பெண்களின் பொருளாதார உரிமை என்பது இன்று இம் மண்ணில் பேசப்படும் பிரச்சனை மட்டுமல்ல; உலகளாவிய அளவில் நாடுகளின் தரவரிசைப் பட்டியலைத் தீர்மானிக்கும் ஒரு காரணியாகும். ஒரு நாடு எந்த அளவு முன்னேறிய நாடு என்பதைத் தீர்மானிப்பதில் அந்த நாட்டில் பெண்கள் பெற்றிருக்கும் பொரு ளாதார உரிமை முக்கியத்துவமளித்துப் பார்க்கப்படுகிறது. எனவே இந்தத் தலைப்பை பெண்களுக்கு மட்டுமானது என்று கருதத் தேவையில்லை. சரி, பெண்களின் பொருளாதார உரிமை அல்லது சுதந்திரம் என்றால் என்ன? ஒருவர் தனது வாழ்வில் பொருளாதாரச் சுதந்தரத்துடன் இருக்கிறாரா என்பதை அளக்கும் அளவுகோல்கள் யாவை?

எந்தவொரு மனிதர் தனது வாழ்க்கையில் தான் எங்கு வசிப்பது, எந்த வேலை பார்ப்பது, எங்கெல்லாம் செல்வது, சொந்தமாகத் தொழில் நடத்தலாமா அல்லது வேலைக்குச் செல்லலாமா, யார் யாருடன் ஒப்பந்தங்கள் அல்லது பரிவர்த்தனைகளில் ஈடுபடுவது, தான் ஈட்டிய பொருளை எவ்விதங்களில் சேமிப்பது என்பது பற்றியெல்லாம் சொந்தமாக முடிவெடுக்கக்கூடிய சமுதாய உரி மையுடன் இருக்கிறாரோ அவர் பொருளாதாரச் சுதந்தரத்துடன் இருக்கிறார் என்று கூறலாம். இவற்றிற்கான சமுதாய உரிமை என்பதே முக்கியம். தனக்கிருக்கும் பொருளாதாரச் சிக்கல்களில் ஒரு மனிதர் தன்னை பல்வேறு விதங்களில் கட்டுப்படுத்திக் கொள்ள நேர்வதை இங்கு நாம் விவாதிக்கவில்லை அல்லது கணக்கில் கொள்ளவில்லை.

பாலின சமத்துவத்தைப் பற்றிப் பேசும்போது பொருளாதார விடுதலை என்பதே முன்னணித் தேவையாகத் திகழ்கிறது. கல்வி உரிமையும், வேலைக்குப் போகும் உரிமையுமே பெண் உரிமை என்று புரிந்துகொண்டால் அதில் தவறொன்று மில்லை என்று எண்ணத்தக்க அளவுக்குப் பெண்களை அவர்களின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதில்லை. கல்வி பெறுதலுக்கும் பொருளாதார உரிமைகளைப் பெறுவதற்கும் ஆழமான தொடர் பிருப்பது உண்மைதான்.

பெண்களின் பொருளாதார உரிமைக்கான குரல்களை நமது சமுதாயம் எழுப்பத் தொடங்கி ஒரு நூற்றாண்டு காலம் முடியப் போகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் தந்தைபெரியார் அவர்கள் நடத்திய செங்கற்பட்டு மாநாட்டின் தீர்மானங்கள் இந்தத் திசையில் மிகவும் வீரியமிக்க குரலை முன் னெடுத்தன. பெண்களுக் கான சொத்துரிமை என்று ஒற்றைத் தீர்மானத்தில் அவை முடிந்து போகவில்லை. சமுதாய எதார்த்தத்தைக் கணக்கில் கொண்டு பல்வேறு வகையான கோரிக்கைகளை இந்தத் தளத்தில் அவை முன்வைத்தன. ஆசிரியர் பணிகளை முழுமையாகப் பெண்களுக்கு ஒதுக்கு என்று கோரிய அதேநேரத்தில் காவல்து றையில் பெண்களை அறிமுகப்படுத்து என்ற அதிரடி கோரிக்கையும் பெரியாரிடமிருந்து வந்தது.

காவல்துறையில் பெண்களை அறிமுகப் படுத்து என்கின்ற முழக்கம் புரட்சிகரமான தாக இருக்கலாம். ஆனால் அதனை எடுத்த வுடன் செயல்படுத்துவது மிகக்கடினம். அப்படியே செயற்படுத்தினாலும் ஒரு சில பெண்களே முன்வருவர். அதனால் ஒட்டுமொத்த பெண் சமுதாயம் பெறும் பலன் குறைவாகவே இருக்கக்கூடும் என்கின்ற அடிப்படையில் பெருவாரியான பெண்கள் பயன்பட ஆசிரியர் பணிகளுக்கு அவர்களை ஊக்குவிக்க வேண்டு மெனப் பெரியார் சிந்தித்தார்.

இந்தச் சமுதாயத் தின் தாயாக இருந்தவர் அவர். எனவேதான் வேறுவேறு சிந்தனைத் தளங்களிலிருந்து பிறக்கக்கூடிய கோரிக்கைகள் ஒரே முகாமி லிருந்து வருவது சாத்தியமாயிற்று. திராவிட முன்னேற்றக் கழகம் என்னதான் பொதுமக்க ளுக்கான சமரசங்களைச் செய்துகொண்ட போதிலும் தனது வழித்தடம் பெரியார் வகுத்ததுதான் என்பதில் இன்றுவரையிலும் கூட தளர்ச்சியின்றியே இருக்கிறது எனக் கூறலாம். அதனால்தான் இந்தியாவிலிலேயே முதன்மையாகப் பெண்களுக்குச் சொத் துரிமை அறிவித்ததிலிருந்து பெண் காவலர் களைப் பெருவாரியாக முதலில் நியமித்த மாநிலம் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் வேறு எந்த மாநிலத்திலுமில்லாத வகையில் 30 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்த மாநிலம் என்பதான நிலைகளைத் தனது ஆட்சியின் மூலமாகப் பெண்களுக்கு அளித்தது எனக்கூற லாம். சுயமரியாதைத் திருமணச் சட்டமே பெண்களுக்கான சட்டம்தான் என்றும் கூறலாம்.

இவ்வாறாகக் கடந்த காலத்தில் பெண் விடுதலைக்கான ஒரு பயணம் மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. இன்று சமுதாயத்தின் ஒட்டு மொத்த சராசரியைக் கணக்கிலெடுக்கும் போது பெண்கள் இன்னும்கூட ஆண்களுக்குச் சரிவிகித்தில் கல்வியையோ அல்லது வேலை வாய்ப்பையோ பெற்றிருக்கிறார்கள் என்று கூறமுடியாதுதான். ஆனால் நகர்ப் பகுதிகளில் பெண் குழந்தைகளைப் படிக்கவைக்காத பெற்றோர் இன்று இல்லை. அதேபோல் வேலைக்குப் போகும் பெண்களின் விகிதமும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருப் பதை இல்லையெனக் கூறிவிடமுடியாது. சரிக்குசரியாக இன்னும் வந்துவிடவில்லை என்ற போதிலும் அடைந்திருக்கும் வளர்ச்சியைக் கணக்கில் கொண்டு பல விசயங்களைப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

முதலாவதாக நாம் கவனிக்க வேண்டிய அம்சம், பெண் கல்வி வளர்ந்த அளவிற்கு வேலைக்குப் போகும் பெண்கள் எண்ணிக்கை வளரவில்லை என்பதுதான். காரணம் படித்த பெண்கள் எல்லோரும் வேலைக்கு வரவில்லை. இந்த இடத்தில் பெண் கல்வி குறித்து நடந்த விவாதங்கள் நம் நினைவுக்கு வருகின்றன. பெண் கல்வி வேண்டும் என்கின்ற குரல் பெரியார் முகாமிலிருந்தும் வந்தது. காந்தி முகாமிலிருந்தும் வந்தது. தன்னை விடுதலை செய்து கொள்ள பெண்ணுக்குக் கல்வி வேண்டு மெனக் கேட்டார் பெரியார். தனது மகவுக்கு அறிவு புகட்ட அறிவாளியான கல்வி கற்ற தாயார் ஒரு குடும்பத்துக்கு வேண்டுமென கேட்டார் காந்தியார். காந்தியின் குரல் பெரும் பான்மையான பொதுப் புத்திக்குச் சாதகமான தாக இருந்தது; இன்னும் இருக்கிறது. அத னால்தான் கல்வி பெற்ற பெண் வேலைக்குப் போவதிலிருந்து பல்வேறு காரணிகளால் இன் னும்கூட தடைசெய்யப்படுகிறாள்.

இன்று கல்வி கற்ற பெண் இங்கு குடும்பத்திற்கு ஒரு மதிப்புகூட்டும் பண்டமாகப் பார்க்கப்படு கிறாள். இன்று படிக்காத பெண்ணுக்குக் கல்யாணம் செய்வது கடினம்தான். பெண் என்பவள் கல்யாணச் சந்தைக்கான பண்டம் தான் இன்றுவரையில். அந்தச் சந்தை இன்று படித்த பெண்ணை மட்டுமே கேட்கிறது. எனவே பெண்ணைப் படிக்க வைப்பது இன்று எவரொருவராலும் புறக்கணிக்க முடியாத நிபந்தனையாகிவிட்டது. ஆனால் பொருளாதார  வாய்ப்பு ஒரு பெண்ணுக்கு வேலைக்குப் போவதன் மூலம் நேரிடையாகக் கிடைக்கிறது. இது இந்தச் சமுதாயத்திற்கு உவப்பானதில்லை. பணத்தின் மீதுள்ள தேவை மிகுந்துபோகும்போது மட்டுமே பெண் வேலைக்கு அனுப்பப்படுகிறாள். அந்தத் தேவை இன்றியமையாததாகவும் இருக்கலாம். பணத்தின் மீதான மோகத்திலுமிருக்கலாம். பெண் கல்வியை 100 விழுக்காடு ஏற்றுக்கொண்டிருக்கும் நகர்ப்புறம் வேலைக்குச் சென்று பொருளீட்டுவது ஒரு பெண்ணின் உரிமை என்பதை அதே விகிதத்தில் இன்னும் ஏற்றுக்கொள்ள வில்லை.

பணம் என்பது இங்கு அதிகாரம். பெண்ணை அதிகாரத்தின் வாசலுக்கு விடத்த hன் இந்தச் சமுதாயம் பெரும் தயக்கம் காட்டுகிறது. பெண்ணைப் பாதுகாப்பாய் வைத்துக்கொள்வதாய் பாசாங்கு செய்கிறது. வசதி படைத்த பெற்றோர் பெண்ணை அவளுக்குத் திருமணம் ஆகும் வரை மேலும் மேலும் படிக்க வைக்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவளை வேலைக்கு அனுப்பும் முடிவை அவளது புகுந்தவீடு எடுத்துக்கொள்ளட்டும் என்றே ஒத்திவைக்கிறார்கள். இதற்கு பாசம் என்று பெயராம். அதனால் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு இது சுகமாக இருக்கிறது. பி.ஈ., எம்.பி.ஏ. என்று பட்டங்களை வாங்கி கல்யாணப் பத்திரிகையில் போட்டதோடு மறந்துவிட்டு உல்லாசமாக ஷாப்பிங் மால்களை வலம்வந்து கொண்டிருக்கும் இத்தகைய பெண்கள் ஏராளம். பெண்களுக்கு இங்கு என்ன உரிமை இல்லை என்று கேட்போர் பெரும்பாலும் இவர்கள்தான்.

மேலும் சமுதாயப்படுத்தப்படாமல் தனி மனித சுமைகளாகவே இன்றும் நீடிக்கும் வீட்டுவேலைகள், மகப்பேறு, குழந்தை வளர்ப்பு இவையெல்லாம் இன்றும்கூட பெண்களின் வேலைவாய்ப்புக்கு மட்டுமே தடைகளாக நீடிக்கின்றன. அமெரிக்காவிலிருக்கும் கம்பெ னிக்கு இங்கிருந்து வேலை பார்க்க முடியும் என்கின்ற தொழில்நுட்ப சாதனையைத் தொட்டு விட்ட நமக்கு எல்லோரும் ஒரு பொது இடத்தில் உணவருந்திக் கொள்ளலாம் என்கின்ற மனநிலை இன்னும் ஏற்படாததைப் பார்க்கும் போது மனிதனை ஒரு முட்டாள் விலங்கு என்றுதான் கருதவேண்டியிருக்கிறது. எங்கம்மா கையால, எம் பொண்டாட்டிகையால சமைச்சு... என்கின்ற பிதற்றல் பெண்ணின் பொருளாதாரச் சுதந்தரத்துக்கிருக்கும் பெரும் கேடுகளில் ஒன்றாகும்.

அடுத்து பெண்கள் வீட்டுவேலைக் குரியவர்கள் என்கின்ற நடைமுறையின் நீட்சி யாக வேலைகளையும் பெண்கள் பார்க்கக் கூடிய வேலைகள், பெண்களுக்கு உரியதல்லாத வேலைகள் என்று பிரித்துப்பார்க்கும் மனநிலை யும் இன்றும் தொடர்கிறது. அண்மையில், அவசரம், மிக அவசரம் என்றொரு திரைப் படம் வந்தது. நல்ல திரைப்படம். பேச வேண்டிய ஒரு பிரச்சனையைப் பேசிய திரைப்படம். காவல் துறையில் கீழ்நிலையில் பணிபுரியும் பெண்காவலர் ஒருவர் தனது பணியில் சாலையில் நீண்டநேரம் நிற்க வைக்கப்படும்போது எவ்வாறு சிறுநீர் கழிக்க இயலாமல் துன்பத்துக்குள்ளாகிறார் என்பதே கதை. ஆனால் இதில் அந்தப் பெண் எவ்வாறு தனது பணிசார்ந்தும்சரி, சமுதாயம் சார்ந்தும் சரி அதிகாரமற்றவராக இருக்கிறார்; உரிமையற்றவராக இருக்கிறார். கேள்வி கேட்கும் வாய்ப்பில்லாதவராக நிற்கவைக்கப்படுகிறார் என்கின்ற கேள்விகள் எழுவதற்குப் பதிலாக இதற்குதான் பெண்கள் இந்தப் பணிக்கெல் லாம் வரக்கூடாது என்கின்ற சிந்தனையைத் தூண்டுவதாகவே நடப்பில் முடிந்து போகிறது.  இதே சமுதாயத்தில்தான் காய்கறிகளை, பழங்களைத் தனது தலையில் சுமந்து விற்றுக்கொண்டு செல்லும் பெண்கள் தெருவோரம் ஒதுங்கி தலைச்சுமையைக்கூட அகற்றாமல் கால்களை அகட்டி நின்றுகொண்டு சாதாரணமாகச் சிறுநீர் கழித்துவிட்டு கடந்துபோகிறார்கள். இந்த முரணுக்குப்பின் நிற்கும் சமுதாயக் காரணிகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இவர் கள் பெண்களுக்காகப் பரிதாப்பபடுகிறார்கள்.

ஒரு மொபைல் டாய்லெட் ஏற்பாடு செய்யவேண்டும் என்று அந்த நிர்வாகம் நினைக்காததற்கு அதன் ஆண் மனம்தான் காரணம். எங்குவேண்டுமானாலும் சிறுநீர் கழிக்கும் உரிமையுடன் ஒரு பாலினமும் அந்த உரிமையில்லாத பாலினமும் ஒன்றின்கீழ் ஒன்று வைக்கப்படுவதால் வரும் பிரச்சனை. சரி, இனி வேலைக்குப் போகும் பெண்களிடம் வருவோம். ஊதியமற்ற உழைப்பை தனது பிறவிக்கடன் என்று ஏற்றுக்கொள்ள வைக்கப் பட்டிருப்பவள் பெண். இதில் வீட்டுவேலை கள் மட்டுமல்ல ஒரு காலத்தில் தோட்டம் வயல் போன்ற வெளியிடங்களில் செலுத்தப்படும் அவளது உழைப்புக்கான ஊதியத்தையும் அவள் வீட்டு ஆண்கள்தான் அந்த எஜமானர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள உரிமை பெற்றிருந்தனர்.

தொழிலாளி மதிப்பு பெண் ணுக்கு மறுக்கப்பட்ட வரலாறு இருக்கிறது. வீடுகளில் நடத்தப்பட்ட பல குடிசைத் தொழில்கள் பட்டறைகளாக, தொழிற்கூடங் களாக உருவெடுத்த போதெல்லாம் அதில் ஆண் மட்டுமே எஜமானன் என்கின்ற இடத்தை மட்டுமல்ல, தொழிலாளி என்கின்ற இடத்தையும் பெறமுடிந்திருக்கிறது. கல்வி கற்று பெண் பெற்ற வேலைதான் எந்தவகையிலும் அவள் வீட்டு ஆண்களின் தொடர்பற்ற ஒரு வெளியை அவளுக்கு முதன்முறையாகத் தந்தது. ஆனால் இவ்வாறு அவள் பெற்ற பொருளாதார வாய்ப்புகள் அனைத்தும் உடனடி யாக அவளுக்குப் பொருளாதார உரிமை களையும் பொருளாதார அதிகாரத்தையும் தந்துவிட்டனவா என்கின்ற கேள்வி ஆழமான ஆய்வுக்குரியது.

பெண்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் இன்று வேலைக்குப் போகிறார்கள். கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளிலும் கால்பதிக்கத் தொடங்கிவிட்டார்கள். பணிமூப்பு அடிப் படையிலேயேகூட பெண் அதிகாரிகள் இன்று வந்துவிட்டதை நாம் பார்க்கத் தொடங்கி விட்டோம். ஆனாலும் என்ன? இவ்வாறு அவள் ஈட்டும் பொருளின்மீது அவளது உண் மையான உரிமை எந்த அளவிலிருக்கிறது? அவளது வருமானத்தின்மீது அவளுக்கு முழு மையான அதிகாரம் இருக்கிறதா? பெரும் பான்மையான பெண்களுக்கு அது கணவன் வீட்டார் கையில் கொடுக்கப்பட வேண்டிய தொகையாகவே இன்னும் இருக்கிறது. அதைத் தாண்டி வசதி இருக்கிற பல குடும்பங்களில் பெண்கள் அந்த வருமானத்தை தானே வைத்து செலவு செய்தால்கூட அவள் விருப்பப்பட்ட சேலையை வாங்கும்போது, விருப்பப்பட்ட கோவிலுக்கோ, சினிமாவுக்கோ போகும்போது அனுமதிக்கும் குடும்பம் அவள் தன்பெயரில் தனியாக நிலம் வாங்கினாலோ, வீடு வாங்கி னாலோ அனுமதிக்குமா, அமைதி காக்குமா? அப்படியில்லையெனில் ஏன் பெண்கள் தங் களுக்கென சொத்து வாங்குவதில்லை? அசையாச் சொத்துக்களில் 2 விழுக்காடுகூட பெண்களின் பெயரில் இல்லையென்கிறார்கள். உண்மை யில் பெண்கள் பெயரில் இருக்கும் சொத்து கள்கூட ஆண்களால் வாங்கப்படுவதுதானே தவிர, அது அவர்களின் உண்மையான சொத்து கள் அல்ல. அந்தச் சொத்துகளின்மீது எந்தப் பரிவர்த்தனை உரிமையும் கொண்டாட அவளை இச்சமுதாயம் அனுமதிப்பதில்லை.

இதனைத்தாண்டி தொழிலுரிமை என்று எடுத்துக்கொண்டால் பெண் தொழில் முனை வோராவது அவ்வளவு எளிதானதல்ல. உண் மையில் பெருந்தனக்காரர்கள் வீட்டிலிருந்து வளர்கின்ற ஒரு பெண்கூட பெரிய கார்ப் பரேட் நிறுவனங்களில் அதிகாரிகளாகப் போவதைத்தான்தேர்ந்தெடுக்கிறார்கள். அதாவது ஆண்களால் கட்டமைக்கப்பட்ட ஆண்களால் நிர்வகிக்கப்படுகிற ஓர் உலகத்தில் தங்களைப் பொருத்திக் கொள்கிறார்கள். அதனால்தான் அவர்கள் கையில் தரப்படும் அதிகாரம் மீண்டும் ஆண்களின் அதிகாரத்தையே அதிகம் தரவல்லதாகிறது. பெண்களுக் கான புதிய உலகம் அவர்களால் கட்டப் படவில்லை என்று சொல்ல முடியாவிட் டாலும் அதன் விழுக்காடு மிக மிகக் குறைவு என்பதே உண்மை.

ஆண்களுடன் போராடி ஒரு சின்னதொழி லைத் தொடங்கும் ஒரு பெண் சமுதாயத்தில் பெண்களின் அதிகாரத்தை அழுத்தமாக எழுதுகிறாள். அண்மையில் கம்பெனிகள் சட்டம் 2013 அதற்கு முந்தைய கம்பெனிகள் சட்டம் 1956-ஐ மாற்றிவிட்டு கொண்டுவரப்பட்டது.  இதன்படி பங்கு பரிவர்த்தனையில் ஈடுபடக்கூடிய கம்பெனி கள் மேலும் 100 கோடி முதலீடு செய்துள்ள பப்ளிக் லிமிடெட் கம்பெனிகள் கண்டிப் பாகத் தங்களது இயக்குனர்களில் ஒருவராக ஒரு பெண் இயக்குனரை நியமிக்க வேண்டு மென்கின்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆண்மய மாகவே இருப்பதை இது சுட்டிக்காட்டியது. உண்மையில் இந்தியாவில் பெரும்பாலான கம்பெனிகள் குடும்ப நிறுவனங்களேயாகும். அதிலும் சிறு குறு நிறுவனங்கள், குடும்ப நிறுவனங்கள் மட்டுமேயெனக் கூறலாம். அதில் இயக்குனர் குழுமத்தில் பெண்களும் இடம்பெற்றிருப்பார்கள்.

ஆனால் அது அந்தப் பெண்களுக்குத் தெரியுமா என்பது தான் கேட்கப்பட வேண்டிய கேள்வியாகும். பலநேரங்களில் பலபெண் இயக்குனர்களின் பெயர்களை இணைக்கும்போது அவர்களுக் கான ஆவணங்கள் கேட்கப்படும் போது அவர்களுக்குப் பான்கார்டு இருக்கும். ஆதார் கார்டு இருக்கும். ஏன் வங்கிக்கணக்குகூட இருக்கும். ஆனால் அவர்கள் பெயரில் ஒரு யுட்டிலிட்டி பில் இருக்காது. யுட்டிலிட்டி பில் என்றால் நீங்கள் உங்களுக்கென கொடுக்கும் முகவரியில் உங்கள் பெயரில் மின்இணைப்போ, வரிகட்டின இரசீதோ, தொலைபேசிக் கட்டண இரசீதோ ஏன் பெண்கள் மட்டுமே பயன் படுத்தும் கா° இரசீதோகூட எடுத்துக் கொள் ளப்படும். ஆனால் இது எதுவுமே 90 விழுக்காடு பெண்கள் பெயரில் இல்லை.

பொருளாதார உலகில் ஒரு ஆணுக்கு முழுவதும் நம்பிக்கையுள்ள இன்னொரு ஆண் இல்லாத இடத்தில்தான் அந்த ஆணின் உடமையான பெண் நிரப்பப்படுகிறாள். தனது வங்கிக்கணக் கில் போடமுடியாத பணவருவாய் வரும் போதுதான் பெண்களுக்கான வங்கிக்கணக்கு கள் ஆண்களால் திறக்கப்படுகின்றன. ஆனால் இவற்றையெல்லாம் தனக்காகத் தானாகவே தீர்மானிக்கும் இடம் பெண்ணுக்கு இன்னும் வெகுதூரத்திலிருக்கிறது. இந்த தூரத்தை புரிந்துகொள்ள வெறும் பொருளாதார அளவு கோல்கள் போதாது. பெரியார் கூறினார் சமஉரிமை இல்லாதவிடத்து நீங்கள் சமஉடைமை யை உருவாக்கினால் அந்த உடைமை, சமுதாய உரிமை யாரிடமிருக்கிறதோ, அவர்களிடம் தானாக சென்று சேர்ந்துவிடும். அதுதான் பெண்கள் விசயத்திலும் நடக்கிறது. சமுதாய உரிமையும் தலைமையும் ஆண்களிடமே இருக்கும் நிலையில் பெண்களுக்குக் கிட்டும் பொருளாதார வாய்ப்புகள் ஆணின் கட்டுப் பாட்டுக்குள்தான் சென்று சேர்கின்றன.

சமுதாய அறிவும், உரிமை உணர்வும் பெறாத நிலையில் பெண்கள் தங்களுக்கு வசப்படும் பொருளாதார வாய்ப்புகளைத் தாங்க ளாகவே முன்வந்து ஆண்கள்வசம் அளித்து விடுகின்றனர். இன்னொருபுறம் அவ்வாறு அளிக்காமல் தங்கள் இச்சைப்படி அதனைக் கையாளத் துணிகின்ற பெண்கள் இந்த ஆணாதிக்க சமுதாயத்தின் திட்டப்படி தங்களை மேலும் மேலும் காட்சிப்பொருளாக்கிக் கொள்கின்ற விதத்திலேயே செயல்படுகின்றனர். தன்னை மேலும் மேலும் கவர்ச்சிகர மான பண்டமாக்கிக் கொள்ளவே பெண் தனது சொற்ப பொருளாதாரத்தைப் பயன் படுத்து கிறாள் என்பது நடைமுறை உண்மையாக இருக்கிறது.

பெண்ணின் வருமானம் மட்டுமல்ல பெண் செலவு செய்யும் முறைகளும் மிகவும் முக்கியம். இதற்கு என்ன காரணம்? பெண்களை இவ்விதமான பண்டங்களாகவே மீண்டும் மீண்டும் மறுஉருவாக்கம் செய்து கொண்டிருக்கும் கோவில்கள், கடவுள் கதைகள், பண்டிகைகள். இவற்றி லிருந்தும் இவற்றை எதிர்த்தும் பெண் அடைகின்ற விடுதலைதான் அவளுக்குப் பொருளா தாரச் சுதந்தரத்தை உறுதிசெய்துகொள்ளும் ஆற்றலைக் கொடுக்கும். ஆனால் இன்னும்கூட நமது நாட்டில் பெண் விடுதலை இயக்கங்கள் இந்தத் திசையில் பயணிக்கவில்லை என்று தான் கூறவேண்டும். இதனைத்தாண்டி பெண் களின் பொருளாதார வாய்ப்புகள் வளரவளர அவர்களின் அரசியல் பங்கெடுப்பு அதிகரிக்க வேண்டும். ஆனால் இந்த விகிதம் இன்னும் மோசமான படுபாதாளத்திலிருக்கிறது. பெண்கள் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கிறார்கள் என்பது உண்மையாக இருக்கலாம் பெண் களுக்கான கோரிக்கைகள் தேர்தலைத் தீர் மானிக்கும் சக்தியாக இருக்கின்றனவா என்பது எண்ணத்தக்கது. இன்று உள்ளாட்சித் தேர்தலில் நிறுத்துவதற்கு வேட்பாளர்கள் இல்லை எந்தக் கட்சியிலும். பொதுவுடைமை இயக்கங்கள் திராவிட இயக்கங்கள் உட்பட என்பது வேத னைக்குரிய செய்தி.

பெண் உரிமை, பெண்ணின் பொருளா தாரச் சுதந்தரம் என்பது இன்று வெறும் உள்நாட்டு நிகழ்வல்ல. சர்வதேச அழுத்தங்கள் காரணமாகவும் பல்வேறு முற்போக்கான சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன. அரசை நிர்வகிக்கும் கட்சிகளின் கொள்கைகள் எதுவாக இருந்தபோதிலும் இந்த சர்வதேச அழுத்தங்களுக்குக் கட்டுப்பட வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்குமிருக்கிறது. ஆனால் இவையெல்லாம் பாராட்டத்தக்கவையாக இருந்தபோதிலும் உள்நாட்டில் நடக்கும் அரசியல் பெண்ணிய அரசியலை உள்வாங்கி நடத்தப்படும்போது மட்டுமே பெண்களின் சுதந்திரம் முழுமையாக மலரும். முக்கியமாகப் பெண்கள் தங்களுக்கான பொருளாதார வாய்ப்புகளைப் பெருக்கிக்கொண்டு புதிய கலாச்சாரத்தைப் படைக்க வேண்டும். இன்று அவர்களே இந்த நாட்டின் கலாச்சாரச் சின்னமாக வைக்கப் பட்டிருக்கிறார்கள். அதிலிருந்து விடுபட்டுத் தங்களுக்கான மானுடத்தை அவர்கள் படைக்க முன்வருவதே உண்மையான பொருளாதார விடுதலையாகும்.