jayalalitha poster

அம்மா தமிழ்நாட்டின் அழிக்கமுடியாத அரசியல்வாதியின் புனைப்பெயர். அவர்தான் ஜெயலலிதா ஜெயராம், முன்னால் நடிகை, மாநிலத்தை தற்போது ஆளும் அஇஅதிமுக என்ற கட்சியின் பொதுச் செயலாளர். சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து கொண்டு வருமானத்திற்கு அதிகமாக 66 கோடி சொத்து சேர்த்தார் என்று, நீதிமன்றபடி ஏறி சிறை தண்டனை பெற்றவர். அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 10,500 சேலைகள், 750 காலணி ஜோடிகள் மற்றும் 66 தங்க பவுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. 66 கோடி ரூபாய் என்பது அவரை பொறுத்த வரையில் சொற்பம்தான். இருப்பினும் இந்தியாவில் முதன் முறையாக ஒரு முதல்வர் ஊழல் காரணமாக பதவியில் இருந்து வெளியேற்றப்படுவது இது தான் முதல் முறை.

சிறை தண்டனை விதிக்கப் பட்டதை கேள்விபட்டவுடன் அவரது அடிமைகள் மாநிலம் முழுவதும் பேருந்து மீது கற்களை வீசினர் பேருந்துக்கு தீ வைத்து எரித்தனர். பெருங்குலத்தூர் சந்திப்பில் மற்றும் சென்னை நெடுஞ்சாலையில்,அவரது கட்சிக்காரர்கள் தரையில் படுத்து பேருந்தை எங்கள் மீது ஏற்றுங்கள் என்று கத்தினர். "நம் அம்மா சிறையில் இருக்கும் போது நாம் ஏன் வாழ வேண்டும்?". அஇஅதிமுக வின் தகவலின்படி இரு நூறுக்கும் மேற்பட்ட மக்கள் தாங்களாகவே முன் வந்து தற்கொலை செய்து கொண்டார்கள்.

சென்னை, தமிழகத்தின் மாநில தலைநகர். தமிழ்நாடு செழிப்பு விளிம்பில் சென்று கொண்டு இருக்கிறது, ஆனால் தீய சக்திகள் அதை தடுத்து வைத்து இருகிறார்கள். அம்மா அவர்கள் சிறையில் இருந்து வெளியேவரவேண்டும். அவரது எதிரிகளை தண்டிக்க வேண்டும். அவர்களை நரகத்தில் தள்ளி சிதை மூட்டட்டும். அம்மா அவர்களின் அடுத்த பதவியேற்ப்பு விழாவிற்காக காத்திருப்போம் என்ற கோஷத்துடன் ஒரு அரசியல்வாதி தன்கையில் அம்மா பச்சை குத்தி இருப்பதை காட்டுகிறார். உயர் கல்வித்துறை அமைச்சரோ அம்மாவின் படம் தனது முழங்கையில் பொறிக்கப்பட்டுள்ளதை காட்டுகிறார். ஒரு மாவட்ட செயலாளர் ‘‘Long Live Amma.’’ என்கிறார். 

இது போன்ற பக்தி நாடகத்தை எப்படி கணக்கிடுவது. பக்கத்தில் உள்ள கேரள மாநிலத்தில் கூட இப்படி பேருந்து ஓட்டுனரிடம் சென்று எங்கள் மீது காரை ஏற்றி கொள்ளுங்கள் என்று கூறுபவர்களை பார்க்க முடியாது. இதை புரிந்து கொள்வதற்கு சற்றே பின்னோக்கி செல்ல வேண்டும். ஜெயலலிதா அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக பிரபலமான தமிழ் நடிகை. 100 க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். ஜெயலலிதா தனது ரோல் மாடலாக அல்லது அவரின் வழிகாட்டியாக எடுத்து கொண்டது மருதூர் கோபாலன் ராமச்சந்திரன். இணை-நட்சத்திரம் ஒரு நடிகர் மற்றும் அரசியல்வாதி. தி.மு.க வில் இருந்து பிரிந்து வந்து கட்சியை ஆரம்பித்த எம்.ஜி.ஆர் தொடர்ந்து 11 ஆண்டுகளாக தமிழ் நாட்டில் முதலமைச்சராக இருந்தார். 

1987 இல் அவரது மரணத்திற்கு பின்னர், திசை மாறி ஜெயலலிதாவின் பிரதான எதிரியான திரைக்கதை எழுதும் 92 வயதான தந்திரமான முத்துவேல் கருணாநிதி ஆட்சி கட்டிலில் அரியணை ஏறுகிறார். திமுக வின் தலைவராக தொடர்ந்து பதவி வகித்து வருகிறார். எம்.ஜி.ஆர்-கருணாநிதி என்ற அதிகாரப் போட்டி மாறிப் போய் ஜெயலலிதா-கருணாநிதி என்று மாறுகிறது. ஒருவர் கொண்டுவந்த திட்டங்களை மற்றொருவர் முடக்குவது, அவமானபடுத்துவது, குற்றசாட்டுகள் கூறுவது, கைது செய்வது மற்றும் எதிர்த்து பேசுபவர்கள் அல்லது எழுதுபவர்கள் மீது அவதூறு வழக்குகளை போடுவது. கொள்கைரீதியாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை. ஆனால் அரை நூற்றாண்டாக வேறு எந்த கட்சியும் இங்கே காலூன்ற முடியவில்லை. 

ஜெயலலிதாவின் மேல்முறையீடு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு அஇஅதிமுகவின் விசுவாசிகள் கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் போன்றஇடங்களில் மிகப் பெரிய பிரார்த்தனைகளை நடத்துகிறார்கள். 2016 சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நேரத்தில் அம்மா அவரகள் முதலமைச்சராக இருக்க வேண்டும். அப்படி அவர் பதவியில் இல்லாமல் இருந்தால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு அரசியலில் இருந்து வெளியேற்றப்படுவார். மதுரையில் கட்சி சீடர்கள் 1,008 தேங்காய் உடைத்தார்கள். கோயம்புத்தூரில் 2,008 பேர் தலை மீது பால் சுமந்து வந்தார்கள். அருள்மிகு செல்ல பிள்ளையார் கோவிலில் 508 பெண்கள் நெய் விளகேற்றினர். அரசியல்வாதிகள் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்து கொண்டு போஸ் கொடுத்தார்கள்.

கடவுள் ஜெயலலிதா மீது கருணை கொள்வார் என்றும் அவர் சார்பாக நாம் செய்யும் முயற்சிகள் வீண் போகாது என்று நம்பினார்கள். அவர்களது பிரார்த்தனைகள் இரட்டை நம்பிக்கை தரும்படியாக இருந்தன. தன்னுடைய பாசத்தை காட்ட அம்மா அவர்களின் கவனத்தை பெற இது மிகச் சிறந்த வழியாக இருந்தது.

தமிழ்நாட்டில் நீங்கள் நுழைகிறீர்கள் என்றால் ஜெயலலிதாவின் முகத்தை எல்லா இடங்களிலும் பார்க்க முடியும். எல்லா இடங்களிலும் அவரது கட்சி உறுப்பினர்கள் மாபெரும் விளம்பர பலகைகளை வரிசையாக வைத்து தன்னுடைய எஜமான விசுவாசத்தை நிரூபித்தார்கள். மிகப்பெரிய வாக்கு வங்கியாக இருக்கிற கிராமங்கள் மற்றும் சுவரொட்டிகள் மீது ஜெயலலிதாவின் உருவத்தை வரைந்துவைத்திருக்கிறார்கள். இலவசமாக கொடுத்த மடிக்கணினிகள் வெளியே தெரியும்படியும் பிறகு உள்ளேயும் அம்மா முகம் தெரியும்படியும் வைத்தார்கள். குறைந்த விலை மருந்துகள் கிடைக்க கூடிய அம்மா மருந்தகம் 5 ரூபாய் அம்மா உணவகம் மற்றும் குறைந்த விலையில் அம்மா திரையரங்குகள் என எங்கு பார்த்தாலும் அம்மா முகம் தான். மிகவும் தந்திரமாக எல்லா இடங்களிலும் அவரது முகத்தை பதித்தார்கள். சர்வாதிகாரத்தின் உச்சிக்கே சென்று தமிழர்களுக்கே எரிச்சல் ஏற்படும் உணர்வை கொடுத்தார்கள்.

(தொடரும்)

- தங்க.சத்தியமூர்த்தி