வ.உ.சிதம்பரனார் ஒரு பழுத்த ஆத்திகர்; இந்து மதத்தைச் சேர்ந்தவர்; சைவ சமயத்தின் சாராம்சத்தை விளக் கும் அடிப்படை நூலாகக் கருதப்படும் சிவஞான போதத்திற்கு உரை எழுதிய இந்து தத்துவ மாமேதை.

சமூக நீதி என்று வரும் போது, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை வலுவாக ஆதரித்தவர். அதற்கு எதிராக வைக்கப்படும் வாதங்கள் யுக்திக்கும் அனுபவத்திற்கும் எதிரானது என்று அழுத்தம் திருத்தமாக எடுத்துக் காட்டியவர்.

சேலத்தில் 5.11.1927 அன்று நடந்த அரசியல் மகாநாட்டிற்குத் தலைமை ஏற்று, தனது அரசியல் பெருஞ் சொல்லாக ஆற்றிய வ.உ.சி.யின் இவ்வுரை இருட்டடிப்புச் செய்யப்பட்டது; தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்பட்டுக் கொண்டும் இருக்கிறது.

அவர் இந்து மதத்தின் மிகப் பெரிய தத்துவ மேதை என்பதற்காக-அவருடைய கருத்தை வெளியிடவும், பரப்பவும் இந்து மதத்தைக் காப்பாற்றுவதாகக் கூறுவோர் ஆயத்தமாக இல்லை.     

ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், பி.இராமமூர்த்தி மற்றும் சில / பல பொதுவுடைமைக் கட்சியினர் நாத்திகர்கள். சுரண்டலின் அனைத்து வடிவங்களையும் எதிர்ப்பதாகக் கூறிக் கொள்பவர்கள்.

ஆனால் சாதிய / வருணக் கொடுமைகளுக்கு முடிவு கட்டும் விகிதாச்சாரப் பங்கீட்டைப் பற்றி அடாவடியாக மவுனம் சாதிப்பவர்கள். இவர்கள் நாத்திகர்கள் என்பதற்காக, இந்து மதவாதிகள் இவர்களுடைய மவுனத்தை ஆதரிக்காமல் இருப்பது இல்லை.

காந்தியாரும், கோட்சேயும் சனாதனவாதிகள். இருவருமே பகவத் கீதையை வாழ்க்கைக்கு வழிகாட்டியாகக் கொண்ட வர்கள்; வருணாசிரம அதர்மத்தைத் தூக்கிப் பிடித்தவர்கள்.

ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களை அரவணைத்துக் கொள்வதன் மூலம்தான், பிறவி அடிப்படையிலான வருணாசிரம அதர்மத்தை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள முடியும் என்பது காற்தியாரின் வழியாக இருந்தது. உழைக்கும் மக்களான சூத்திரர்களை வன்முறையால் அடக்கி, ஒடுக்கி உயர்சாதிக் கும்பலினருக்குச் சேவை செய்ய வைக்க வேண்டும் என்ற மனு அநீதி வெளிப்படையாகக் கோலேச்சிய பழைய காலத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும் என்பது கோட்சேயின் நோக்கமாக இருந்தது. இந்த முரண்பாடுதான் காந்தியார் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்தது.

காந்தியார் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, கோட்சே யும், நாராயண் ஆப்தேயும் தூக்கிலிடப்பட்டனர். மற்ற சிலருக்குச் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. காந்தியார் கொலைக்குப் பெருந்திட்டம் (Master Plan) வகுத்த வீர் சவார்க்கர் போன்றேர் விசாரிக்கப்படவே இல்லை.

கோட்சே குழுவினர் காந்தியாரைக் கொல்லப் பல ஆண்டுகள் முயன்றும், காந்தியாரை நெருங்கும் வழி கிடைக் காமல் தவித்துக் கொண்டு இருந்தனர்.

ஆனால் இடஒதுக்கீட்டுக் கொள்கைச் செயல்பாட்டை, காந்தியாரால் மறுக்க முடியாதபடி விளக்கம் அளித்த ஓமந்தூராரை- எதிர்கொள்ள முடியாத நிலை உருவானபின், கேட்சே குழுவினருக்கு காந்தியாரை நெருங்கும் வாய்ப்புக் கிடைத்தது. வீர் சவார்க்கரும், கோட்சே குழுவினர் காந்தியை நெருங்க வழி ஏற்படுத்திக் கொடுத்தவர்களும் விசாரணை வளையத்திற்கு உள்ளே வராமலேயே தப்பிக்க முடிந்ததில் இருந்து, மனு அநீதி வெளிப்படையாக ஆட்சி செய்ய வேண்டும் என்ற கருத்தியலைக் கொண்டவர்கள வலுவாக இருந்ததை / இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.    

அதாவது ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களை அரவணைத்துக் கொள்வதன் மூலம்தான்-பிறவி அடிப்படையிலான வருணாசிரம அதர்மத்தை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும் / முடியும் என்ற கருத் தும், மனு அநீதியை வெளிப்படையாக ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியே தீர வேண்டும் என்ற கருத்தும்தான் முரண்பட்டுக் கொண்டு முன்னணியில் நிற்கின்றன.

வ.உ.சி.யின், நீதிக் கட்சியின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கருத்து இன்று களத்தில் இருக்கும் இடம் மிகப் பலருக்குத் தெரியவில்லை.

ஆனால் இக்கருத்து மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியினால் மேலும் செழுமைப்படுத்தப்பட்டு விகிதாச்சாரப் பங்கீடு என்பதாக வளர்த்து எடுக்கப்பட்டு உள்ளது.

இக்கொள்கையின்படி, கல்வி, அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து நிலை (Class I, Class II, Class III and Class IV) வேலைகள், எரிவாயு, பெட்ரோல் விநியோகம் போன்ற முகமை (Agency) அளிப்பது, இன்னும் அரசியல், பொருளாதாரம், சமூக நடவடிக்கைகள் அனைத்திலும், எல்லா மதங்களிலும் உள்ள முற்பட்ட வகுப்பினர், எல்லா மதங்களிலும் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் ஆகியோருக்கு மக்கள் தொகையில் அவரவர் விகிதப்படி பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்.

இப்படிப் பகிர்ந்து அளிக்கப்படுவதில் சீர்மை இல்லாவிட் டால், உள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அதாவது ஒரு பிரிவில் ஒரு உள்சாதியினர், தொடர்ந்து அவர்களுடைய மக்கள் தொகை விகித்தில் பங்கு பெற முடியாமல் போனால், அதை உள் ஒதுக்கீடு மூலம் சமன் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்வதால் அனைத்துப் பிரிவிலும் உள்ள திறமைசாலிகள் உயர்நிலை வேலைகளை அடைய முடியும். அனைத்துப் பிரிவிலும் உள்ள குறைந்த அறிவுத் திறன் உடையோர் அடுத்த நிலை வேலைகளை அடைய முடியும்.

இப்போது நடப்பது போல் உயர்சாதிக் கும்பலினரில் உள்ள குறைந்த அறிவுத்திறன் உடையோர் உயர்நிலை வேலைகளைப் பெறுவது தடுக்கப்பட்டு விடும். அதே போல் அறிவுத் திறன் மிகுந்து இருந்தாலும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் உயர்நிலை வேலைகளைப் பெற முடியாமல் செய்யும் தடைகள் நீங்கி விடும்.

இன்று உயர்நிலைகளில் / ஆதிக்கம் செலுத்தும் வேலை களில் பார்ப்பனர்கள் அளவுக்கு மீறி நிரம்பி வழிவதால், பார்ப்பன ஆதிக்கத்தை வலுப்படுத்தும் / தளர விடாமல் பார்த்துக் கொள்ளும் செயல்களைத் துணிச்சலாக நடை முறைப்படுத்த முடிகிறது. மென்மையான விவாதத்தில் இருந்து வன்முறையான அடி தடி, கொலை, கொள்ளை என எந்த நடவடிக்கையாக இருந்தாலும், இறுதி முடிவை வடிவமைக்கும் வலிமையும், அதிகாரமும் பார்ப்பனர்களிடமே இருக்கிறது.

ஆகவே நாட்டில் நடக்கும் எந்த விதமான நடவடிக்கைகளின் முடிவும் பார்ப்பன ஆதிக்கம் தளர்ந்து விடாமல் இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்ளப்படுகிறது.

இதற்கு ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களை அரவணைத்துக் கொள்ளும் வழியை மேற்கெள்வதா அல்லது மனு அநீதியை வெளிப்படையாகக் கையாள்வதா என்பது, சமயத்திற்கு ஏற்றபடி முடிவு செய்யப்படுகிறது. விதிதாச்சாரப் பங்கீட்டு முறை செயல்பட்டு, உயர்நிலைகளில் / அதிகாரம் செலுத்தும் வேலைகளில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள், தங்கள் மக்கள் தொகையின் விகிதாச்சாரப்படி அமர்ந்துவிட்டால், இது போன்ற முறையில்லா முடிவுகள் எடுப்பது முற்றிலும் தடுக்கப்பட்டு விடும்.

எந்த ஒரு சாதியினரும் முறையற்ற வழிகளில் தங்கள் சாதியினருக்கு ஆதரவாகவும் மற்ற சாதியினருக்கு எதிராகவும் செயல்பட முடியாமல் போய்விடும். ஏனெனில் தங்களுக்குச் சமநிலையில், சம வலிமையில் மற்ற சாதியினரும் அதிகாரத்தில் இருப்பார்கள்.

ஆகவே விகிதாச்சாரப் பங்கீடு முறையைச் செயல்படுத்துவது தான், இந்தியாவைப் பீடித்து உள்ள சாதி / வருணக் கெடுமைகளை ஒழிப்பதற்கான சரியான வழியாகும்.

ஆனால் இக்கருத்து பொதுக் கருத்தாக உருவாகி விடக் கூடாது என்ற எண்ணத்தில், பார்ப்பனர்கள் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களை அரவணைத்து அடிமைப்படுத்தும் கருத்துக்கும், மனு அநீதியை வெளிப்படையாக ஆட்சியில் அமர்த்தத் துடிக்கும் கருத்துக்கும் இடையிலான முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தவும், முன்னணியில் நிறுத்தி வைக்கவும் முயல்கின்றனர்.

ராணா அய்யூப் (Rana Ayyub) என்ற பெண் பத்திரிக்கை யாளர் எழுதிய, (மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்தில், குஜராத் மக்கள் மீது நடந்த தாக்குதல்களை விவரிக்கும்) குஜராத் கோப்புகள் (Gujarat Files) என்ற புத்தகம், தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது. அதன் வெளியீட்டு விழா 17.8.2016 அன்று சென்னையில் நடந்தது.

இதில் கலந்து கொண்டு பேசிய எழுத்தாளர் ஞாநி, வரும் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால் நாடு ஆழம் காண முடியாத பாதாள நரகத்தில் தள்ளப்பட்டுவிடும் என்று கூறினார்.

மேலும் இன்று நாட்டில் நடந்து கொண்டு இருக்கும் கொடுமைகள் அனைத்தும் மேலும் வலிமை பெற்று நிலைத்து விடும் என்றும் அவர் கூறினார்.

அதாவது மனு அநீதியை வெளிப்படையாக ஆட்சியில் அமர்த்தத் துடிக்கும் கருத்தியலுக்கு எதிராக அவர் குரல் கொடுத்து இருக்கிறார். ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களை அரவணைத்து அடிமைகளாக்கும் கருத்தியலுக்கு எதிராக அவரும் இவ்விழாவில் கலந்து கொண்ட மற்றவர்களும் எதுவும் பேசவில்லை.

சரி! உயர்சாதிக் கும்பலினரின் நோக்கம் எப்படியாயினும் இருந்து விட்டுப் போகட்டும். ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள்  தங்கள் விடுதலைக்கான கருத்தியலை வளர்த்து எடுக்க வேண்டும் அல்லவா? விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் 54வது பிறந்த நாள் விழா 17.8.2016 அன்று சென்னையில் கொண்டாடப்பட்டது.

ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் விழாவாகக் கருதப்படும் அவ்விழாவில் அவரும், அக்கட்சியின் செயலாளர் இரவிக் குமாரும், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் ஜி.இராமகிருஷ்ண னும், ம.தி.மு.க. தலைவர் வைக்கோவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஆர்.முத்தரசனும் கலந்து கொண்டனர்.

பா.ஜ.க. மத்திய ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து மத வெறியும், சாதி வெறியும் அதிகரித்து உள்ளன என்றும், அவர்கள் பிரித்து ஆளும் சூழ்ச்சியைக் கையாண்டு மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதாகவும் அவ்விழாவில் கலந்து கெண்டவர்கள் கூறினார்கள்.

பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டால் போதும் என்பது பேலவே இவர்களது எண்ணம் இருக்கிறதே ஒழிய, இந்திய நாட்டின் பிரச்சினைகள் அனைத்துக்கும் மூல காரணமான பார்ப்பன ஆதிக்கத்தைப் பற்றி யாரும் பேசவில்லை.

மனு அநீதியை வெளிப்படையாக ஆட்சியில் அமர்த்தத் துடிக்கும் கருத்தியலுக்கும், ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களை அரவணைத்து அடிமைப்படுத்தும் கருத்தி யலுக்கும் இடையே நடக்கும் போரில், அரவணைக்கப்பட்டால் அடிமைகளாக இருக்க ஆயத்தமே என்ற ரீதியில் தான் இவர்களுடைய அணுகுமுறை இருக்கிறது.

இது ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் இன்னும் தங்கள் விடு தலைக்கான விழிப்புணர்வை அடையவில்லை என்பதையே காட்டுகிறது. பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அகற்றுவது மட்டுமே போதாது.

விகிதாச்சாரப் பங்கீட்டு முறையை முழுமையாகச் செயல் படுத்துவது தான், இந்திய நாட்டைப் பீடித்து உள்ள வருணக் கொடுமைகள் ஒழிந்து ஒடுக்க்கப்பட்ட வகுப்பு மக்கள் விடுதலை அடையும் ஒரே வழி ஆகும்.