மேற்கு வங்கத் தலைநகரான கொல்கத்தாவில் இருக்கின்ற பார்க் சர்சஸ் பகுதி முஸ்லிம் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டது. அரசியல் வட்டாரத்தில் முஸ்லிம்ஸ் டாமினேடட் ஏரியா என்று இப்பகுதி அழைக்கப்படுகிறது.

இங்கிருக்கக் கூடிய 4ம் எண் பாலத்திற்கு அருகாமையிலுள்ள குடிசை வாழ் முஸ்லிம்களின் குடியிருப்புகள் சத்தமில்லாமல் அகற்றும் பணி யில் ஈடுபட்டிருக்கிறது மேற்கு வங்க அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை.

4ம் எண் பாலத்தின் விரிவாக்கப் பணிகள் காரணமாக இந்த குடிசைப் பகுதிகள் அகற்றப்படு கின்றன என அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் யதார்த் தத்தைப் பார்த்தால் குடிசைப் பகுதி மக்கள் முஸ்லிம் சமூகத் தைச் சேர்ந்தவர்கள் என்பதால் முழு வீச்சில் அவர்களின் குடியி ருப்புகள் அகற்றப்படுகின்றன. இது அரசு காட்டும் பாரபட்சம் என கொல்கத்தா மாநகர மக்கள் மத்தி யில் பேசப்படுகின்றன. மேற்கு வங்க இஸ்லாமிய பத்திரிகைகள் இதே கருத்தை வலியுறுத்துகின்றன.

குடிசைப் பகுதிகள் அகற்றும் நடவடிக்கைகளில் இப்பகுதி முஸ் லிம்களுக்கு பாரபட்சம் காட்டப் படுகிறது என்பதற்கு கூறப்படும் காரணங்கள் வலுவானவையா கவே இருக்கின்றன. மம்தா அர சின் மீதான முஸ்லிம்களின் குற் றச்சாட்டுகளை உண்மைப்படுத்து பவையாக உள்ளன.

கொல்கத்தாவிலுள்ள சயின்ஸ் சிட்டியிலிருந்து பார்க் சர்கஸ் பகுதிவரை சுமார் நான்கு கி.மீ. தூரத்திற்கு 4ம் எண் பாலத்தை விரிவுபடுத்தும் பணியில் பொதுப் பணித்துறை ஈடுபட்டுள்ளது.

இதற்காக 4ம் எண் பாலத்திற்கு அருகாமையிலுள்ள குடிசைப் பகு திகளை அது அகற்றத் தொடங்கி யிருக்கிறது. இக்குடியிருப்புவாசிக ளில் மிகப் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். குடியிருப்பு அகற்றத் திற்காக வெறும் 12 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடாக இவர்களுக்கு வழங் கப்பட்டிருக்கிறது. அதுவும் அதிகா ரப்பூர்வமற்ற வகையில்!

அதாவது அரசின் அங்கீகாரம் இல்லாமல் நகர்ப்புற வளர்ச்சித் துறை சைலண்ட்டாக தொகையை செட்டில் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அதே சமயம், சில மாதங்க ளுக்கு முன் பார்க் சர்கஸ் பகுதியி லிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நோனா டங்கா என்கிற இடத்தில் பெரும்பான் மையாக இந்து சமூகத்தினர் வசித்த குடிசைப் பகுதிகளை அகற் றும் முயற்சியில் அரசு ஈடுபட்ட போது பல அமைப்புகள் அப்ப குதி மக்களின் (அதிகபட்ச) நஷ்ட ஈட்டுத் தொகைக்காக அரசாங்கத் திற்கு எதிராக போராட்டக் களம் கண்டன.

இதன் விளைவாக, மாநில அரசு இப்பகுதி மக்களுக்கு மறு குடியிருப்பு பகுதிகளை உருவாக் கித் தந்து, முறையான நஷ்டஈடு வழங்கவும் ஆவண செய்யும் என மாநில முதல்வரான மம்தா பாணர்ஜியும், நகர்ப்புற வளர்ச்சித் துறையின் அமைச்சரான ஃபர் ஹத் ஹக்கீமும் உறுதியளித்தனர்.

இதனையடுத்து நோனாடங்கா பகுதியிலிருந்து வெளியேற்றப் பட்ட இந்து சமூக மக்களுக்கு நகர்ப்புற ஏழைகளுக்கான அடிப் படை சேவைகள் (ஆநமட) மற் றும் வால்மீகி அம்பேத்கர் அவாஸ் யோஜனா (யஅஙஆஅவ) ஆகிய திட் டங்களின் கீழ் வேறு பகுதிகளில் வீடுகளும், அடுக்குமாடி குடியிருப் புகளும் ஒதுக்கப்பட்டன. இதைத் தான் பாரபட்சம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

நோனாடங்கா பகுதி இந்து குடிசைவாசிகளுக்காக சி.பி.ஐ.எம்., சி.பி.ஐ., பார்வர்டு பிளாக் உள்ளி ட்ட அரசியல் கட்சிகளும் பல்வேறு சமூக அமைப்புகளும் வரிந்து கட்டி களமிறங்கின. ஆனால் பார்க் சர் கஸ் பகுதியிலிருந்து வெளியேற் றப்பட்டுள்ள மக்களுக்காக எந்த ஒரு சமூக அமைப்போ, அரசியல் கட்சிகளோ குரல் எழுப்பவில்லை.

பார்க் சர்கஸ் பகுதிவாசிகள் முஸ்லிம்கள் என்ற ஒரு காரணத் தைத் தவிர இதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

மேற்கு வங்கத்தில் எதிர்கட்சி அந்தஸ்தில் இருக்கின்ற முப்ப தாண்டு காலமாக சிறுபான்மை முஸ்லிம்களின் வாக்குகளை பெற்று வந்த கம்யூனிஸ்டுகளும் இவர்களுக்காக போராட முன் வரவில்லை.

ஆளுங்கட்சியின் இந்த பார பட்ச போக்கை, அநியாயமான நடவடிக்கைகளை தங்களின் சுய நலத்திற்காக, அரசியல் ஆதாயத் திற்காக என்ற அளவில் கூட எதிர் த்து ஒரு போராட்டத்தை நடத்த கம்யூனிஸ்டுகள் முன் வரவில்லை என்பது கம்யூனிஸ்டுகள் என்ற போர்வையில் மதவாதிகள் ஒளிந் திருக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.

மக்கள் பிரச்சினைக்காக போராடுகிறோம் என்று நாடு முழு வதும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி யிருக்கும் கம்யூனிஸ்டுகளின் சுய ரூபம் அவர்களின் கோட்டையி லேயே அம்பலப்பட்டிருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன், அதா வது புத்தவேவ் பட்டாச்சாரியாவின் தலைமையில் இதே இடதுசாரி கள் ஆட்சியிலிருந்தபோது வட க்கு கொல்கத்தா பகுதியிலும் இதேபோன்ற நகர்ப்புற வளர்ச்சி என்ற பெயரில் குடிசைப் பகுதிகள் அகற்றப்பட்டபோது முறையான இழப்பீட்டுத் தொகையும், மாற்று குடியிருப்புகளும் அப்பகுதி மக்க ளுக்கு வழங்கியது புத்ததேவ் அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக, ஏற்கெனவே குடிசைப் பகுதிகள் அகற்றும் நடவடிக்கை களின்போது போதுமான இழப் பீட்டுத் தொகையும், மாற்று குடி யிருப்பு வசதிகளும் மேற்கு வங்க அரசால் செய்து கொடுக்கப்பட்ட முன் மாதிரி இருக்கும் நிலையில், பார்க் சர்கஸ் பகுதி முஸ்லிம்க ளுக்கு வெறும் 12 ஆயிரம் ரூபாய்களை கொடுத்து விட்டு அவர்களை விரட் டியடிக்கும் முயற் சியை மம்தா அரசு மேற்கொண்டி ருப்பது பாரபட்சமான போக்கு தான்.

4ம் எண் பாலத்திற்கு வடக்கு புறத்தில் சுமார் ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. பார்க் சர்கஸ் பகுதியைச் சேர்ந்த திரிணா முல் காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் தலைவரான ஆலம்பாய் என்பவர் நகரின் வளர்ச்சிக்காக ஒத்துழை ப்பு தாருங்கள் என்று இந்த மக்களிடத்தில் வெளிப்படையாக கேட்டுக் கொண்டிருப்பதாகவும், குடிசைவாசிகள் சிலர் 12 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொள்ள சம்ம தித்திருப்பதாகவும், சம்மதிக்க வில்லை என்றால் புல்டவுசர் மூலம் வீடுகள் இடித்து தரைமட் டமாக்கப்பட்டு விடும் என்று இவர்கள் மறைமுகமாக மிரட்டப் பட்டிருப்பதாகவும் இவர்களை நேரில் சந்தித்த டிசிஎன் இணைய தள செய்தி ஊடகத்தில் அதன் செய்தியாளர் ஜைதுல் ஹக் கூறுகி றார்.

இந்த மக்களுக்காக இழப்பீட் டுத் தொகை நேரடியாக அரசாங் கத்திடமிருந்துதான் வருகிறதா என்பதை அறிய முயற்சித்தால் இந்த விஷயத்தில் அரசு ரீதியான எவ்வித தொடர்புமில்லை என்றே தெரிகிறது என்றும் கூறுகிறார் ஹக்.

படிப்பறிவற்றவர்களாக, கூலித் தொழிலாளிகளாக உள்ள குடிசை வாசிகளில் சிலர் 12 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு, உள்ளூர் எம். எல்.ஏ.வுக்கும், மாநில அமைச்சர் ஜாவித் அஹ்மது கானுக்கும் நன்றி தெரிவிப்பது அம்மக்களிடத்தி லுள்ள அறியாமை என்றே சொல்ல வேண்டும்.

பெயர் குறிப்பிட விரும்பாத உள்ளூர் டோபிஸா காவல் நிலைய அதிகாரி ஒருவர், “இந்த குடிசைவாசிகள் 12 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு இட த்தை காலி செய்ய சம்மதித்திருக் கிறார்கள்...” என்கிறார்.

இப்பகுதி குடிசைவாசிகள் முஸ்லிம்கள் என்பதால் தனது கட்சியின் முஸ்லிம் பிரமுகர் களை விட்டு, அம்மக்களை வெளி யேற்ற தந்திரமாக முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது திரிணாமுல் காங்கிரஸ்.

உள்ளூர் கவுன்சிலரான சி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த பர்ஸானா சவுத்ரி, தனக்கு குடிசைப் பகுதி கள் அகற்றம் குறித்த எந்தத் தகவ லும் தெரியாது என்கிறார். அதே சமயம், இதுவரை உதவி கேட்டு யாரும் தன்னிடத்தில் வரவில்லை என்றும், இழப்பீட்டுத் தொகை குறித்த தகவலும் தனக்குத் தெரி யாது என்றும் கூறுகிறார்.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக எண் 4 பாலத்திற்கு அரு கில் வசிக்கும் இம்மக்கள் வறு மைக் கோட்டிற்கு கீழே இருப்ப வர்கள். இவர்கள் தினக் கூலிகளா கவும், ரிக்ஷா இழுப்பவர்களாக வும், பழைய துணிகளை விற்பவர்களாகவுமே இருக்கின்றனர். இவர்களை வாக்கு வங்கிகளாக பயன் படுத்திக் கொண்ட உள் ளூர் அரசியல்வாதிகள் தற்போது அவர்களின் அடிப்படை வசதிக ளில் கை வைத்துள்ளனர்.

இப்பகுதிவாசிகளின் குழந்தைகள் அருகிலுள்ள அரசுப் பள்ளிக ளில் பயன்று வருகின்றனர். கொல் கத்தாவில் மாணவர்களுக்கு டெர் மினல் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், வீடுகள் அகற் றப்பட்டதால் இப்பகுதி மாண வர்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட னர்.

இருபதாண்டுகளுக்கும் மேலாக இங்கே வசித்து வருகின்ற நூர்ஜ ஹான் பீவி என்பவர், “நாங்கள் ஏழைகளாக இருப்பதால் எங்க ளால் போதுமான இழப்பீட்டுத் தொகை பெற முடியவில்லை. இழப்பீட்டுத் தொகையை அதிகப் படுத்திக் கேட்டால், எங்களை வலுக் கட்டாயமாக வெளியேற்றி விடு வார்கள்...” என்கிறார்.

அரசாங்கம் எவ்விதமான முன் னெச்சரிக்கை நோட்டீசும் வழங் காமல் இந்த குடிசைப் பகுதியை காலி செய்ய உள்ளூர் கட்சிப் பிரமுகர்களையும், ரவுடிகளையும் ஏவியிருக்கிறது என்கின்றனர் ஏரியாவாசிகள் சிலர்.

சில தினங்களுக்கு முன் ஹஜ் யாத்திரையை முடித்து விட்டு கொல்கத்தா திரும்பியிருக்கும் சி.பி.ஐ.எம். கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், முன் னாள் அமைச்சருமான அப்துல் ரஜ்ஜாக் முல்லாவின் கவனத் திற்கு இப்பிரச்சினையை கொண்டு சென்றிருக்கிறது டிசிஎன் இணைய தள செய்தி ஊடகம்.

பார்க் சர்கஸ் பகுதி குடிசைவா சிகள் முஸ்லிம் என்ற காரணத்திற்காக பாரபட்சம் காட்டப்பட் டிருப்பது கண்டனத்திற்குரியது. இவர்களும், நோனா டங்கா பகுதிவாசிகளைப் போன்றே மறு குடியிருப்புகளில் அமர்த்தப்பட வேண்டும். முறையான இழப்பீட் டுத் தொகையையும் அரசு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண் டிருக்கிறார் அப்துல் ரஜ்ஜாக்.

இதற்கிடையில், ஜம்மியத்தே உலமாயே ஹிந்த் அமைப்பின ரும், அஸ்ஸாமில் இயங்கி வரும் அகில இந்திய ஜனநாயக ஐக்கிய முன்னணித் தலைவர் மௌலானா சித்தீக்குல்லாஹ் சவுத்ரியும், உண்மை நிலவரத்தை விரைவில் கண்ட றிந்து தீர்வுகான முயற்சிப்போம் என்கின்றனர்.

மேற்கு வங்க சிறுபான்மை முஸ்லிம்களின் அபரிதமான வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த மம்தா பானர்ஜி, அந்த மக் களின் உரிமைகளை மறுத்தால் அடுத்த முறை அவர் ஆட்சியை இழக்கும் நிலை ஏற்படும் என்பது திண்ணம்.

- ஃபைஸல்