விவசாயத் துறைக்கு வழங்குவதற்காக அனுமதிக் கப்படும் மொத்தக் கடன் தொகை 2004-ல் ரூ.96,000 கோடியாக இருந்தது இப்போது ரூ.10 லட்சம் கோடிக்கும் மேல் அதிகரித்திருக்கிறது. புதிதாக 18,000 கிராமப்புறக் கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும், விவசாயி களுக்குக் கடன் தொகை போதிய அளவு கிடைக்காமல் பற்றாக்குறையாகவே இருக்கிறது. இதற்குக் காரணம், இந்தத் தொகையின் கணிசமான பகுதி பெரு விவசாயி களுக்கும் பணக்காரர்களுக்கும் மடை மாற்றப்படுவது தான் என்கிறார் வேளாண் பொருளியல் நிபுணர் பேராசிரியர் ராம்குமார். சமீபத்தில், அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் கூட்டத்தில் மும்பையில் பேசு கையில் இதை அவர் தெரிவித்தார்.

விவசாயத்துக்கான நேரடி வங்கிக் கடனில் 25 நகரங்களிலும் பெரு நகரங்களிலும் உள்ள வங்கிக் கிளைகள் மூலம் இப்போது வழங்கப்படுகின்றன.

மேற்கு வங்கத்தில் 55 கடன் நகரங்கள், பெரு நகரங்களின் வங்கிக் கிளைகள் மூலம் வழங்கப்படு கின்றன. கொல்கத்தாவில்தான் அதிகம் வழங்கப்படு கிறது. இதையடுத்து, மகாராஷ்டிரத்திலும் (37ரூ), தமிழ் நாட்டிலும் (32ரூ) இது அதிகம்.

இந்தக் கடன்களிலும் 50 ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில், அதாவது காரிஃப், ராபி பருவங்கள் முடிந்த பிறகு வழங்கப்படுகிறது. வங்கிக் கடன்கள் கிடைப்பதே இல்லை என்று விவசாயம் செய்யும் சிறு விவசாயிகள் புலம்புவதன் காரணம் இப்போது புரிந்திருக்கும்.

கிராமப்புற வங்கிப் பணி வீழ்ச்சி

1969-ல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதாலும் பிறகு எடுத்த விவசாயம் சார்ந்த கொள்கை முடிவுகளாலும் விவசாயத் துறை முன்னுரிமை பெற்றது. அனைவரை யும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை அரசு கொள்கை யாகவே அறிவித்தாலும் கிராமங்களுக்கும் விவசாயி களுக்கும் கடன் உதவி கிடைக்காததால் இந்த வளர்ச்சி குறிப்பிடும்படியான மாற்றங்களை ஏற்படுத்தவில்லை.

தாராளமயப் பொருளாதாரக் கொள்கை கள் அமலுக்கு வரத்தொடங்கிய பிறகு விவசாயிகள், சிறு வணிகர்கள், சிறு தொழில்முனைவோர், கிராமப்புற மக்களுக்குக் கடன் தரும் அளவு படிப்படியாகக் குறையத் தொடங்கியது. எனவே, தனியார் லேவாதேவிக்காரர்கள் அதிக வட்டிக்குக் கடன் கொடுத்து அந்த இடத்தை நிரப்பத் தொடங்கினர். தாராளமயக் கொள்கை அமலாகத் தொடங்கியபோது நாட்டில் வழங்கப்பட்ட மொத்தக் கடனில் 17ரூ லேவா தேவிக்காரர்களால் வழங்கப்பட்டது.

அடுத்த 10 ஆண்டுகளில் அது கிட்டத்தட்ட 27ரூ ஆக உயர்ந்தது. அதாவது, கடனில் கால் பங்குக்கும் மேல் லேவாதேவிக்காரர்களால் தரப்படுகிறது. அரசு நிறுவனங் களும் முறையான நிதி நிறுவனங்களும் விவசாயத் துக்கும் கிராமப்புறங்களுக்கும் கடன் கொடுப்பது குறைந்துவிட்டது.

1990-கள்தான் கிராமப்புறங்களுக்கு வங்கி கள் தாராளமாகக் கடன் கொடுத்த கடைசி 10 ஆண்டுகள். ஏழைகளுக்குக் கிடைக்க வேண்டிய கடன் மூலதனம் உயர் வருவாய்ப் பிரிவினருக்கும் பணக்காரர்களுக்கும் திருப்பப்படுகிறது.

1990-களில் விவசாயத்துக்கு வங்கிகள் நேரடியாகக் கொடுத்த கடனில் 92 தலா ரூ.2 லட்சம் அல்லது அதற்கும் குறைவான தொகை. இப்போது 46ரூ நேரடி வங்கிக் கடன்தான் ரூ.2 லட்சத்துக்கும் குறைவு. எஞ்சிய 54ரூ ரூ.2 லட்சத்துக்கும் அதிகம். அதாவது பணக்காரர்களுக்கு அதிகம்.

ஏறுகிறது கடன் சுமை

மொத்த விவசாயிகளில் 25 பேர் 1992-ல் கடன் வாங்கியவர்களாக இருந்தார்கள். 2013-ல் அவர்களின் எண்ணிக்கை 46ரூ ஆக உயர்ந்திருக்கிறது. கடனுக்கும் சொத்துக் கும் இடையிலான விகிதம் 1992-ல் 1.6ரூ ஆக இருந்தது 2013-ல் 2.5ரூ ஆக உயர்ந்திருக்கிறது. இது விவசாயிகளின் கடன் சுமையின் தீவிரத்தைக் காட்டு கிறது. விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தால் விவசாயி களுக்கு அதுவே பழக்கமாகிவிடும் என்ற விமர்சனம் சரியல்ல என்று ராம்குமார் மறுக்கிறார். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற உணர்வு விவசாயிகளுக்கு எப்போதுமே உண்டு. வருவாய் இல்லாததால்தான் விவசாயிகள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர்.

வேளாண்மையில் வளர்ச்சி இப்போது வெறும் 2ரூ முதல் 3ரூ ஆகத்தான் இருக்கிறது. இது இப்படியே தொடர்ந்தால் 2020-ல் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் இலக்கை எட்டவே முடியாது என்று கூறும் ராம்குமார், ஆண்டுக்கு 14ரூ அளவுக்கு விவசாயம் வளர வேண்டும் என்கிறார்.

தமிழில் : சாரி

நன்றி : தமிழ் இந்து, 23-11-2017