மதக் கலவரங்களின்போதும், பெரும்பான் மையினர் நடத்தும் வன்முறைத் தாக்கு தல்களின்போதும், வன்முறையாளர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள், வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக இருப்பதும், தாக்குதலுக்குள்ளான மக்கள் மீதே வழக்குகளைப் பதிவு செய்வதையும் நாடு சுதந் திரம் பெற்ற காலத்திலிருந்தே கடைபிடித்து வருகின்ற மரபாகவே வைத்திருக்கிறது.

பெரும்பான்மை வன்முறைக்கு அரசு இயந்திரங்கள் துணை போவதால், வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்க ளின் உயிர் உடமைகள் சூறையாடப்பட இந்த பாதுகாப்பு அமைப்புகளே முக்கிய காரணங்களாகின்றன.

கடந்த தியாகத் திருநாள் (பக்ரீத் பண் டிகை) கொண்டாடத் தயாராகிக் கொண்டி ருந்த ஹைதராபாத் முஸ்லிம்கள் அங்கு இந்துத்துவாவினர் நிகழ்த்திய வன்முறை யினால் மகிழ்ச்சி பொங்கும் பெருநாள் தினத்தை பீதியுடனே கழித்தனர்.

கால்நடைகளை அறுத்துப் பலியிடக் கூடாது என்ற பிரச்சாரத்தை பெருநாள் வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே துவக்கி விட்ட ஹைதராபாத் இந்துத்துவா சக்திகள், திட்டமிட்டபடி ஹைதராபாத்தில் கலவரத்தை நிகழ்த்தி முஸ்லிம்களின் சொத்துகளை சூறையாடியுள்ளனர்.

(இது குறித்த செய்தியை கடந்த இதழில் வெளியிட்டிருந்தோம்)

நடந்த கலவரங்களுக்கு முக்கிய காரணமே மாநகர காவல்துறைதான் என குற்றம் சாட்டி, மாநில காவல்துறை தலைவரை சந்தித்து மனு அளித்திருக்கின்றனர் ஹைதராபாத் முஸ்லிம் தலைவர்கள்.

ஐக்கிய முஸ்லிம் பேரவை என்ற பெயரில் ஒன்றிணைந்திருக்கும் ஹைதராபாத் முஸ்லிம் தலைவர்கள், காவல்து றையின் ஒரு சார்பு போக்கு குறித்தும், சமூக விரோதிகளை காவல்துறை பாது காப்பது குறித்தும் விரிவான அறிக்கை தயாரித்து அதை கூட்டறிக்கையாக வெளியிட்டு மாநகர காவல்துறையின் சுய ரூபத்தை அம்பலப்படுத்தியுள்ளனர்.

இந்த அறிக்கையோடு, காவல்துறை தலைவரைச் சந்தித்து மனு அளித்திருக் கும் அவர்கள் அம்மனுவில், “பெருநாளை முன்னிட்டு முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது வன்முறையாளர்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளனர். பொது மக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். அமைதியை விரும்பும் மக்கள் தூக்கமில் லாத இரவுகளை கழிக்கின்றனர். இது போன்ற சம்பவங்கள் (வன்முறைச் சூழல் கள்) எப்பொழுதெல்லாம் நிகழ்கிறதோ அப்போதெல்லாம் அதிகாரிகளின் கைக ளுக்கு அதிகாரங்கள் மாற்றப்படுகின்றன.

இடைவெளி விட்டு, தொடர்ந்து சிறு பான்மையினர் இலக்கு வைத்து தாக்கப் படுகின்றனர். அவர்களது சொத்துகள் சூறையாடப்படுகின்றன. இதற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் பொய் வழக்கு களால் கைது செய்யப்படுகின்றனர்.

முஸ்லிம்களின் பெருநாள் போன்ற விழாக்களின்போது காவல்துறையின் செயல்பாடற்றதன்மை கட்டவிழ்த்து விடப் படும் வன்முறைகளுக்கு காரணமாகின் றன...'' என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.

மேலும், காவல்துறை தலைவரை சந்தித்து, “ஹைதராபாத்தில் 1985ம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் அனைத்து போலீஸ் அதிகாரிகளையும் மாற்றம் செய்ய வேண்டும் என பல வரு டங்களாக தொடர்ந்து நாங்கள் வலியு றுத்தி வருகிறோம்...'' என்று கூறியதோடு, பல வருடங்களாக மாநிலத்தில் பணி செய்து கொண்டே சமூக விரோதிகளுக்கு துணை போகும் காவல்துறை அதிகாரி களின் பட்டியலையும் காவல்துறை தலை வரிடம் அளித்துள்ளனர் ஐக்கிய முஸ்லிம் பேரவையின் பிரதிநிதிகள்.

அதோடு, அரசாங்கம் இதுபோன்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வில்லையென்றால் நாங்கள் தயாரித்து வைத்துள்ள காவல்துறை அதிகாரிகள் மற்றும் சமூக விரோதிகளின் பட்டியலை மாநிலம் எங்கும் வெளியிட்டு மக்கள் மத்தியில் அவர்களை அம்பலப்படுத்துவோம் எனவும் எச்சரித்து விட்டு வந்திருக் கின்றனர்.

உண்மையிலேயே ஆயுதங்களையும், அதிகாரத்தையும் கையில் வைத்திருக்கும் காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகள் நினைத்தால் அதிகபட்சமாக 24 மணி நேரத்திற்குள் எப்படிப்பட்ட வன் முறையையும் கட்டுக்குள் கொண்டு வந்து விட முடியும்.

அதே சமயம், வன்முறையே உருவாகா மல் முன்கூட்டியே தடுக்கவும் முடியும். என்ன செய்வது ஊர் அமைதியாக இருந் தால் தங்களுக்கு வேலையோ, ஆதா யமோ இல்லை என்று நினைக்கிறதோ காவல்துறை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

- ஃபைஸ்