போரினாலும் முகாம் வாழ்வினாலும் கணவரை இழந்து கண்கள் சரியாகத் தெரியாத நிலையில் இரு பிள்ளைகளுடன் வாழ்வாதாரத்திற்குப் போராடும் பெண்.
வீட்டிற்குக் கதவுகள் கூட இல்லாத நிலையில் பாதுகாப்பின்றி வாழும் அவலம். கண் தெரியாத நிலையில், தனது மகனுக்கும் கண்பார்வை சரியாகத் தெரியாத நிலையில் அதற்குரிய மருத்துவச் சிகிச்சையைச் செய்து கொள்ள இயலாத கையறு நிலையில் உள்ளனர்.
உதவும் நல்ல மனம் கொண்டோரே உதவிக்கரங்கள் கொடுத்திடுங்கள்.
தொலைபேசி இலக்கம்; 0770432326
வங்கிக் கணக்கு இலக்கம்: இரத்தினசிங்கம் மணிமேகலை; 73839035; இலங்கை வங்கி, பரந்தன்
மேலதிகத் தொடர்புகளுக்கு: ராம்; தொலைபேசி: 00447448452286
* * * * *
யுத்ததினால் கண்பார்வை இழந்து இருகைகளும் பாதிக்கப்பட்ட நிலையில் வயதான தாய் தந்தையுடன் வாழ்வாதாரத்திற்காகப் போராடும் முன்னாள் பெண் போராளி.
மேலும் தற்போது தாயார் இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் எவ்வித உதவிகளும் இன்றிச் செய்வதறியாது தவித்து வருகின்றார்.
உதவிடும் நல்ல மனம் கொண்டோரே உதவி கோரி நிற்கும் சகோதரிக்கு நேரடியாக உதவிட முன்வாருங்கள்.
தொலைபேசி இலக்கம்; 0779153817
வங்கிக் கணக்கு இலக்கம்: கறுப்பையா நிர்மலாதேவி
72784759; இலங்கை வங்கி, விசுவமடு
மேலதிகத் தொடர்புகளுக்கு: ராம்; தொலைபேசி : 00447448452286
* * * * *
யுத்தத்தின் விளைவுகளால் தனது கால் ஒன்றினை இழந்து மற்றைய காலும் செயலிழந்து போகும் நிலையில் வாழ்வாதாரத்திற்காகத் துடிக்கும் முன்னாள் பெண் போராளி.
தந்தை நோய்வாய்பட்ட நிலையில் தாயும் ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டு உள்ளதால் தனது வாழ்வாதாரத்திற்காக வேலை தேடி அலைந்தும் கால்கள் இல்லை என்ற காரணத்தினால் வேலை ஏதும் கிடைக்காத நிலையில் போராடும் இளம் பெண்.
உதவும் நல் உள்ளம் கொண்டோரே உதவிக்கரங்கள் கொடுத்திடுங்கள்.
தொலைபேசி இலக்கம்: 0773256776
வங்கிக் கணக்கு இலக்கம்: கிஸ்ணபிள்ளை துரைசிங்கம்
70580467; இலங்கை வங்கி, கிளிநொச்சி