டிலும் வியாபரிகள் வீட்டிலும் வேலைக்காரியாகப் பணியாற்றுவது ஏழைகளின் வாழ்க்கையில் புதிய திருப்பத்தையுண்டாக்கியது.

ஏனென்றால் ஒரு ஏழை ஒரு பிரபுவின் அல்லது பணக்காரரின்; வீட்டு வேலைக்காரர்களாகச் சேர்ந்து விட்டால் அந்த ஏழையின் குடும்பம் தலை தூக்கிக் கொண்டது என்று அர்த்தம். பணக்காரர்களின் வீடுகளுக்கு அண்மையிலுள்ள கிராமத்திலிருந்து வந்திருந்த வேலைக்காரப் பெண்களுக்கு அவர்களின் தாய்களைப் பார்க்க எப்போதாவது அனுமதி கொடுக்கப்பட்டது.

அந்தக் காலத்தில் கத்தோலிக்க மதத்தைச்சேர்ந்த பெண்களுக்கு கத்தோலிக்கர்கள் கொண்டாடும் “லென்ற்” என்ற வழிபாடு முக்கியமானது. கத்தோலிக்க சமயம் இங்கிலாந்துக்கு வரும் முன் பழைய ஆங்கிலேயர்களின் வழக்கத்தின்படி “லென்ற்” என்ற வார்த்தையின் அர்த்தம், இளவேனிற்காலத்தின் முதல்நாள் என்பதாகும். பனியும் குளிரும் முடிய பயிர் போடும் காலம் தொங்குவதை உலகில் வாழும் ஏழை விவசாயிகள் தங்கள் கலாச்சாரத்திற்கேற்ப கொண்டாடினர்.

அந்தக்காலத்தை ஆங்கிலேய முன்னோரும் தங்களின் குடும்பத்தினருடன் கொண்டாடினார்கள். கால ஓட்டத்தில பல பழைய சடங்குகள் அதாவது, மனிதரின் வாழ்க்கையமைப்புடன் தொடர்பான விழாக்கள் சமயமயப்பட்டதுபோல் “லென்ற்” கொண்டாட்டமும் சமயமயப்பட்டது.

இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்டுப் பின்னர் உயிர் எழுந்த நாட்களுக்கு முன் வரும் 40 நாட்களைக் கத்தோலிக்க மக்கள் புனித நாட்களாகக் கருதினர்.அந்த நாட்களின் ஞாயிற்றுக்கிழமைகளில் விரதமிருப்பர். கடைசி ஞாயிற்றுக்கிழமையை குடும்பத்துடன் கொண்டாடுவார்கள. இதன் அடிப்படையிற்தான், பிரபுக்கள் வீடுகளிலிருந்த ஏழைப் பெண்களுக்கும், அவர்களின் குடும்பத்தைப் பார்க்க ஒருநாள் கொடுக்கப்பட்டது. அந்தக்காலத்தில் தகப்பன் இறந்த அல்லது தகப்பன் இல்லாத பல ஏழைப்பெண்கள்தான் வேலைக்காரிகளாகப் பணிபுர்ந்தார்கள்.

பணக்காரர் வீடுகளில் வேலைசெய்யும் பெண்கள், தங்களுக்குக் கிடைக்கும் ஒருநாள் வடுமுறைக்குப் போகும்போது தங்கள் சம்பளத்தில் வாங்கிய அல்லது ;தாங்கள் வீடுகளிலிருந்து கிடைக்கும் இனிப்புப் பண்டங்களைக் கொண்டுபோய்த் தங்கள் தாய்களுக்கு அன்பளித்தர்கள். பங்குனிமாதாதின் முதல் ஞாயிற்றுக்கிழமை காய்களின் நாளாகக் கொண்டாடப்பட்டது.

இந்தப் பண்பாடு அமெரிக்க நாட்டிற் குடியேறிய ஆங்கிலேயப் பழக்க வழக்கத்தின் முக்கிய இடத்தையெடுத்தது.அதாவது பணம் படைத்த பல ஆங்கிலேயர் கறுப்பு இன மக்களை அடிமையாக்கித் தங்கள் நிலங்களிலும் வீடுகளிலும் வேலைக்கமர்த்தியிருந்தார்கள்.

அடிமைகளாக வீடுகளில் வேலைசெய்யும் வேலைக்காரப் பெண்களுக்கும், நிலங்களில் வேலை செய்யும் ஆண்களுக்கும் வருடத்தில் “லென்ற்” ஞாயிற்றுக் கிழமை விடுதலை நாளாகக் கொடுக்கப்பட்டது. 1914ம் ஆண்டு தொடக்கம் 1918 வரை நடந்த முதலாம் உலகப்போரில் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் ஐரோப்பாவின் பல நாடுகள் அத்துடன் உலகின் பல நாடுகளிலும் சிப்பாய்களாளப் பணியாற்றினார்கள. கறுப்புச் சிப்பாய் வழக்கப்போல் தன் தாய்க்கு அன்பளிப்பனுப்ப அது மற்றவர்களிடமும் பரவியது.

இரண்டாம் யுத்தத்தில் ஆங்கிலேய, அமெரிக்கச் சிப்பாய்களும் ,யுத்த வேலைகளில் ஈடுபட்டிருந்த பெண்களுக்கும் தாய்களுக்கான நாளில் அன்பளிப்புக்களை அனுப்பினார்கள். இயந்திர மயமாகி விட்ட இந்த நாட்களில் ஒரு நாளாவது தன்னையுலகுக்குத் தந்த தாயை நினைத்து உலகெங்கும் அன்னையர் தினம் கொண்டாடுகிறார்கள்.

இப்போதெல்லாம் மேற்கு நாடுகளில் வாழும் ஆங்கிலேயர் மட்டுமல்லாது மற்ற இன மக்களும் தங்கள தாய் நாடுகளில் வாழும் தாய்களுக்கு அன்பளிப்புக்கள் அனுப்பியும் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டும் அன்னையர் தினத்தை; கொண்டாடுகிறார்கள்.

இலங்கையில் தங்கள் குழந்தைகளைப் போர்க் களத்தில் பலி கொடுக்கும் தாய்களின் துயர் எப்போது தீரும்? இவர்களுக்கான உண்மையான அன்னையர் தினம் என்று வரும்?

குடும்பங்கள் பயமின்றித் தங்கள் குழந்தைகளைப் பாடசாலைக்களுப்பும் நாள் என்று வரும்?

- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்