ஆரியப் பார்ப்பனர் கி.மு.1500-1000 காலத்தில் இந்தியாவின் வடமேற்கு வாயிலாகச் சிறுசிறு கூட்ட மாக நுழைந்தனர். இந்தியத் துணைக் கண்டத்தின் திராவிடத் தொல்குடியினர் வேதகால ஆரியர்களிட மிருந்து தோற்றத்தால், பழக்கவழக்கங்களால், பண் பாட்டால், சமய நம்பிக்கைகளால், மொழியால், வாழ் வியல் சடங்குகளால் முற்றிலும் வேறுபட்டு இருந்தனர். எனவே வேதகால ஆரியர்கள் இந்நாட்டின் திராவிடத் தொல்குடியினரை ‘தாசா’ (அடிமை)-‘தஸ்யூ’ என்ற சொற்களால் தாழ்வாகக் குறிப்பிட்டனர்.

ஆரியப் பார்ப்பனர் தமக்கே உரிய வஞ்சக வழிமுறைகள் மூலம் தங்கள் மேலாதிக்கத்தை நிறுவிட முயன்றனர். ஆயினும் ஆரியர் ஆதிக்கத்தை இந்நாட்டின் தொல் குடித் தலைவர்களும், அரசர்களும் தொடர்ந்து எதிர்த்தனர். இதுவே ஆரியர் - திராவிடர் போராட்டமாக இன்று வரை பல்வேறு தளங் களில் பல வடிவங்களில் தொடர்கிறது.

ஆரியப் பார்ப்பனர் வருணாசிரம - சாதியமைப்பு முறையைத் திணிக்க முயன்ற போதிலும் இந்தியா வின் பல பகுதிகளில் சூத்திரர்கள் அரசர்களாக ஆட்சி புரிந்தனர் என்று மேதை அம்பேத்கர் குறிப்பிடுகிறார். இந்நிலை கி.பி.2ஆம், 3ஆம் நூற்றாண்டுகளில் மேலோங்கி யிருந்தது. இக்காலக்கட்டத்தை பார்ப்பனப் புராணங்கள் “கலியுகம்”-“கலிகாலம்” என்று குறிப்பிடுகின்றன. வேதங் களின் உயர்வும் பார்ப்பனர்களின் மேன்மையும் மறுக்கப்பட்டது; எதிர்க்கப்பட்டது.

இக்காலக்கட்டத்தில் பார்ப்பனர்களைப் ‘பூதேவர்களாக’ மதித்துப் போற்றாத -மக்களுக்கு நல்லாட்சி வழங்கிய அரசர்களை ‘விஷ்ணு’ அவதாரம் எடுத்துவந்து அழித்தார் என்கிற கதைகளைப் புனைந்தனர். அதாவது ஆரியப் பார்ப்பனர் தங்கள் வஞ்சகச் சூழ்ச்சியால் சூத்திர அரசர்களை வீழ்த்தியதைப் புராணப் புனை கதைகளாக எழுதினர். தங்களுடைய வஞ்சகத்தை மூடி மறைக்க கடவுளே அவதாரம் எடுத்து வந்து சூத்திரர்களான அரசர்களை-அரக்கன், இராட்சதன் என்ற பெயர்களால் இழிவுபடுத்தி அழித்ததாகப் புனிதப் போர்வையால் மூடி மறைத்தனர். பாகவதம் எனும் நூல் பார்ப்பனர்களின் இத்தகைய கதைகளைக் கொண்ட தாகும்.

இரணியனை, மகாவிஷ்ணு நரசிங்க அவதாரம் எடுத்துக் கொன்றான். ஏனெனில் இரணியன் கடவுளை மறுத்தான்; பார்ப்பனர்களை எதிர்த்தான். புராணக் கதையின்படி, பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலுக்குள் ஒளிந்து கொண்ட இரண்யாட்சதனை மகா விஷ்ணு வராக (பன்றி) அவதாரம் எடுத்துக் கொன்றார். திருமாலின் (மகாவிஷ்ணு) ஒன்பது அவதாரங்களும் திராவிடர்களான - சூத்திரர்களான - பார்ப்பனர்களை எதிர்த்த மன்னர்களைக் கொன்ற கதைகளேயாகும்.

அக்டோபர் 29 அன்று இந்தியா முழுவதும் தீப நாள் கொண்டாடப்பட உள்ளது. தேவர்களுக்குத் தொல்லை கொடுத்துவந்த நரகாசுரனை விஷ்ணு அவதாரமெடுத்துக் கொன்றார். இந்த நரகாசுரன் யார்? மகா விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்த இரண் யாட்சதனிடமிருந்து பூமியை மீட்டுவந்த போது, இப்பன்றி பூமாதேவியின்மீது காம முற்றுப் புணர்ந்ததால் பிறந்த பிள்ளைதான் நரகாசுரன். இந்த நரகாசுரனை கிருஷ்ண அவதாரம் கொன்ற கதைதான் தீபாவளி.

பார்ப்பனர்கள் தங்கள் மேலாதிக்கத்தை நிலை நாட்டும் புராணக் கதைகளைப் பண்டி கைகளாக்கி, திராவிட மக்களைக் கொண்டாட வைத்து, அவர்களை மடையர்களாக வைத் திருப்பதில் வெற்றி பெற்றுவிட்டனர். அறிவியலும் ஆராய்ச்சியும் வளர்ந்திருப்பதாகக் கூறப்படும் இந்நாளிலும் ஆபாசங்கள் நிறைந்த அவதாரக் கதைகள் - “தீய சக்திகளை வெற்றி கொண்ட நாள்” என்று பொன்முலாம் பூசப் பட்டுக் கொண்டாடப்படுகின்றன. “தீமைகள் ஒழிந்து இனி நல்லவை நடந்திட வாழ்த்துகள்” என்று ஆன்மிகத் தலைவர்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை தீபாவளி போன்ற இந்துப் பண்டிகைகளின்போது வாழ்த்துக் கூறுகின்றனர்.

விஷ்ணு மனித உருவில் எடுத்த முதல் அவதாரம் வாமன அவதாரம் ஆகும். வாமனன் என்பதற்குக் “குள்ளப் பார்ப்பான்” என்று பொருள்.

தமிழ்நாட்டில் தமிழர் திருநாளாம் பொங்கல் நாளைப் பார்ப்பனர் ‘சங்கராந்தி’ என்ற பெயரால் எவ்வளவு தான் இந்துமதச் சாயம் பூசிட முயன்றாலும், அதை ஒரு இந்து மதப் பண்டிகையாக ஆக்க முடியவில்லை. தமிழ்மொழி சார்ந்த - இனம் சார்ந்த விழாவாகவே பொங்கல் திருநாள் மக்களால் கொண்டாடப்படுகிறது.

அதேபோல் கேரளத்தில் ஓணம் பண்டிகை, வாமன அவதாரத்தை வணங்கும் நாளாகக் கொண்டாடப்படுவதில்லை. நல்லாட்சி செய்த-அசுர குலத்தைச் சேர்ந்த தங்கள் மாமன்னன் மகா பலியின் நினைவைப் போற்றுகின்ற நன்னாளா கவே கொண்டாடுகிறார்கள். மலையாள மொழி பேசும் மக்கள் இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் ஓணம் திருநாள் விழாவுக்காகத் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வந்து குடும்பத்தினருடனும். உறவினருடனும், நண்பர் களுடனும் கூடி மகிழ்ந்து இவ்விழாவைக் கொண் டாடுகின்றனர். இது பாராட்டுக்குரியது.

கேரளத்தில் முசுலீம்கள், கிறித்துவர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்றனர். இவர்களும் ஓணம் திருநாளை தங்கள் பெருமைமிகு விழாவாகக் கொண் டாடுகின்றனர். தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டின் ஆளுநராக கேரளத்தைச் சேர்ந்த இசுலாமியரான பாத்திமா பீவி இருந்தார். ஆளுநர் மாளிகையில் ஓணம் விழாவைக் கொண்டாடினார். அவருடைய அழைப்பை ஏற்று அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் மு. கருணாநிதி அவ்விழாவில் கலந்து கொண்டார்.

மக்களின் நன்மதிப்பைப் பெற்று நல்லாட்சி செய்து வந்த மாமன்னன் மகாபலியை, விஷ்ணு, வாமன அவதாரம் எடுத்து மூன்று அடி நிலம் கேட்டு, மகாபலி ஒப்பினான். விஷ்ணு ஒரு அடியை நிலத்திலும், இன்னொரு அடியை விண்ணிலும் வைத்து மூன்றாவது அடியை மாவலியின் தலைமீது வைத்து நிலத்துக்குள் புதைந்து போகச் செய்தது ஏன்? மாவலியின் புகழும் பெருமையும் ஓங்கி வளர்வதைக் கண்டு பொறாமை கொண்ட தேவர்கள் விஷ்ணு மூலம் வஞ்சகமாக மகாபலி மன்னனைக் கொன்றனர்.

சாகும்போதும் மக்களை மறக்காத மகாபலி மன்னன், மண்ணுக்கும் விண்ணுக்கும் இடையில் பேருருவாய் நின்ற மகாவிஷ்ணு விடம் ஒவ்வொரு ஆண்டும் ஒருநாள் என் மக்களைப் பார்க்க வரவேண்டும் என்று வரம் கேட்டாராம். மகா விஷ்ணுவும் அப்படியே வரம் தந்தாராம். ஆண்டு தோறும் மகாபலி மன்னன் மக்களைக் காணவரும் நாளையே கேரள மக்கள் ஓணம் திருநாளாகக் கொண் டாடுகின்றனர்.

கேரளத்தையொட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத் தைச் சேர்ந்தவரும், நடுவண் அரசின் அமைச்சராகவும் இருக்கின்ற பொன். இராதாகிருஷ்ணன் ஓணம் பண்டி கைக்கு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “மகாபலி சக்கரவர்த்தி, ஓணம் பண்டிகை நாளில் தன் மக்கள் மத்தியில் எழுந்தருளும் புனிதத் திருநாளாகும். மன்னன் எவ்வழியோ, மக்களும் அவ்வழியில் ஒருவருக்கொருவர் இணக்கமான துணையாக இணைந்து வாழும் ஓணத் திருவிழா அமைவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நாளில் மகாபலி மன்னனை மனதில் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ அனைவரையும் வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மகாபலி மன்னனை மகிழ்ச்சியுடன் மக்கள் வரவேற்கும் விழாதான் ஓணம் திருநாள் என்று பொன். இராதாகிருஷ்ணன் சொல்கிறார். ஆனால் அவர் சார்ந்துள்ள பாரதிய சனதா கட்சியின் தலை வர் அமித் ஷாவோ ஓணம் பண்டிகை என்று குறிப்பிடாமல், “வாமன ஜெயந்திக்குக் கேரள மக்களுக்கு என் வாழ்த்துகள்” என்று தன் இணைய தளத்தில் சுட்டுரையில் தெரிவித்தார். அதற்கு முன்பாக, கேரள ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஓணம் பண்டிகை வாமன ஜெயந்தியாகும் என்று அறிவித்திருந்தது. இது கண்டனத்துக்கு உரியது.

அசுரர்கள் - சூத்திரர்கள் உயர்நிலை அடைவதை; பார்ப்பனர்கள் எப்போதும் அனுமதிப்பதில்லை என் பதைப் புராணக் கதைகள் மட்டுமின்றி, இரண்டாயிர மாண்டுக் கால வரலாறு மட்டுமின்றி, இன்றைய மேல் சாதி ஆதிக்கவாதிகளின் செயல்பாடுகளும் காட்டுகின்றன என்பதற்காக சான்றுதான் ஓணம் திருநாளை ‘வாமன ஜெயந்தி’யாகக் கொண்டாட வேண்டும் என்கிற அமித் ஷாவின் கூற்று.

ஓணம் திருநாளைக் காவிமயமாக்கி, வாக்குவங்கி யாக இந்துக்களை அணிதிரட்டுவதும், இசுலாமிய - கிறித்துவ மதச்சிறுபான்மையினருடன் மோதவிடுவதும் தான் அமித்ஷாவின் நஞ்சான நோக்கமாகும். கேரளத் தின் முதலமைச்சர் பினராயி விசயனும், எதிர்க்கட்சித் தலைவரான ரமேஷ் சென்னிதலாவும், மற்றும் பல் துறை சார்ந்த தலைவர்களும் அறிஞர்களும் அமித்ஷா வின் வாமன ஜெயந்தி முழக்கத்தைக் கண்டித்துள்ளனர். மக்களை ஒன்றுபடுத்தும் விழாவாக விளங்கும் ஓணத்தை, மக்களைப் பிளவுபடுத்துவதற்கான ஆயுதமாகப் பயன் படுத்த முனைவது பார்ப்பனச் சூழ்ச்சியே ஆகும்.

நவீன இந்தியாவில் பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளை - ஆதிக்கத்தை அம்பலப்படுத்தவும், சூத்திரர்களை - ஆதி சூத்திரர்களை (தாழ்த்தப்பட்ட வகுப்பினர்) பார்ப்பன அடிமைத்தனத்திலிருந்து மீட்கவும் மராட்டியத்தில் மக்கள் திரள் இயக்கத்தைக் கட்டியமைத்து அரும் பணியாற்றியவர் சோதிராவ் புலே (1827-1890) ஆவர். புலே தன்னுடைய எழுத்துகளில் மாபலிதான் ஒடுக் கப்பட்ட வகுப்பினருக்கான மன்னன் என்று போற்று கிறார். மராட்டியத்திலும் பலிராஜனின் வருகைக்காக - மீண்டும் பலிராஜன் ஆட்சி அமைய வேண்டி மக்கள் விழாக் கொண்டாடுவதாக அவர் எழுதியுள்ள ‘அடிமைத் தனம்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்நூலில் வாமனன் மண்ணுக்கும் விண்ணுக்கும் இடையில் பேருருவாக வடிவெடுத் தான் என்பதைக் கேள்விக்குள்ளாக்குகிறார் புலே. “அந்தப்பூத உருவம் தன் இரு அடியால் முழு பூமி யையும் வானத்தையும் நிரவி நின்ற போது அதன் மூலம் அடியில் எல்லா ஊர்களும் அடியோடு நசுங்கி இருக்காதா? அப்படியானால் பலிராஜன் மட்டும் எப்படி நசுங்காமல் தப்பித்தார்? பலிராஜனை மட்டும் தூக்கி பூதம் தன் பாதத்தின்கீழ் நிறுத்திக் கொண்டது என்று எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை.

இரண்டாவதாக பூதாகார உருவம் தன் இரண்டாவது அடியை வானத்தில் வைத்தபோது நட்சத்திர வான வெளியில் ஒன்றோடொன்று மோதி நொறுங்கி இருக்க வேண்டு மல்லவா? மேலும் பூதாகார உருவின் மாபெரும் எடையால் பூமியும் சேர்ந்தே பாதாளத்துக்கு அழுத்தப் படாமல் தப்பியது எப்படி?” என்று, பல வினாக்களை எழுப்ப இடந்தருகிற பாகவதத்தைப் படித்தால், அதை விட ஈசாப்பின் நீதிக்கதைகளே எவ்வளவோ நம்பும் படியாக இருக்கின்றன என்று புராணப் புளுகு மூட்டை கள் மீது வெடிகுண்டை வீசுகிறார், புலே.

எனவே சோதிராவ் புலே, பெரியார், மேதை அம்பேத்கர் வழியில் இதிகாசப் புராணங்களை ஆராய்ந்து, அவை அறிவுக்குப் புறம்பானவை யாக இருப்பதுடன் மட்டுமல்லாது, நம்மை இழி சாதி மக்களாகவும் பார்ப்பனரை உயர்சாதி மக்க ளாகவும் வைத்திருப்பதால், அவற்றைப் புறக்கணிப் போம். அவற்றின் பெயரிலான மதப் பண்டிகை களை-திருவிழாக்களைப் புறக்கணிப்போம். பார்ப் பன மேன்மைக்கு ஆதாரமாக உள்ள புரோகிதச் சடங்குகளையும், சமற்கிருதத்தையும், புரோகி தப் பார்ப்பானையும் புறக்கணிப்போம். தமிழ் மொழி சார்ந்த, தமிழர்க்கான வாழ்வியலை - பண்பாட்டை உயர்த்திப் பிடிப்போம். வாருங்கள்.