மாணவர்களை ஆசிரியர்கள் அடித்தால் 3 ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளதால் ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியும் பீதியும் ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் மீது பல்வேறு விதமான புகார்கள் சமீப காலமாக எழுந்துள்ளன. மாணவர்களை அடிப்பதாகவும், குறித்த கடையில்தான் சீருடைகள், புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வாங்க கூறுவதாகவும், தங்களிடம் டியூசன் படிக்குமாறு கட்டாயப்படுத்து வதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது.

இந்த தொல்லைகளுக்கு முடிவு கட்ட மத்திய அரசு, 'பள்ளிக்கூடங்களில் நேர்மையற்ற நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்' என்ற பெயரில் ஒரு சட்டத்தை இயற்ற உள்ளது. இதற்காக தயாராக உள்ள வரைவு மசோதாவில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

* மாணவர்களை அடிக்கக்கூடாது. அவர்கள் தகுதிவாய்ந்த தேர்வுகளை எழுதுவதற்கு தடை விதிக்கக்கூடாது.

* குறைவாக மதிப்பெண் பெற்றதற்காக மாணவர்களை பள்ளியிலிருந்து நீக்கக்கூடாது. அதேபோன்று வேண்டும் என்றே மாணவர்களை 'பெயில்' ஆக்கக்கூடாது.

* பள்ளிக்கூடம் பற்றிய குறிப்பேட் டுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது. மாணவர் சேர்க்கை தேர்வுக்கும் கட்டணம் விதிக்கக்கூடாது. இது தொடர் பான அனைத்து தகவல்களையும் (பள்ளிக் கூடம் பற்றியது, மாணவர் சேர்க்கை தொடர்பானது) இணைய தளத்தில், பள்ளிக்கூட விளம்பர பல கையில் இடம் பெற செய்ய வேண்டும்.

* பள்ளிக்கூட பருவங்களின் இடையில் கட்டணம் வசூலித்தால் அதுவும் ஆராயப்படும்.

* விதிமுறை மீறி கேபிடேஷன் கட்டணம், நன்கொடை வசூலிக்கக் கூடாது.

* பள்ளிக்கூடங்கள் தவறான தகவல்களை விளம்பரங்களாக வெளியிட்டால் அதுவும் தண்டனைக்குரிய குற்றம்.

* 6ம் வகுப்பு, 9ம் வகுப்பு, 11ம் வகுப்பு ஆகியவற்றில் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தி சேர்க்க லாம்.

* எச்.ஐ.வி., எய்ட்ஸ் போன்ற நோய்கள் தாக்கிய மாணவர்களை, நோயை காரணம் காட்டி பள்ளிகளிலி ருந்து நீக்க தடை விதிக்கப்படுகிறது. மாணவர்களை அடித்தால் ஆசிரியர்க ளுக்கு 3 ஆண்டுவரை சிறைத்தண் டனை விதிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும்.

சில நேரங்களில் இரண்டும் விதிக்கப்படும். இந்த வரைவு மசோதா, நவம்பர் 1 ஆம் தேதி டெல்லியில் நடக்கவுள்ள மத்திய கல்வி ஆலோசனை வாரிய கூட்டத்தில் முன் வைக்கப்படும். அதன் பின்னர் அதை சட்டமாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அந்த வரைவு மசோதாவில் கூறப்பட்டுள் ளது.

- அபு அனஸ்