காந்தியம் பேசும் இந்த இந்திய திரு(ட்டு) நாட்டில் உண்மையிலேயே கொண்டக் கொள்கைக்காக பட்டினியிருந்து உயிர்விட்டவர்கள் எத்தனைப் பேர்? தமிழ்நாட்டிலே சங்கரலிங்கம் மற்றும் ஆந்திராவிலே பொட்டி சிறி ராமுலு. இவர்கள் இருவரும் தனது தேசிய இனங்களின் பிரச்சனைக்காக உயிர்த் துறந்தவர்கள்.
 
ஆனால் தொட்டதெற்கெல்லாம் பட்டினிப் போராட்டம் இருந்த தேசத்தந்தை(!) காந்தி என்றாவது உயிர்விட்டிருப்பாரா? அல்லது காந்தியின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டுள்ள காங்கிரசுக் கட்சியை சேர்ந்தவர்கள் தான் உயிர்விட்டுள்ளனரா?
 
  அதேபோல், ஈழத்தில் அறவழியில் போராடி வீரமரணம் அடைந்தவர்கள் அன்னை பூபதி மற்றும் மாவீரன் திலீபன். இவர்கள் இருவரும் இந்திய இராணுவதிற்கு எதிராக பட்டினியிருந்துப் போராடி, தனது கொள்கையில் கடைசிவரை உறுதியுடனிருந்து வீரச்சாவடைந்தனர்.
 
மாவீரன் திலீபனை இந்திய அரசு இறக்க விட்டது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு ஒரு முக்கிய காரணம். உலகின் நான்காவது மிகப்பெரிய இராணுவம் என்று பீற்றிக்கொள்ளும் இந்திய அமைதிப்படை என்றப் போர்வையில் சென்ற சாத்தானின் படைகளை பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓட வைப்பதற்கு காரணமாய் அமைந்தவர்.
 
இந்திய வல்லாதிக்க அரசால் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருவதைப் போல், புலிகள் பயங்கரவாதிகளோ, வன்முறையாளர்களோ அல்ல. மாறாக அவர்கள் அறம் தவறாமல் போர் செய்தவர்கள். யாழ்ப்பானப் போரில் புலிகளால் சுற்றிவலைக்கப்பட்ட 3000க்கும் அதிகமான சிங்கள இராணுவ வீரர்களை, இந்திய இராணுவத்தை ஈழத்தைவிட்டு வெளியேற்றியப் பிறகும் கூட, இந்தியா கேட்டுக்கொண்டதற்கு இனங்க, அவர்களை விடுதலை செய்தது. ஆனால் சர்வதேச கடல் பகுதியில் பயணித்த தளபதி கிட்டுவின் கப்பலை வழிமறித்து, அவரின் இறப்புக்கு காரணமாய் இருந்து மிகப்பெரிய துரோகத்தை செய்தது இந்திய அரசும் அதன் உளவுத்துறையான றோவும்.
 
தன்னிடம் பிடிப்பட்ட போர்க்கைதிகளை மனிதத்தன்மையோடு நடத்தியவர்கள் புலிகள். போரில் இறந்த சிங்கள இராணுவத்தினரை உரிய மரியாதையோடு அடக்கம் செய்தவர்கள். இறந்தவர்களின் உடலுக்கு உரிய மரியாதையை செய்ய வேண்டும் என்று தமது வீரர்களை தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் கேட்டுக் கொள்வார்.
 
அப்படிப்பட்ட புலிகளைத் தான் பயங்கரவாதிகளுக்கு எதிரானப் போர் என்ற கூறி உலக நாடுகளை ஏமாற்றி, 1 1/2 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களை, அப்பாவிப் பொதுமக்களை கொன்றுக் குவித்து போரில் வெற்றிப்பெற்றதாகவும் அறிவித்துள்ளது ஆளும் இனவெறி பேரினவாத சிங்கள அரசு. அந்த இனவெறி அரசுக்கு முன்னோடியாக விளங்கியவன் இராசிவ் காந்தி.
 
ஆம், அமைதிப்படை என்ற பெயரில் ஒரு சாத்தானின் படையை அனுப்பி, பல்லாயிரக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்தும், தமிழ்ப் பெண்களின் கற்பை சூரையாடியும், பள்ளிக்கூடம் மற்றும் மருத்துவமனைகளின் மேல் குண்டுகளை வீசியும், இங்கே தமிழச்சியின் மார்புக்கறிக் கிடைக்கும் என்று எழுதித் தொங்கவிட்டும், பல கொடுமைகளை செய்து, போர்க்குற்றங்களைப் புரிந்த இராசிவின் இந்திய சாத்தான் படை, இராசபக்சேவுக்கு வழிக்காட்டியது.

தடை செய்யப்பட கொத்து குண்டுகளையும், இரசாயன குண்டுகளையும் போட்டு அப்பாவிப் பொதுமக்களை கொன்றழித்தது இந்தியாவின் சாத்தான் படை. அவர்களைப் பின்பற்றி தான் சிங்கள இனவெறி ராசபக்சேவும் அதே குண்டுகளைப் பயன்படுத்தினான்.
 
சாலியன் வாலாபாக் படுகொலைக்கு உத்தரவிட்ட செனரல் டயரின் உதவியாளரான டயரை, பகத் சிங்கின் நண்பனான உத்தம் சிங், இங்கிலாந்துக்கே சென்று சுட்டுக் கொன்றான். இங்கிலாந்து அரசால் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்ட அவனது சாம்பலை வாங்கி இந்தியா முழுவதும் தூவி தேசப் பக்தியை வளர்த்தது இந்தியா. இதே செயலைத் தான் தாணு செய்தார். அது மட்டும் எப்படி குற்றமாகும்? உங்களுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதியா? இது போன்ற தண்டனை இராசபக்சேவுக்கும் உண்டு, சோனியாவுக்கும் உண்டு, என்பது திண்ணம்.
 
இந்தியாவில் நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கு எல்லாம் பாகிசுதான் காரணம் என்றால் பாகிசுதானில் நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கு யார்க்காரணம்? மரணதண்டனைக்கு எதிரானக் குரல்கள் வலுவாக தமிழ்நாட்டிலே எழுந்த நிலையில், அதை ஒடுக்கும் நிகழ்வாக டெல்லியில் ஒரு குண்டுவெடிப்பை நடத்தி, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களைத் தூக்கிலிட வேண்டும் என்ற கருத்தாக்கத்தை மக்களிடம் உருவாக்க முயல்கிறது, ஆளும் வல்லாதிக்க அரசு.
 
  இதே வகையை சேர்ந்ததுதான் பரமக்குடி துவக்கிச் சூடும். இவர்களுக்கு வேறு பிரச்சனை இல்லாததால் தான் இனம், மொழி என்று போராட வருகிறார்கள், இவர்களுக்கு இடையில் உள்ள பகைமைகளை கொம்பு சீவிவிட்டால், நமது வம்புக்கு வரமாட்டார்கள் என்று ஆளும் வல்லாதிக்கத்தினால் சிண்டுமுடிந்து விடப்பட்டதுதான் இமானுவேல் சேகரன் நினைவுநாளுக்கு வந்திருந்த மக்களை சுட்டுக் கொன்றதும்.
 
  அதிபர்கள் மாறலாம், அவர்கள் அடிப்படைக் கொள்கை மாறாது. ஆகவே நமக்கான அரசியல் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம். மீண்டும் மீண்டும் இராசீவின் மரணத்தை காட்டியே தமிழர்களை அச்சமூட்டி, போராட்ட உணர்வை மழுங்கடிக்க நினைக்கும் காங்கிரசுக்கு நாம் பதிலடி கொடுப்போம்.
 
இலங்கையின் இனப்படுகொலைகளோடு இந்தியாவின் போர்க்குற்றங்களையும் உலக அரங்கில் அம்பலப்படுத்துவோம்.

போர்க்குற்றவாளி இராசிவின் முகத்திரையைக் கிழிப்போம்.
 
செப்டம்பர் 26-அய் அரச வன்முறைக்கு எதிரான நாளாக அறிவிப்போம்.