கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த இராமலிங்கம் - செல்வி இணையரின் மூத்த மகள் ஸ்ரீமதி கள்ளக்குறிச்சிக்கு அருகே உள்ள கனியாமூர் ‘ஸ்ரீ சக்தி இண்டர்நேஷ்னல்’ உண்டு உறைவிடப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.

13. 07. 2022 அன்று காலை 6. 30 மணிக்கு ‘உங்கள் மகள் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து விட்டார். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறோம்’ என்று பள்ளி நிர்வாகத்தினர் ஸ்ரீ மதியின் தாய் செல்விக்கு அவர்களுக்குத் தொலைபேசி கூறிள்ளனர். அங்கு சென்று பார்த்தபோது மாணவி இறந்த பிறகே மருத்துவமனைக்கும் கொண்டு வரப்பட்டார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தன் மகளின் மரணத்தில் அய்யம் அடைந்த செல்வி, உறவினர்கள் மற்றும் இந்திய சனநாயக வாலிபர் சங்கத்தினர் 4 நாள்கள் தொடர் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

srimathi student17. 07. 2022 அன்று பெருந்திரளாக பொது மக்களும் முற்போக்கு அமைப்பினரும் மிகப்பெரியப் போராட்டத்தை நடத்தினர். அப்போது சிலர் பள்ளிப் பேருந்துகளை எரித்தும் பள்ளியினுள் சென்று கணினி உள்ளிட்ட பொருள்களை அடித்து நொறுக்கினர். ஒரு சிலர் மாணவர்களின் கான்றுகள் முதலியவற்றைத் தீயிட்டு எரித்தனர் என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்வு நடைபெறுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, தமிழ்நாட்டு அரசின் காவல் துறைத் தலைவர் சைலேந்திரபாபு பள்ளி நிர்வாகத்தின் மீது எந்தத் தவறும் இல்லை என்று ஊடங்களுக்கு பேட்டி அளித்தார். மிகப்பெரும் போராட்டம் நடைபெற்ற பிறகு பள்ளியின் தாளாளர் இரவிக்குமார், பள்ளியின் செயல­hளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை சி. பி. சி. ஐ. டி. காவல்துறையினர் கைது செய்தனர்.

மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரசுவதி ரங்கசாமி அவர்கள் 21. 07. 2022 அன்று ஆய்வு மேற்கொண்டார். “விடுதி முறையான அனுமதியின்றி நடத்தப்பட்டது. இது தண்டனைக்குரிய குற்றம்; இது போன்று நடத்தக் கூடாது” என்று கூறினார். “விடுதி முறையான அனுமதி பெற்றிருந்தால், விடுதி காவலர், பெண் காப்பளார் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டு, விதிமுறைகள் பின்றபற்றப்பட்டு விடுதிக் கென இயங்கியிருக்கும். பள்ளி நிர்வாகம் விடுதிக்கு முறையான அனுமதி பெறாமல் இயங்கியதை காவல் துறை புகாராக அளித்து முதல் தகவல் அறிக்கையில் திருத்தம் செய்ய பரிந்துரைப்போம்” என்றார். (இந்து தமிழ் 22. 7. 22) தேசியக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையர் பிரியங்க்கனூங்கோ 27. 07. 2022 அன்று 7 பேர் கொண்ட குழுவினருடன் வந்து ஆய்வு நடத்தினார். காவல்துறை விசாரணை அதிகாரியின் கவனக்குறைவும் இருந்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்.

காவல்துறையின் விசாரணையின் தொடக்கத்தில் சில குறைபாடுகள் இருந்துள்ளதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். விடுதி அனுமதியின்றி இயங்கி வருவதையும், விடுதியில் தங்கியுள்ள மாணவர்களிடம் அவர்களின் தேவைகள் குறித்து ஆய்வு நடத்தப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். ஸ்ரீமதியின் இல்லத்திற்குச் சென்று, அவரின் பெற்றோரிடம் விசாரனை நடத்தி விட்டுச் சென்றனர் (The Hindu 28. 7. 22)

உளவுத்துறையினர் இந்த பெரும் கலவரங் களுக்குக் அந்தப் பள்ளியைச் சுற்றியுள்ள கிராமங் களைச் சேர்ந்த ஒடுக்கப்பட்டவர்கள் தான் காரணம் என்று கூறியதால் காவல்துறையினர் பள்ளியின் சுற்றுப் புறங்களில் கிராமங்களில் உள்ள ஏராளமான இளைஞர்களை கைது செய்தனர். இந்தச் செயலைக் கண்டித்தும் மாணவியின் குடும்பத்திற்கு நீதி வேண்டியும் வளவன் முனைவர் தொல். திருமா அவர்கள் தலைமையில் வி. சி. க. சார்பில் கள்ளக்குறிச்சியில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

மாணவியின் தந்தை இராமலிங்கம் உயர்நீதி மன்றத்தில் மகள் கொலைச் செய்யபட்டள்ளார் என்று கூறி நீதி மன்றத்தில் வாக்குத் தொடர்ந்தார். உடற்வறு ஆய்வில் தங்கள் தரப்பு மருத்துவரும் இடம் பெற வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார் அவ் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 10 நாட்களாக மாணவின் உடல் கள்ளக்குறிச்சி மருத்துவ மனை மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தது.

முதல் இரண்டு உடற்கூறு ஆய்வுகளிலும் சில மாறுவேறுபாடுகள் உள்ளதாக கூறுகிறார்கள். எனவே, ஜிப்மர் மருத்துவமனையின் உடற்கூறு ஆய்வை வழங்குமாறு வழங்குரைஞர் சங்கரசுப்பு வேண்டுகோள் விடுத்தபோது, அரசு வழக்குரைஞரே “அதை கொடுக்க வேண்டாம். ஸ்ரீமதியின் பெற்றோரிடம் முதலமைச்சர் வாக்குறுதி கொடுத்துள்ளார் வழக்கு விசாரனை பல கோணங்களில் நடத்தப்பட்டு நன்றாக சென்றுக் கொண்டிருக்கிறது” என்று கூறித் தடுத்து விட்டார். ஆகையால் நீதிபதி ஜிப்மர் உடற்கூறு ஆய்வை வழங்க உத்தரவிடவில்லை.

பள்ளியின் நிர்வாகிகள் 5 பேரையும் 3 நாள் சி. பி. சி. ஐ. டி. காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அரை நாளிலேயே விசாரணை முடிக்கப்பட்டு நீதி மன்றத்தில் நேர் நிறுத்தி சிறைக்கு அனுப்பி விட்டனர்.

பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட 5 பேரின் பிணை மனுவை விசாரித்த உயர்நீதி மன்ற நீதிபதி இளந்திரையன் அவர்கள், ஸ்ரீ மதியின் மரணம் தற்கொலை என்றும் பள்ளி நிர்வாகிகளுக்கும் மரணத்திற்கும் தொடர்பில்லை என்று கூறிப் பிணை வழங்கினார்.

வழக்கு விசாரணையே தொடங்காத நிலையில் நீதிபதி இப்படி ஒரு கருத்தைக் கூறியிருப்பது தீர்ப்பின் போக்கையே திசைத் திருப்புவதாக உள்ளது. இந்த நீதிபதியிடமிருந்து இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்­துள்ளனர். சி. பி. அய்! எம். பொதுச் செயலாளர் கே. பாலகிருட்டிணன் அவர்கள் இக்கோரிக்i­கயாக வலிமையாக முன்வைத்துள்ளார்.

மற்றொரு உயர்நீதி மன்ற நீதிபதி என். சதிஷ்குமார், ஸ்ரீமதி மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்த வழக்குரைகள் மீது பார்கவுன்சில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், வளையொலி, வாட்ச்ஆப், டுவிட்டர் உள்ளவற்றை முடக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டு கருத்துரிமையை பறித்துள்ளார். நீதிமன்றத்தின் போக்கு அத்துமீறாலாகவே அதைக் கண்டிக்க வேண்டியுள்ளது.

மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் உண்மை அறியும் குழு அங்கு செய்ய நடத்தியபின் ஸ்ரீமதியின் மரணத்தை கொலை வழக்கு என்ற தன்மையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. இந்த வழக்கு முடியும் வரை ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் ஒரு குழு அமைத்து அந்தப் பள்ளி நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது. அந்தப் பள்ளியின் காவலர், மாணவியின் உடன் தங்கியிருந்தவர்கள், பள்ளித் தாளாளரின் இரண்டு மகன்கள் ஆகியோi­ரயும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தள்ளது.

போராட்டத்தில் கலந்து கொண்ட அப்பாவிகடிளை விடுதலைச் செய்யவேண்டும், போராட்டத்தை தடுக்கத் தவறிய அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைததுள்ளது. (The Hindu 21. 8. 2022)

பள்ளியின் தாளாளர் ஆர். எஸ். எஸ். அமைப்பைச் சார்ந்தவர்; அங்கு பலமுறை ஆர். எஸ். எஸ். முகாம்கள் நடந்துள்ளன. எனவே ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாகவே காவல்துறை இந்த வழக்கில் தொடக்கம் முதலே மெத்தனம் காட்டி வருகிறது எனக் கருத வேண்யுள்ளது.

மாணவியின் மரணம் அய்யத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ளதால் தொடர்புடையவர்கள் மீது தமிழ்நாடு அரசு தக்க நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்டிட வேண்டும் என்பதே பெரும்பாலன வர்களின் கோரிக்கை ஆகும்.

- பொழிலன்