சாராயக் கடைக்குள் அமர்ந்து கொண்டு சர்பத்துதான் குடித்தேன் என்று சொன்னாலும் அது பார்ப்பவர்களுக்கு சாராயமாகவே தோன்றும். அதனால் அத்த கையோரை மக்கள் வெறுத்து ஒதுங்குவது இயல்பான துதான். அதைப்போல் மதவாத பாஜக வோடு உறவு வைத்துக் கொண்டு மதச்சார்பின்மை பேசினால் அது மக்களால் புறக்கணிக்கப்படும். உ.பி.யின் முன்னாள் முதல்வரும், மதவாத பாஜகவின் தளபதியும், பாபர் மஸ்ஜித் இடிப்பின் சூத்ர தாரியுமான கல்யான்சிங்குடன் ஒரு தேர்தலில் கரம் கோர்த்து மண் ணைக் கவ்விய பின் மண்ணில் புரண்டு புலம்பினார் முலாயம் சிங் யாதவ்.

அதேபோல் பாஜ கவின் தேசிய ஜன நாயக கூட்டணி யில் ஒரு காலத்தில் அங்கம் வகித்து பாராளுமன்ற சபா நாயகர் பதவிவரை அனுபவித்து பின்பு கூட்டணியிலிருந்து கழன்ற தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, "பாரதிய ஜனதாவுடன் கூட் டணி வைத்துக் கொண்டது நான் செய்த மிகப்பெரிய தவறு. இதனால், முஸ்லிம்களின் கோபத்துக்கு ஆளாக நேர்ந்து விட்டது...'' என்று புலம்புகிறார்.

தெலுங்கு தேசம் கட்சியின் மூன்று நாள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, "தேசிய ஜனநாயக கூட்டணியில் நான் அங்கம் வகித் தது மிகப்பெரிய தவறு என தற்போது உணர்கிறேன். பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் நான் இருந்ததால், முஸ்லிம்கள் என்னை விட்டு விலகிச் சென்று விட் டனர். குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத் துக்கு பிறகு நடந்த கலவரத்துக்கு பொறுப்பு ஏற்று பதவி விலகும்படி முதல்வர் நரேந்திர மோடியை வற்புறுத்தினோம். ஆனால், அவர் பதவி விலகவில்லை. இதனால், முஸ்லிம்களின் கோபத்துக்கு நாம் ஆளாக நேர்ந் தது. இனி எதிர்காலத்தில் இது போன்ற தவறை செய்ய மாட் டோம். மைனாரிட்டிகளின் நன் மைக்காக பாடுபடுவோம். விவசாயத் துறையிலும் சில தவறுகளை செய்துவிட்டோம். இதெல்லாம் நமது தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டன...'' என்று பேசியுள்ளார்.

மதவாத பாஜகவுக்கு பால் வார்த்த முலாயம் சிங் மற்றும் சந்திரபாபு நாயுடு போன்றவர்களுக்கு பட்டபின்தான் தெரிகிறது போலும். தமிழகத்தில் ஒரு காலத்தில் பாஜகவை தாங்கிப்பிடித்த ஜெயலலிதா, கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வைக்க தானாக முன் வந்தபோது சட்டை செய்யாமல் விட்டதால்தான் சிறுபான்மை மக்களின் வாக்குகளை அவரால் பெற முடிந்தது. ஜெயலலிதாவின் இந்த அரசியல் வியூகத்தை இனியாவது பாஜகவோடு கரம் கோர்க்க நினைப்பவர்கள் பின்பற்றட்டும்.

- முகவை அப்பாஸ்